Saturday, December 31, 2011

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.. LET ME SPELL CHECK THAT. இப்போதைக்கு WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR

Good bye 2011


இரண்டாயிரத்து பதினொன்றின் இறுதி இரவில் இல்லம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 2011ன் இரவென்று சொல்லி விட முடியாது. நள்ளிரவு என்று சொல்லிக் கொண்டிரும்போதே 2012 பிறந்து விடும் நிறைய நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு. பேருந்தின் இரண்டாவது இருக்கையில் பயணம் என்பதை விட, அமர இருக்கை கிடைத்ததே பெருமகிழ்ச்சி. சன்னலுக்கு வெளியே கடக்கும் இரவு தெளித்த வாசல்களில் நேற்று பெய்த அடை மழையின் மிச்சங்கள். ஒற்றை குண்டு பல்பு எரிய அடைத்த வீடுகளுக்குள் உறங்கப் போய் விட்ட இந்தக் குடும்பங்களுக்கும் நாளை புத்தாண்டு தான். வயது வித்தியாசமின்றி டாஸ்மாக் வாசலில் கூடிக் குதூகலித்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கும் நாளை புத்தாண்டுதான். என்ன! நாளைய விடியலில் அவர்கள் நாற்று நட,, கட்டிடம் கட்ட, சாலை பராமரிக்க, சுத்தம் செய்ய என வேலைக்குப் போவார்கள். இவர்கள் கொண்டாட்டத்தின் அயர்வில் உறங்கிக கொண்டிருப்பார்கள். புத்தாண்டு விடிந்துதான் இருக்கும். மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்களைப் பார்த்து உனக்கு ஏன் இத்தனை கோபம் என்பீர்கள். கோபம் ஒன்றுமில்லை. குடி போதையில் அங்கே விபத்து, இங்கே பிரச்சனை என்று கேட்காமல் இருந்தால் சரிதான்.

2011 WAS A TOUGH YEAR என்று சொல்லிப் புலம்பியதுண்டுதான். ஆனால் 2011 தான் என் மேலாண்மைத் திறனை எனக்கு உணர்த்தியது. கடினமான சந்தர்ப்பங்களைச் சமயோசிதமாக சமாளிக்கும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொடுத்தது. தனித்து விடப் பட்டாலும் தழல் போல் போராடும் சக்தியைக் கற்றுக் கொடுத்தது. தினமும் தாமதமாகத் தான் அறை(அ)) வீடு திரும்ப வேண்டும் என்றாலும் சலித்துக் கொள்ளாமல்  அலுவலகம் செல்லும் பொறுமையைக் கற்றுக் கொடுத்தது. பெரியப்பாவின் மறைவு, சில முள் மணிகள், நிறையப் போராட்டம் எனக் கடந்தாலும் அறிவும், சமூகத்தில் மரியாதையும் உயர்ந்தது,,,அழகான புதிய நட்புக்களின் வரவும், எல்லாவற்றுக்கும் மேல் என் கல்லூரி நண்பர்களுடன் மீண்டும் இணைந்தது என்று 2011ன் கொடை ஏராளம்.
கண்ணாடியில் எழுத்து, புகைப்படங்கள் எனப் பதிவு சதமடித்தது சிறப்பு.. மாற்றங்கள் வளர்ச்சிக்கான மாற்றங்கள் என எடுத்துக் கொள்கிறேன்.
2011த்தைச் சிறப்பாக்கிய சுற்றத்திற்கும், நட்பிற்கும், சக பணியாளர்களுக்கும்,, வாடிக்கையாளர்களுக்கும், அப்பா, அம்மா, அண்ணா, தம்பி அனைவருக்கும் நன்றி. இன்று பிறந்த நாள் கொண்டாடும்  அம்மாவிற்கு .ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

BYE BYE 2011.
WELCOME 2012.
HAPPY NEW YEAR…………………………………… LOVE ALWAYS KANCHANA…
Happy Birthday Ma. Love you so much for being such a wonderful Mom, Succesfull Administrator n a Complete Woman. After all I'm what I'm because of You, Appa n our family. Happy Birthday once again maa. Many Happy Returns of the day. Your daughter always Kanchana...

Friday, December 30, 2011

எழுதிக் கொண்டே உறங்கி விட்டேன்…., பண்பலையில் சுந்தரி கண்ணாலொரு சேதி எழுப்பியது. தூங்கப் போகிறேன். TIME TO SAY GOOOOOOD NIGHT..

இன்னும் தொடர்கிறது
இரவெல்லாம் பெய்த
புயல் மழை.
காற்று,
மழை மற்றும்
காலைச் சாரலுடன்
நான் காஞ்சனா…
GOOD BYE 2O11.
GODD DAY 30.12.2011

Wednesday, December 28, 2011

28.12.2005... Kanchana's entry into No.1, Rajaji Salai, Chennai for the First Time as employee. Six years over. Happy joining Anniversary Kanchana. Indian Bank has definitely groomed me well during all these Years. The Respect, Responsibility, Faith, I enjoy.. Thank you Indiian Bank.

Tuesday, December 27, 2011


கோலம் போட
வாசல் உள்ளது.
என்
கைகளும்......





Monday, December 26, 2011

MERRY CHRISTMAS


இன்று கிருஸ்துமஸ். தேவ மைந்தனின் பிறந்த நாள். பாவிகளையும் இரட்சிக்க வந்த பரமன் மண் மீது ஜனித்த நாள். தன்னை சிலுவையில் அறையக் காத்திருக்கும் உலகத்தைக் காக்க அன்பைச் சுமந்து வந்த நல் மேய்ப்பன் மனித வடிவெடுத்த நன்னாள்.
கிருஸ்துமஸ் தினம் என் பள்ளிக் காலத்தின் நினைவுப் புதையலில் நிச்சயம் தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்து வைத்துள்ளது. SUPPOSE CHRISTMAS, TABLEAU, XMAS TREE, STARS, SANTA CLAUS, SURPRISE GIFTS, CHOCOLATES, மந்திரக்கோல்   இவற்றுடன் குழந்தை இயேசு பிறந்த நற்செய்தியை ஒரு குழந்தை தேவதை வருடம்தோறும் சொன்னதுண்டு. சொன்ன குழந்தை நான் (நான் நான் நானேதான்). தேவதையின் வெண்ணிற ஆடை எப்பொழுதோ யாரிடமோ போய் விட்டது. சொன்ன தேவதை நிழற்படத்திலும் நிஜத்திலும் இன்னும் இருக்கிறாள் அப்படியே அந்த கிருஸ்துமஸ் நினைவுகளைப் பொக்கிக்ஷமாகச் சுமந்து கொண்டு. 
பிறப்பால் இந்துவாக இருப்பினும் சிறு வயது முதலே எல்லா மதங்களையும், எல்லா தெய்வங்களையும் எல்லா கோயில்களையும் ஒன்றாக மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறார் என் தந்தை. பிதா, சுதன், பரிசுத்த ஆவியெனக் கூறும் கிருத்துவ சகோதரர்களும், மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் கூறும் இந்து சகோதரர்களும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை எனக் கூறும் அவ்வைத் தமிழும் குறிப்பிடும் என் அப்பாவுடன் கிட்டத்தட்ட எல்லா மத ஆலயங்களையும் சிறு வயது முதலே சுற்றும் வாய்ப்பு எனக்கும் என் சகோதரர்களுக்கும் கிடைத்தது. கீதையும், பைபிளும், குரானும் எப்பொழுதும் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரிப்பதாலோ என்னவோ, பதினான்கு ஆண்டுகளாக நான் படித்த பள்ளியை நடத்தியது ஒரு கிருத்துவ நிறுவனம் என்றாலும் இயேசுவும் முருகனும் கண்ணனும் எனக்கு ஒன்றாகத்தான் தெரிந்தார்கள்.
டிசம்பர் கிருஸ்துவுக்கென்றால், மார்கழி கிருக்ஷ்ணனுக்கு. அதிகாலையின் பஜனைப் பாடல்களும், நள்ளிரவின் கிருஸ்துமஸ் கேரல்ஸ் எனும் நாம சங்கீர்த்தனங்களும் கேளாமல் விடிந்ததுண்டோ எந்த டிசம்பர்/மார்கழி நாட்களும்? அதனால் தானோ என்னவோ என் பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் மதமாற்றம் என்ற மாயையை வெகு சுலபமாகக் கடக்க முடிந்தது. இந்தத் தெளிவை உருவாக்கியதில் பெரும் பங்கு என் பள்ளிக் கால MOTHERS AND SISTERS ஐயே சேரும். SR.ஜோதி.! தலைமை ஆசிரியராகவும், நல் ஆசானாகவும், நல்ல சகோதரியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும், இருள் விலக்கிய ஒளி விளக்காகவும், ஒழுக்கத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் தானே நல் எடுத்துக்காட்டாகவும் இருந்து எங்களை நாங்களாக்கிய SR.JOTHI. MY SINCERE RESPECTS  FOR YOU SISTER. ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் இன்னும் நான் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

பகிர்ந்து கொள்வதையும், சக மனிதரை மதிப்பதையும் நேசிப்பதையும், இரை தேடுவதோடு இறையையும் தேடு என்ற மாபெரும் தத்துவத்தையும் IN THE NAME OF THE FATHER, AND OF THE SON, AND OF THE HOLY SPIRIT, நான் படித்த CHRISTIAN SCHOOLS அன்று சொல்லிக் கொடுத்தன. அதை நான் இன்றும் பின்பற்றுகிறேன்.

இன்றும் நான் நம்பும் இன்னுமொரு SENTIMENT. அன்றைய தினத்திற்கான தேவ வாக்கியமாக, அசரீரியாக வழியில் தென்படும் சர்ச் சுவர் வசனங்கள். என் எல்லா சோதனைக் காலங்களிலும், குழப்பமான சூழ்நிலைகளிலும் சொல்லி வைத்தது போல் ஏதோ ஓரிடத்தில் தோன்றும் “பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற வாக்கியம்.

இதையெல்லாம் தந்த இயேசுபிரானின் பிறந்த நாளை குதூகலமாகக் கொண்டாடிய காலங்கள் உண்டு. ஆனால் மகிழ்ச்சியான இந்த நாளில் நீ ஏன் விபரீதமான முடிவை எடுத்தாய் அறிவொளி? எத்தனையோ அழகான கிருஸ்துமஸ்கள் வந்தாலும், என் பால்ய கால நண்பனே, உன் மறைவுக்கான அதிர்ச்சியுடன் அழுகையுடன் விடிந்த அந்த கிருஸ்துமஸ் தினத்தை மறக்க முடியாமல் தான் கழிகிறது ஒவ்வொரு டிசம்பர் 25ம். ஒரு சிறந்த நிர்வாகியாகவும் கவிஞராகவும் இருந்த உன் தந்தை இப்பொழுதும் வீட்டிற்கு வருகிறார் என் தந்தையின் நண்பராக மட்டுமல்ல, என் நண்பனின் தந்தையாகவும். தற்கொலை எதற்கும் முடிவல்ல என்று ஆழமாக எனக்கு உணர்த்தியது நீ தான். அதை நான் எப்பொழுதும் எல்லாரிடத்திலும் சொல்லி வருகிறேன். முடிந்த வாழ்க்கையை திருத்தி எழுத முடியாது. நம்மை நாம் திருத்திக் கொள்ளலாம், நாம் மற்றவர்களையும் திருத்தலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை அந்த கிருஸ்துமஸ்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தது. ஆண்டுகள் ஓடிவிட்டன. சோகங்களும் மெதுமெதுவாக.

எனக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்கள் ஒளிர நான் நடந்து போகும் வழி எங்கும் அன்பின் வெளிச்சம் விரிகிறது அனைவரின் வாழ்விலும் குழந்தை இயேசுவின் பிறப்பு புதிய வெளிச்சத்தையும், புன்னகையையும் நிச்சயம் விதைக்கும் என்ற உன்னத செய்தியோடு. எழுத்தாளர் திரு. பவா செல்லதுரை அவர்களின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதையின் இறுதியில் வருவதுபோல் தாயும் சேயும் நலமும் பூரண நலம் என்ற மகிழ்ச்சியின் செய்தியோடு.
MERRY CHRISTMAS.

Friday, December 23, 2011


பிண்டமெனும்
எலும்பொடு
சதை
நரம்புதிரமும்
அடங்கிய
உடம்பு எனும்
பிச்சைப் பாத்திரம்
ஏந்தி வந்தேன்..

Tuesday, December 20, 2011

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு உனக்கும் டிக்கெட் சொல்லிடட்டுமா என்றான் SRIDHAR. QUARTERLY CLOSING DA. NO CHANCE  என்றேன் வருத்தத்துடன். LAST TIME GOT TICKETS AT LAKSHMAN SHRUTHI. WE ENJOYED THE SHOW IN 2006 AT CHENNAI TILL MIDNIGHT. A FANTASTIC MUSICAL NIGHT. A SECOND CHANCE. நன்றாகத்தான் இருந்திருக்கும். நன்றாகத்தான் இருந்திருக்கும்.,……….

Poraali


போராளி (முழுமையாக) மற்றும் ராமன் தேடிய சீதை (கொஞ்சம் கொஞ்சம்) மற்றும் நீ வருவாய் என (முதல் 2 பாடல்கள் + வங்கி மேலாளர் PORTION) திரைப் படங்களுடன் ஞாயிறு மாலை கழிந்தது. மனித மனங்களையும் உறவுகளையும் வெவ்வேறு கோணங்களில் கையாண்ட திரைக்கதைகள். பிடித்திருந்ததா தெரியவில்லை. ரசிக்கும் படி இருந்தன. வெகு நாட்கள் கழித்து அமர்ந்து பார்த்த புதிய திரைப்படம் போராளி. GOOD SHOT SAMUTHRAKANI N SASI. BUT…SHOULD HAVE CUT DOWN GORI BLOODY SECOND HALF.

Wednesday, December 14, 2011

வேண்டுவன


FEAR NOT




அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக வெண்ணிநம்மை தூறுசெய்த போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே

நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear. 
Though the entire world stands united against me, 
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear. 
Though I’m belittled and vilified,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear. 
Though I’m reduced to live by begging for food, 
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear. 
Though I’ve lost everything that I yearned for, 
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.  
Even if my own friends try to poison me,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear. 
Even when confronted by an aggressor’s uniformed armies,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear. 
Even if the sky falls on my head,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.

நினைவு கூர்வோம். 11.12.1882


என் மானசீக குருவுக்கு மரியாதை மற்றும் வணக்கங்கள். நினைவு கூர்வோம். 11.12.1882, ஒரு மகாகவியின் பிறந்த நாள்.


Tuesday, December 13, 2011


மனசெல்லாம்
மார்கழிதான்!
இரவெல்லாம்
கார்த்திகைதான்!!!!!!!!!!!!

Monday, December 12, 2011

latest Deepam photo from Adi annamalai




கனாக்காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாத கோலம் போடுமோ!!

TO D M SARON

என் வலைப் பதிவும் தங்கள் வலைப்பதிவும் ஒரே ரசனையில் ஒரு வெண்மலரைப் பின்னணியாகக் கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது பவா சார். நான் காஞ்சனா. என் தம்பி DR.SRIDHARஐ தாங்கள் அறிவீர்கள். நாங்கள் இருவருமே தங்கள் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதையின் மிகப் பெரிய ரசிகர்கள். நான் நடந்து வரும் வழி எங்கிலும் நட்சத்திரங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றன. இந்த கிருஸ்துமஸ்ஸிலும் குழந்தை ஏசுவின் வருகையை, தாயும் சேயும் நலம் என்ற நற்செய்தியை கேட்க ஆவலாக உள்ளோம். தங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன் நான் காஞ்சனா.

Friday, December 9, 2011


சொல்வதற்கேதும் இல்லை!
நீ……………
சொல்லாததும்
சொல்லே!!!!!!!!!!!!

Thursday, December 8, 2011

அடிமுடி காணாத அண்ணாமலையாருக்கு அரோகரா!!!!

ஈசன் அடி போற்றி!


எந்தை அடி போற்றி! 
 நேசன் அடி போற்றி!
 சிவன் சேவடி போற்றி!
 நேயத்தே நின்ற

 நிமலன் அடி போற்றி!!!

அடிமுடி காணாத அண்ணாமலையாருக்கு அரோகரா!!!!

Wednesday, December 7, 2011



நல்ல காலம் பொறக்குது!

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது!!!



மூன்று தமிழும் ஓரிடம் என்று
பாட வேண்டும் காவியச் சிந்து!
அந்த நாள் நினைவுகள்
எந்த நாளும் மாறாது!!!

Friday, December 2, 2011

நாளை சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம். எங்கிருந்தோ வந்தான் பாரதியார் பாடலை எப்பொழுதும் எனக்கு நினைவுறுத்தும்  என் கிளையின் SINCERE ஊழியர் மூர்த்திக்கு என் நன்றிகளை இந்த நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Thursday, December 1, 2011

WHY THIS கொலை வெறி DHANUSH AND ANIRUDH?


WHY THIS கொலை வெறி DHANUSH AND ANIRUDH? வாழ்க ராணி; வாழ்க ராஜாங்கம் என இளையராஜா, அடுத்த வாரிசில் அழகாக மெட்டமைத்த வாழ்த்துப் பாடலை, இப்படிக் கூட கொலை செய்ய உங்களால் மட்டுமே முடியும் MR ANIRUDH. அது வாழ்த்து; இது வசை. SUCH A BRILLIANT SCHOLARLY  LYRICக்கு பெருமையடித்துக் கொள்ள உங்களால் மட்டுமே முடியும் MR.DHANUSH. HANDல் GLASS. GLASSல் SCOTCHஆ. தண்ணியடிக்கிறதுக்கு தத்துவம் பேசாதீங்க தனுக்ஷ். TASMAC வாசலில் தமிழ்நாட்டின் தாலிகள் குவிந்து கிடப்பது உங்கள் கண்களுக்கு என்றும் தெரிந்ததே இல்லையா? எல்லோரும் நல்லாத்தானய்யா இருந்தீங்க? 14-15 வயசிலேயே தண்ணி, தம், ஈவ் டீசிங், எத்தனை வயசு வாழணும்னு ஆசைடா உங்களுக்கெல்லாம்? போதாததற்கு நீங்க பார்க்கிற பெண் உங்களைப் பார்க்கவில்லை என்று போதை, புலம்பல் வேறு? பத்தாவதில் நான்கு பாடங்களை ஆறு முறை எழுதி பாஸ் ஆகிவிட்டு, பாலிடெக்னிக் போகும் பையன், அவன் படிக்கும் பாலிடெக்னிக் வருவதற்குள், பேருந்தே அதிர பத்து முறை இதே பாடலை தன் செல்போனில் பாட விடுகிறான்.

இந்த உலக மகா பாடலுக்கு விளம்பரம் செய்ய எல்லா சேனலிலும் ஒரு TEAM. RING TONE, CELL PHONE நேயர் விருப்பம் எனத் திரும்பத் திரும்பப் போட்டு TENSION பண்ண ஒரு கூட்டம். பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வருகிற கொலை வெறிக்கு,,,
The final recovery figure is 42.0 lakhs, still the topper. Worth Celebrating but, A Big Sigh fills in the space. Don't know why! Cheer up Kanchana, There's always a Better Tomorrow. A Better Better Tomorrow. Good days Ahead Yaar. Good night.

Wednesday, November 30, 2011

Anna, I have something to share with you. I don't want to make it public in my blog or facebook. Check your mail, if you feel so. come back to me, if you feel its worthy. use e kalappai latest version to read tamil lines.I'm not feeling well. Going to sleep. Good night, Kanchana always.
NOT FEELING WELL. GOING TO SLEEP. GOOD NIGHT.

என்ன பார்க்கிறீங்க?
எங்களுக்குள்ள
NO GENERATION GAP….!



Saturday, November 26, 2011

Cheers!

Topped the List in Yesterday's Recovery Camp with Cash Recovery of Rs.29.20 lakhs.Accolades from Zonal Office. Still DGM,HO n ZM has given the Challenge to achieve 20 lakhs in other two days. Thanks to All the Customers who responded to the Campaign, inspite of the incessant Rainfall. Result of the two weeks hard work. I wish to free the Famers atleast from the clutches of the Non Performing Asset Concept n To get away from the Alarming Penal Interest Charged. I can't change or stop RBI's stringent guidelines on Loans tightening n pressure rising day by day. But I can atleast save the farmers from mounting NPAs. Giving loans afresh as  much as possible with limited manpower with me. To handle with seniors, My God, Its an art to be learnt by experiencing only. Any way, Made myself Comfortable by doing things myself. My Branch is My Baby. I have take care n nurse it. Some times even ailments like Stress, Tension, Head ache, Back Pain due to continuous working without rest take a Back Seat, when greeted by People for your achievements. I have to maintain the respects and TRUST, my Customers have on me. No Pain; No Gain. Give yourself a Pat Kanchana.Gear up for the next Challenge. Cheer up.

Thursday, November 24, 2011

வலியுடனும் வளியுடனும்
கொட்டுகிறது மழை
எனக்குள்ளும் வெளியிலும்….

Wednesday, November 23, 2011


நான் உனை நீங்க மாட்டேன்!
நீங்கினால் தூங்க மாட்டேன்!
சுந்தரி கண்ணால் ஒரு சேதி............ கேட்டவாறு தூங்கப் போகிறேன். GOOD NIGHT

கையைச் சுடும் என்றாலும்
தீயைத் தொடும் பிள்ளை போல்................

Tuesday, November 22, 2011


LISTENING TO “CHAND CHUPA BAADAL ME” FROM “HUM DIL DE CHUKE SANAM”
Just Love It...

தேவதைகளின் தேசம்!

அழகு அழகு தேவதை! பாடல் செவியில் வழிந்து கொண்டிருக்கிறது. நினைத்துக் கொள்கிறேன், தேவதைகள் கற்பனைக் கதைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் வாழ்கிறார்கள் ஒவ்வொரு தாயின் உருவிலும் என.

 பள்ளிக்காலங்களில் ஒவ்வொரு கிருஸ்துமஸ் விழாவின் போதும், குழந்தை இயேசுவின் பிறப்பைப் பற்றி மேரி மாதாவிற்குத் தெரிவிக்கும் தேவதையாக வலம் வந்த என் வாழ்விலும் தேவதைகள் வந்திருக்கிறார்கள்; வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்கள், என் வியப்பைப் புறந்தள்ளி சகஜமாக சாதாரண பெண்மணிகளாக பேசிப் பழகி இருக்கிறார்கள், பேசாமல் கடந்து போயிருக்கிறார்கள், உடன் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

எனக்குக் கருத்து தெரிந்து உலகத்தின் மிகச் சிறந்த அழகி, நான் கேட்பதற்கு மேலாகவே அன்பை அள்ளி அள்ளி வழங்கும் என் அம்மா. அதிலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் தன் தோழியுடன் அம்மா நின்று கொண்டிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அம்மா அத்தனை அழகு. INNOCENT BEAUTY. என் இரண்டரை வயது புகைப்படத்தில் இன்னும் கொள்ளை அழகு அம்மா. எல்லா மகள்களைப் போலும் சிறுவயதில் நான் எப்பொழுதும் அப்பா செல்லம். இப்பொழுதும்தான். மிதிவண்டியின் முன்னிருக்கை எப்பொழுதும் என்னுடையதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் மதிய நேர தக்காளி சாதம் முட்டையுடன் அம்மா தன் பாசத்தையும் சேர்த்து அனுப்பியிருந்ததை எப்பொழுதும் நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கும் தம்பிக்குமான காலை நேரக் கலவரங்களை அம்மாவின் கன்ணீரே பெரும்பாலும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு பொறுப்பான ஆசிரியர் என்பதைத் தாண்டி, சிறந்த தலைமை ஆசிரியர் என்பதைத் தாண்டி அம்மா அழகான அடக்கமான குடும்பத் தலைவியாய், ஒரு அன்பான அருமையான பெண்மணியாய், ஒரு அறிவார்ந்த அருள் பொழியும் அற்புதமான அழகு தேவதையாக இருப்பதை பெருமிதத்துடன் நான் உணர ஆரம்பித்தது நான் கல்லூரியில் சேர்ந்த பின்புதான். தனியாக என் வேலைகளை நான் செய்து கொள்ளும் தேவை வந்தபோதுதான், அம்மா எனும் தேவதையின் அருமை தெரிந்தது. I ALWAYS WANTED TO SAY THIS TO YOU MA. I LOVE YOU SO MUCH. பணி நிறைவு பெற்ற பின்னரும் இன்று வரை அயராமல் எங்களுக்காக உழைக்கும் அம்மா ஒரு அன்பான தேவதை என்பதில் ஐயமேதும் இல்லை.

வெளி உலகிலும் தேவதைகள் என்னைக் கடந்து போயிருக்கிறார்கள். நான் பதினோராம் வகுப்பு பயின்ற நேரம் என நினைவு. பள்ளி முடிந்து திரும்பிய ஒரு பேருந்துப் பயணத்தில் பார்த்த அந்தப் பெண்ணைப் போன்று ஒரு அழகியை நான் இது நாள் வரையில் காணவில்லை. ஒரு கல் குவாரியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் ஒரு எளிய நரிக்குறவர் குடும்பத்துப் பெண். ஒரு சிறிய மூக்குத்தி, கவரிங் கம்மல், வெளிரிய தாவணி, கலைந்த தலை, களைத்த முகம், எல்லாம் தாண்டி ஒளி வீசும் கண்களுடன் உடன் பயணித்த அந்த தேவதை போன்ற பெண்ணைப் பின்னொரு நாள் பார்த்ததாக ஞாபகமே இல்லை. அவளைப் போன்றொரு பெண்ணையும் பிறகு பார்க்கவே இல்லை. தேவதைகள் அழுக்கு தாவணியும் கட்டியிருப்பார்கள் என உணர்ந்த நாள் அது.

கல்லூரியில் UGயின் போதும் PGயின் போதும் இருவேறு தேவதைகளைச் சந்தித்திருக்கிறேன். UGயில் மாருதியின் ஓவியம் உயிரோடு வந்தது போல் இருந்த ஒரு சீனியர் PG மாணவி. பெயர் தெரியாத அவரைப் பார்ப்பதற்காகவே அவர் துறை பக்கம் செல்வதுண்டு. உன் ஆள் வந்தாச்சு. YOU ARE CRAZY YA என்பாள் பானு. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனப் பித்துப் பிடிக்க வைத்த முகம் அது. கண்கள், மூக்கு, வாய், நெற்றி என ஒரு ஓவியமாகத்தான் தோற்றமளித்தார் அந்த அழகு தேவதை அக்கா. பின்பு ஒரு துணைப் பேராசிரியரை மணமுடித்ததாகக் கேள்வி. ஆனால் உண்மையா எனத் தெரியவில்லை.

ஆனாலும் பித்தம் தலைக்கேறி கடிதம் எழுதியது லாவன்யா SIS இடம்தான். எளிய, சாதாரணமான ஆனால் அத்தனை அழகான ஒரு பெண். என் இளங்கலை இறுதி ஆண்டில், PG படித்துக் கொண்டிருந்த லாவன்யா அக்காவிற்கு நான் எழுதிய கடிதம் எங்கள் நண்பர்களிடையே வெகு பிரசித்தம். HOW YOU COULD BE SO BEAUTIFUL? YOU’RE SO GORGEOUS SO THAT I COULDN’T TALK TO YOU STRAIGHT. N ITS SO PAINFUL. I ALWAYS WANTED TO SAY THIS. YOU ARE REALLLLLY REALLLY BEAUTIFUL LIKE MY MOM. WILL YOU BE MY FRIEND AND TALK TO ME. என எழுதி லாவன்யா அக்காவிற்கு அனுப்பியே விட்டேன். யார்யா அந்தப் பொண்ணு? கலை மூலம் அழைப்பு வந்தது. சிறு கூச்சம், அசட்டுத்தனம், நண்பர்களின் கேலி என நடந்த அறிமுகப் படலத்தின் பின் அந்த அழகு தேவதையின் நட்பு வட்டத்தில் நானும் ஐக்கியமானேன். லாவன்யா அக்காவிற்கு அம்மா இல்லை, அப்பா மற்றும் தம்பிக்கு SISதான் அம்மாவாக இருப்பதை அறிந்து அன்றிரவு உண்மையாகவே அழுதேன். அம்மாவின் அழகு லாவன்யா அக்காவிடம் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். PG யிலும் தொடர்ந்தது எங்கள் நட்பு. என் SENIOR RESEARCH FELLOWSHIPன் போது லாவன்யா அக்காவைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பயங்கர சாலை விபத்தில் சிக்கி, மிக்க சிரமத்தின் பின்னரே மருத்துவர்களால் பிழைக்க வைக்கப்பட்ட லாவன்யா SISSY. உடைந்த கால் கூடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். வலியுடன் விந்தி நடந்த போது நான் அழத்தொடங்கி இருந்தேன் அந்த அழகு தேவதையைப் பார்த்தவாறு. அவரைப் போன்றொரு அழகான பெண்ணை நேற்று முன் தினம் அலுவலகம் செல்லும் பேருந்தில் பார்க்க நேர்ந்தது. தெரிந்த ஆசிரியர்களில் அவர் தெரியாத அறிமுகம். இறங்குகையில் கவனித்தேன், அவர் விந்தி நடப்பதை. தேவதைகளுக்கு இறக்கைதான் முக்கியமே தவிர கால்கள் அல்ல. அவர்கள் அறிவென்றும் அன்பென்றும் தங்கள் இறக்கைகளை விரிக்கத் தவறுவதே இல்லை.

MATHS MISS RAJESWARI, BIOTECH MADAM PARVATHI, PARAMJEET KAUR என தேவதைகள் எப்பொழுதும் என்னுடன் பயணித்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர்த்து, வெள்ளித்திரையில் திவ்ய பாரதி என்றொரு நடிகை என்னை வெகுவாகக் கவர்ந்தார். நிலாப் பெண்ணே என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகவே, அவர் பருவமடையும் வரை இயக்குனர் காத்திருந்ததாகக் கேள்வி. ஆனால் அந்தத் தாரகை வெகு சீக்கிரம் மின்னி மறைந்து விட்டார். ப்ரியமானவளே! பாரதி கண்ணம்மா! எனத் தொடங்கி அவருக்காக எழுதிய கண்ணீர் கவிதை ஒன்று இப்பொழுதும் என் பள்ளி கால கவிதைப் புத்தகத்தில்.

அதற்குப்பின் UNDOUBTEDLY AISHWARYA RAI. அன்பே! அன்பே! கொல்லாதே! பாடல் அவருக்கே அர்ப்பணம்.

திரைப்படங்களில் சிம்ரன் மற்றும் காஜோல் சற்று வித்தியாசமாக எதிர்பாராத பொழுதுகளில் ஈர்த்தவர்கள். DDLJ முதல் KKHH வரை காஜோலின் கண்கள் சாமானிய தேவதைகளின் கதைகளுக்கு அழகு சேர்த்துள்ளன.

சிம்ரன்-கனவுக் கன்னி எனக் கவர்ச்சிப் பதுமையாகத் தள்ளி விட முடியாத அழகான பெண். VIP படத்தில் “மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே” பாடல் முடியும் முன் I LOVE YOU எனச் சொல்கையில் உயிரை ஊடுருவும் சிம்ரனின் கண்களைப் பார்ப்பதற்காகவே நிறைய நாள் நான் காத்திருந்ததுண்டு; பார்த்தாலே பரவசம் படத்தில் “முதலியார்! உன் பொண்ணோட நிலைமையைப் பார்த்தியா?” எனப் பொருமுகையில் சிம்ரன்; 12B CLIMAXல் மருத்துவமனையில் நிச்சலனமாக நிற்கும் சிம்ரன்; வாரணம் ஆயிரத்தில் “ சூர்யா! அம்மாகிட்ட வந்திடுடா!” எனும் சிம்ரன் என அழகிற்கு அழகாக அர்த்தம் சொன்ன சிம்ரன், கதாநாயகிகளுக்கும் கதையில் வேலையுள்ளது என அசர வைத்த சிம்ரன் சமீப கால சினிமாவில் ஒரு ஆச்சர்ய அறிமுகமே. BUT ONCE A SIMPLY BEAUTIFUL SIMRAN. இப்பொழுது ஜாக்பாட் என்று கூத்தடிப்பது நிஜமாகவே UNBEARABLE.

இதை எழுதிக் கொண்டிருக்கையில் யோசிக்கிறேன். பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ என எழுதியது பொய்யாகவும் இருக்கக் கூடும். அழகான பெண்களை அவர்களாகவே ஆராதிக்கப் பெண்கள் தயங்குவதில்லை என்பது மெய்யாகவும் இருக்கக் கூடும். ஏனெனில் தேவதைகளின் தேசம் அழகானது மட்டுமல்ல ஆச்சர்யமானதும் கூட.

Monday, November 21, 2011

அண்ணாமலையார் வாகனம்-திருவண்ணாமலையில் இருந்தே!






 என்ன ஒரு ஜீவன், அந்தக் கண்களில்?



நகரும் நதிகளைத்
தொடரும் சோழிகளில்
நத்தை எது?
சிப்பி எது?
மெத்த ஒலிக்கும்
சங்குதான் எது?

May I Know?

Is there Somebody I Know in Russia, Germany n USA who visits this page?

Saturday, November 19, 2011

Just Listening to Etho Mogam from Kozhi Koovuthu in Radio City at this moment. Didn't Go Home This Week end. Recovery Camp tomorrow. Feeling solitary in the Room. Missing somebody sooooooooooooooooooooooooooo much. Need to Sleep. Unable to.!?!!!!எனக்கு இது வேண்டாமே!!!!

Thursday, November 17, 2011

யானை, இரயில் மற்றும் கமல்.



ஞாயிறு பொதிகையில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. சச்சின் டெண்டுல்கர் நூறாவது சதத்தை நழுவ விட்டார் என்ற வழக்கமான செய்தியைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தன் 57(!!)வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் என்ற வரலாற்று சிறப்பு மிக்க செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதை எல்லாம் எப்பப்பா செய்தியாக்கினீங்க?-SRIDHAR. எனது நான்காம் வகுப்பு வரை திரைப்படங்களை கிட்டத்தட்ட வெறுத்திருக்கிறேன். என் திரை விரோத விரதத்தை வெற்றிகரமாக முடித்து வைத்ததில் பெரும்பங்கு உலக நாயகனுக்கு உண்டு.
 எனக்கும் தம்பிக்கும் நடைபெற்ற உலக யுத்தங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று காலை வேளையில் பள்ளிக்குக் கிளம்புவது. யாருக்கு முதலில் குளியலறை என்பது தொடங்கி யார் அம்மாவிடம் ஊட்டிக் கொள்வது எனத் தொடர்ந்து யாருடைய சாக்ஸ் என பள்ளிக்கான பேருந்து ஏறும் வரை தொடரும் யுத்தம், மதியம் உணவுவரை தொடரும். யுத்தம் II- OBVIOUSLY யார் BEST கமலா? ரஜினியா? என்பது தான். பின்னாளில் இருவரும் இருவரின் திறமைகளையும் ஆய்வு செய்து இருவரும் அவரவர் LINEல் BEST எனத் தெளிந்தது வேறு கதை. எனினும் இப்பொழுதும் வியப்பாக இருக்கிறது, HOW CRAZY I WAS ABOUT KAMAL THEN என நினைத்துப் பார்க்கும் போது!
 புன்னகை மன்னன் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என எனக்கே தெரியவில்லை. அதிலும் ஹீரோ சேதுவை JUST LIKE THAT தூக்கிச் சாப்பிட்ட அந்த சாப்ளின் செல்லப்பா, UNDOUBTEDLY ONE OF THE BEST OF KAMAL. A BRILLIANT BLEND OF COMEDY N TRAGEDY- HATS OFF KAMAL SIR. I’M PROUD THAT I WAS CRAZY ABOUT YOU THEN.
 பதினாறு வயதினிலே(MY ALL TIME FAVOURITE; NONE TO BEAT THAT SAPPANI YET!) சலங்கை ஒலி, நிழல் நிஜமாகிறது(I HATE YOU SANJEEVI, AM I?), வாழ்வே மாயம்(எனக்கு படம் பிடிக்கலப்பா), மூன்றாம் பிறை(ESP. மூக்கின் நுனியில் அழுகையுடன் குழந்தையான தன் காதலியைத் தாலாட்டும் கண்ணே கலைமானேவுக்காக), நினைத்தாலே இனிக்கும்(WHAT A WAITING?). குருதிப் புனல்(A TOO EARLY PRODUCTION), சத்யா, குணா(ஒரு தீபாவளி ரிலீஸ் தளபதியுடன்), மகாநதி(அப்பா), செம STYLISH விக்ரம், சதி லீலாவதி (பலனிக் கண்ணு), தேவர் மகன்(மறக்க மனம் கூடுதில்லையே), அவர்கள், மைக்கேல் மதன காம ராஜன், PKS, வசூல்ராஜா (MASTER.OF MADRAS SLANG! LOVE THOSE DIALOGUE DELIVERIES ALWAYS, GREAT WORK), நாயகன், சிகப்பு ரோஜாக்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, ஹே ராம், எதையேனும் விட்டிருக்கக் கூடும், கணக்கிட முடியாது கமல் சாரின் காவியங்களை.
 முக்கியமாக அன்பே சிவம்- தன்னை “செத்துப் போ” எனச் சொல்லி சபித்து விட்டுப் போனவனின் அடியாளிடம் “பொழச்சிப் போங்க” என கம்பீரமாகக் கூறிவிட்டுப் போன நல்லா @ நல்லசிவம். BRILLIANT KAMALJI. அன்பே சிவம் படத்திற்குப் பின், சில பல KHANகளை மறந்து விட்டு, நிறைய பேர் மீசை வளர்த்தார்கள் என ஞாபகம்.
 மும்பை எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின் போதுதான், கமல் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யானைபோல், ரயில் போல் கமலும் என்றும் அதிசயம் தான். மருதநாயகமோ பொன்னியின் செல்வனோ, எதுவாயினும் ஒரு சரித்திர கதாநாயகனாகக் கமலைப் பார்ப்பதற்கு நானும் காத்திருக்கிறேன். 

Wednesday, November 16, 2011

ITS 12 MID NIGHT. GOING TO SLEEP. GOOD NIGHT BUDDY. 

Tuesday, November 15, 2011

கண்ணாடிக்காக

ஓராண்டு ஓடி விட்டது, நிழல் கண்ணாடி நிஜ உலகில் காலடி எடுத்து வைத்து. இத்தனை நாட்களும், என் எண்ணங்களை, உணர்வுகளை வர்ணம் பூசாத வானவில்லாக, வாசனைப் பூக்களாக, என் நாட்குறிப்பேட்டைப் போல் இயல்பாகத்தான் எழுதி இருக்கிறேன் என நம்புகிறேன். என் நிழலாகவும், என் மனதின் கண்ணாடியாகவும் எப்பொழுதும் உண்மையான என் உணர்வுகளாகவும் தான் இருந்திருக்கிறது கண்ணாடி. பூனாவின் ரிசர்வ் வங்கி வளாகத்தில், ஓரிரவில், நான் எழுதத் தொடங்குகையில் இருந்த மகிழ்ச்சியை, பெரும்பாலான சமயங்களில், கண்ணாடி எனக்கு வழங்கி இருக்கிறது. அதற்கும் மேல், நான் நானாக  இருந்த நொடிகளின் பிரதிபலிப்பாய், ஒரு ஆத்மார்த்தமான நண்பனாய் என் மனசாட்சியாய் இருந்திருக்கிறது கண்ணாடி எனபதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.. கண்ணாடியின் சாரம் குன்றாமல், தனியே கிளைத்து மலர்ந்திருக்கின்றன, இன்னும் இரு பதிவுகள். எப்பொழுதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இசைக்காக ஒன்று. உலகத்தை இயக்கும் விசைக்காக மற்றொன்று. ALL ABOUT THE SWEET NOTHINGS WHICH RULE EVERYTHING IN THIS WORLD; THE INVISIBLE BUT INVINCIBLE, HIGHLY INFLAMMABLE N COMBUSTIBLE BUT INEVITABLE O2, THE UNIVERSE BREATH IN TO LIVE. எது எப்படியாயினும் வேடமிடாத வெளிச்சமாக என் வலைப்பதிவு தொடரவேண்டும் என்பதே என் ஆசை, கனவு, ஆவல் எல்லாம். கனவு மெய்ப்படும். இன்னும் எழுதுவேன்,.. நான் காஞ்சனா..

இரவின் மடியில்
நிலவும் தூங்க சென்று விட்ட
நிச்சலனப் பொழுது!

இரவு விளக்கின்
மங்கிய வெளிச்சத்தில்
விழித்திருப்பதாய் தோன்றும்
சில உறங்கும் வீடுகள் தொலைவில்.

இலைகளைக் கூடத் தாலாட்டித்
தூங்க வைத்து விட்டது
என்னுடன் விழித்திருக்கும்
குளிரில் குளித்த தென்றல்.

உறங்க நினைத்து
சன்னல் சாத்துகையில்
உயிரோட்டத்துடன் தெரிகிறது-
விடியும் முன்
சமைத்து குளித்து
நாளைய பகலுக்கு
வாழ்க்கையைத் தயார் செய்யும்
நடைபாதையோரக் குடும்பங்களின்
உறங்காத உலகம்.

Monday, November 14, 2011

Back From Home. Last year at Baramathi. This year at Kanchipuram. The Night remains cool as it is. Dawn only differs. Miles away. Life is strange but beautiful. Mona, Ice, Uma, Udhay(But where're you Man! you're still 5 years old in my memories!), Padma Anna, Bhavesh Bhaiya,Srija,Paramjeet, Vyoma Mme, Shradhha, Jo,Kavi, Jo..Friends....You too made my Life special....Yes...Life is strange but beautiful.

Friday, November 11, 2011


என்னிடம் சொல்வதற்கு
எதுவுமில்லை உன்னிடம் என
எனக்கும் தெரிந்த போதிலும்,
அச்சமூட்டுகின்றது
அதிகம் கனக்கும்
உன் அமைதி.
ஆறுதலுக்காக ஒரு
அஞ்சல் அனுப்பு- உன்னை
ஆராதிக்கவேனும் கொஞ்சம்
ஆக்சிஜன் அனுப்பு.
அன்புடன்
நான்நீ…

நீ நான் நிலா..


அந்தரத்தில் தொங்க விடப்பட்ட ஒரு அலங்கார விளக்கு போலும், வட்டமாக வடிவெடுத்த ஒரு புதிய கோழி முட்டை போலும், கருப்பு வண்ணத்திரையில் யாரோ வட்டமாக துளையிட்டது போலும் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது பெளர்ணமி நிலா.கடந்து போகும் மேகங்களில் நிலா சிரிக்கிறது, முறைக்கிறது கண்ணைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகின்றது. வட்டம், பிட்ட அப்பமாகி, அரை வட்டமாகி, பிறையாகி, முழுதாய் மறைந்தோடி, பளீரென மீண்டும் பிறந்து வருகின்றது நிலா இன்னும் பிரகாசமாய், இன்னும் இன்னும் இன்னும் அழகாய். மேகங்கள் சூழ்ந்த கார்கால இரவுகளிலும், மேகமே இல்லாத கோடை இரவுகளிலும், தனக்கென ஒரு தனித்துவத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறது நிலா. நிலா கும்பல்களிலும், கண்ணாமூச்சி ஆட்டங்களிலும், குலை குலையாம் முந்திரிக்காயிலும் சிறார்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது நிலா. தனி இரவுப் பயணங்களிலும், கால் நனைக்கும் கடலலைகளிலும், கோடையின் மொட்டை மாடி இரவுகளிலும், நில்லாமல் உடன் வருகிறது நிலா, மனிதரைப் பாடேன் என நான் சபதமேற்ற ஓரிரவிலும், என் மொழி வைராக்கியம் மெல்லக் கரைந்த மற்றொரு இரவிலும் சலனமற்ற சாட்சியாக இருந்தது நிலா. கவியரங்கம் முடிந்து நாம் கதை பேசிப்போன இரவுகளிலும், மெளனத்தின் கைபற்றி நாம் காலாற நடந்த நாட்களிலும், நம் நட்பின்  பொய் விரிசலை மெய்யான உன் கண்ணீரும் பொய்யான என் கோபமுமாக ஒரு புதிய பசை கொண்டு பசிய ஒட்டிச் சென்ற அந்த பனி ஊறிய இரவுகளிலும் நட்பிற்கு நீர் பாய்ச்சி நம்மோடு இருந்தது நிலா. சிம்லாவின் சில்லென்ற இரவுகளிலும், சென்னையின் சூடான இரவுகளிலும், யமுனை சலசலத்த தாஜ் மகால் இரவுகளிலும், கங்கை ஆர்ப்பரித்த ஹரித்வார் இரவுகளிலும், சேர்ந்தல்லவா  பயணித்தது இந்த நிலா. நிலா நினைவுகள் இன்று பெளர்ணமியாக உருவெடுக்கக் காரணம் வெண்ணிலா, என் நிலா, என்னை நானாகவே அப்படியே ஏற்றுக் கொண்ட என் உயிர்த் தோழி வெண்ணிலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூற விழித்துக் கொண்டிருக்கும் இந்த 11.11.11லும் என்னுடன் விழித்துக் கொண்டிருக்கிறது என்னுடன் பிறந்து, வளர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் மாறாத அதே நிலா. HAPPY BIRTHDAY ICE. நிலவும் நானும் பாடிக் கொண்டிருக்கும் உனக்கான பிறந்த நாள் வாழ்த்துப் பாடல், உன் காதுகளை எட்டுகிறதோ இல்லையோ? உன் கனவுகளையேனும் தாலாட்டட்டும். THANK YOU FOR BEING MY FRIEND N FOR ACCEPTING ME AS I AM. GOD BE WITH YOU. MANY HAPPY RETURNS. GOOD NIGHT/MORNING.

Wednesday, November 9, 2011

Awaiting


Sachin again missed the ton. Don’t know how n why, but it always happens. India wins but Sachin misses his century. Its long since I’d seen the celebrations of Sachin’s hundred n India’s win together. How long to wait da? Awaiting to write the next Congratulations message on your Blow up. Do it soon.

Friday, November 4, 2011


செருக்கிழந்த சிங்கமாகிறேன்
அருவமாய் நீ என்னுள்
அசைந்து நகர்கையில்!
தவிர்ப்புக்கும் தவிப்புக்கும்
நடுவில் நடக்கும்
தர்க்கத்தின் உச்சத்தில்
தனித்தனியாகி விடுகிறது
அறிவும் மனமும்.
உறக்கமும் விழிப்புமற்ற ஓர்
உன்னத தருணத்தில்
உரக்க எழுகிறது
உள்ளுக்குள் ஒரு கேள்வி!
முதிராத இரவுகளில்
முடியாத புதினமாய்
கரையும் கனவுகளின்
கடைசி அத்தியாயத்தில்,
உன் கைகள்
ஏந்தி இருப்பது
எனக்கான
காத்திருப்பையா?
இல்லை….
கதவடைப்பையா?

Tuesday, November 1, 2011

Sorry Raja Sir!

Very very Sorry Raja Sir. We know, Your loss is irrecoverable.இளையராஜா சார்! இன்று எங்கள் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய எங்கள் ஆயாவின் நினைவு நாள். பாட்டி என்பது சற்று அன்னியமாக இருக்கிறது.105 வயதிலும் தளராமல் 113 வயது கணவருக்கு- எங்கள் தாத்தாவுக்குத்தான்-, அன்பை மட்டுமே பரிமாறிய எங்கள் ஆயாவின் நினைவு நாளில், இனி ஜீவா அம்மாவையும் நினைத்துக் கொள்வோம். தாங்கள் தங்கள் மனைவியை எவ்வளவு நேசித்திருக்கிறீர்கள் என்பதற்கும், ஜீவா அம்மா அவர்கள் தங்களை எவ்வளவு பத்திரமாக பொக்கிக்ஷம் போல் போற்றி வந்திருக்கிறார் என்பதற்கும் தங்கள் இசையே சாட்சி. அதிலும் “ ஒரு ஜீவன் அழைத்தது; என் ஜீவன் பாடுது” என ஜீவன் எனத் தொடங்கும் பாடல்களில் இருந்த ஜீவனுக்கு அவர்களும் காரணம் என யாம் அறிவோம். தங்களுக்கு ஆறுதல் கூறும் நிலையில் நாங்கள் இல்லையெனினும், இசையோடு கலந்து விட்ட ஜீவா அம்மையாருக்கு தங்கள் பாடல்களே சமர்ப்பணம்.
(1)ஆராரிரோ பாடியதாரோ! தூங்கிப் போனதாரோ!
(2) கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது? தண்ணீரில் நிற்கும் போதே வியர்க்கின்றது!
(3) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நான் இருந்து வாடுகின்றேன்.
இசையே அருமருந்தாகும், காத்திருக்கிறோம் தங்கள் கண்ணீரும் காயங்களும் ஆறுவதற்காக.

Monday, October 31, 2011

Feverish. No Probs. I'm fine n alright. N.....................I'm Alright. Thank you God for giving me the strength to handle things strong n smooth n to support my people cross the turbulence smoothly  to some extent. Its Review meeting day after tomorrow. Have to Get ready. Going to Sleep listening to Andhi Mazhai Pozhigirathu......Love you SPB Sir, for the Great Song. Salutes Raja Sir, for the Great Composition. Good Night People.

இதுவும்
கடந்து
போகும்….

Saturday, October 29, 2011

God! Give me Strength  Physically n mentally. Be with me. I Need You Now.


என்ன குறையோ?
என்ன நிறையோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன தவறோ?
என்ன சரியோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன வினையோ?
என்ன விடையோ?
அதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.

நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்.
வலியும் வரலாம்;
வாட்டம் வரலாம்;
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்!
நேர் கோடு
வட்டம் ஆகலாம்;
நிழல் கூட
விட்டுப் போகலாம்;
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்.
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்;
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்.
அந்த கண்ணனை,
அழகு மன்னனை,
தினம் பாடி வா மனமே!

உண்டு எனலாம்;
இல்லை எனலாம்;
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்!
இணைந்து வரலாம்;
பிரிந்தும் தரலாம்;
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்!
பனி மூட்டம்
மலையை மூடலாம்;
வழி கேட்டுப்
பறவை வாடலாம்;
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்.
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை நனைப்பான்.
அந்த கண்ணனை,
கனிவு மன்னனை,
தினம் பாடி வா மனமே!

Thursday, October 27, 2011

கண்ணே! நவமணியே! உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ? எப்பொழுது கேட்டாலும் கண்களைக் கசிய வைக்கும் ஒரு பாடல். பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையில் சிந்தனை சிலநேரம் சிதறிப் போவதுண்டு. எனினும் எனினும் ஒவ்வொரு முறையும் நான் தவிர்க்க நினைக்கும் அந்த LAST STANZA கடைசி சரணம் வருகையில் மட்டும் மணம் ALERT ஆகி கண்களும் நெஞ்சமும் கணக்க என்னை ஈர்த்து விடுவதை தவிர்க்கவே முடியாமல் போவது எவ்வாறு என்பது மட்டும் MILLION DOLLAR QUESTION. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு..

Tuesday, October 25, 2011

HAPPY DEEPAVALI


இன்றே தொடங்கிவிட்டது தீபாவளி. சுற்றிலும் பட்டாசு சத்தம். மழை விடிவதற்காய் கைகளில் பட்டாசுகளுடன் காத்திருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன, யார் முதலில் வெளியில் சென்று பட்டாசு வெடிப்பது என்ற போட்டியில், தம்பி கையில் இருந்த கம்பி மத்தாப்பு என் கையை பதம் பார்த்தது அந்த சிறு வயதில் வலித்தபோதும், என் கைகளில் மாறாத வடு, மனதிற்குள் மழலைக் காலத்தின் மகிழ்ச்சித் தருணங்களை நூறு மடங்கு மகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்துகிறது. THANKS DA SRIDHAR FOR BEING A GREAT BROTHER. தாத்தா எண்ணெய் தேய்த்து விட்டது, அம்மா சீயக்காய் தேய்த்து விட்டதும், அப்பா கை பிடித்து பட்டாசு வெடித்ததும், அண்ணன் தம்பியுடன் அமர்ந்து தீபாவளி விருந்துண்டதும், அக்கம்பக்கத்தாருடன் பலகாரங்கள் பரிமாறியதும், தூறும் மழையில் பட்டாசு, பலகாரங்களுடன் ஊருக்குப் பயணப்பட்டதும், சொந்த பந்தங்களுடன் மாலையில் தீபாவளி கொண்டாடியதும், பெரியப்பாக்கள், அத்தைகள் கொடுத்த ஒற்றை ரூபாய் பரிசுடன் பேருந்தில் ஊர் திரும்பியதும், தீபாவளி எவ்வளவு சந்தோக்ஷமானது? தீபாவளிகள் தொடரட்டும் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியின் மழையுடன். HAPPY DEEPAVALI.

நாட்களுடன் நழுவுகின்றன
சூழ்நிலையும் வானிலையும்.
மழை நாட்கள்
வந்து போகின்றன
மாற்றம் இல்லாத
ஒரே குணத்துடன்,
குடையற்ற தருணங்களில்
என்னை நனைத்தவாறோ;
குடையுள்ள தருணங்களில்
என்னைத் தவிர்த்த
உலகை நனைத்தவாறோ!
என் உலகம்
நனைவதற்காய் பழகிவிட்டேன்
குடையில்லா பயணங்களை!

மழையில் நான் நனைவதும்
மழைக்கு என்னை நனைப்பதும்
பழகிய மகிழ்ச்சி- என்
அழகிய உலகத்தில்.

Friday, October 21, 2011

நானே நானா?



இரண்டு நாட்கள் மண்டல அலுவலகத்தில் 60 லட்சம் மதிப்புள்ள CREDIT PROPOSAL முடித்து இன்று ஆவலாய் அலுவலகம் திரும்பினேன். புகைவண்டிப் பயணம், வழியெங்கும் புன்னகையோடு வணக்கம் சொன்ன மக்கள் என மகிழ்ச்சியாகத்தான் தொடங்கியது காலை. ஆனால்…… பின்னர்
எனக்கு என்னவாயிற்று?
எனக்கு என்னவாயிற்று?
இன்று எனக்கு என்னதான் ஆயிற்று?
எடுத்து வைத்த சிற்றுண்டியை அறையில் விடுத்து மதிய உணவு மட்டும் எடுத்துச் சென்றிருந்தேன். ஏனிந்த மறதி? பின் மூர்த்தி கொண்டு வந்ததை உண்பதற்குள் வானம் சூரியனை உச்சிக்கு அழைத்துச் சென்று விட்டது. மதியம் 12 மணிக்கு தோசையும் மிளகாய்ப் பொடியும். மதியமோ நிலைமை சுத்த மோசம். மண்டல அலுவலக தொலைபேசி அழைப்புகள் ஒரு புறம், வாடிக்கையாளர் மறு புறம் என்றிருக்க, தலைவலி, தலை சுற்றல், படபடப்பு,  துடிக்கும் கண்கள், பூச்சி பறப்பது போல் வந்த தலை சுற்றல் இவையெல்லாம் ஏன் எனத் தெரியவில்லை? MAY BE BECAUSE OF THE LA….TE BREAKFAST, இரண்டு நாட்களாக AC அறையில் இருந்து விட்டு வந்ததனால் MAY BE BECAUSE OF HEAT, என எனக்கு நானே காரணங்கள் சொல்லிக் கொண்டாலும், எனக்கு என்னவோ ஆயிற்று என உரக்கச் சொல்லும் மனதை மெளனிக்க முடியவில்லை. உண்மை போலும் தோன்றுகிறது. இந்தக் கவனச் சிதறல் எனக்கு நன்மை பயக்காது தானே! இந்த உடல் நலக்குறைவு என்னை பலவீனமாக்குகிறது. இப்பொழுதும் தொடரும் இந்த தலை வலி IT WEAKENS ME. DR.KANNAN ஐக் கேட்டால், YOUR WORK STRESS IS SPOILING YOUR HEALTH. IF YOU STARVE, YOU’LL SWELL. DON’T FOREGO YOUR TIMELY FOOD, TIMELY REST AND HEALTH FOR ANYTHING, ANYTHING INCLUDING YOUR PROFESSION என்கிறார். ஒரு வகையில் பலருக்கு உதவினாலும், என் வாழ்க்கையை நான்    COMPROMISE செய்து கொண்டிருப்பதாய் ஒரு கலக்கம். CUSTOMERS, ZO, HO, TARGETS, REVIEWS, DISHOOOM, DISHOOM, DISHOOM என ஒரு மேலாளராய் வெளியில் சிரித்தாலும், உள்ளே இவ்வளவு அழுத்தத்துடன், அச்சத்துடன், கலக்கத்துடன் இன்னும் எவ்வளவு நாள் தாங்கும்? சமயத்தில் பலவீனமானது போல் உள்ளெழும் இது போன்ற புலம்பல்கள், காணாமல் தான் போகின்றன அடுத்த நிமிட அவசர வேலையில். எனினும் அப்பா சொன்னதாய், அம்மா சொன்னது போல், என் பேச்சு, என் கவிதைகள், என் ஓவியங்கள், என் உலகளாவிய அறிவு சார்ந்த பேச்சு, என் கைவினைப் பொருட்கள், என் சிரிப்பு என என் எல்லாம் எங்கே போயின? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, சலிப்பூட்டும் இந்த அவசர வாழ்க்கை சரிதானா? என் கலெக்டர் கனவுகள், கவிதைகள், உள்ளுக்குள் எப்பொழுதும் கேட்கும் ஒரு புல்லாங்குழல் அல்லது வயலின் இசை, சிறு கோபங்கள், நிறைய கேள்விகள், தேடல்கள் இவையெல்லாம் இல்லாமல், காஞ்சனா யார்? நிறைய வலிக்கச் செய்யும் இந்தக் கேள்வியிலிருந்து நான் எப்பொழுது எங்கே விடை பெறுவேன்? மற்றுமொரு அழகான பகல் பொழுதை அலுவலகத்தின் உள்ளேயே கழித்துவிட்டு, இரவின் தனிமையில் நான் நான் நான் மட்டும்.

எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்களின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” சிறுகதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

Thursday, October 20, 2011

வாகை சூட வா

அண்மையில் அதிசயமாக ஒரு அழகான தமிழ்ப்பாடலை கவனிக்க நேர்ந்தது. ஆமாம். அதுதான் பொருத்தமான சொல். கேட்க நேர்ந்ததென்று எழுதுவதைவிட, கவனிக்க நேர்ந்ததென்பதே சரியான சொல். சர சர சாரக் காத்து வீசும்போது எனத் தொடங்கி சர சரவென மண்மணத்துடன் மனதை ஈர்த்த அழகான பாடல். கேட்பதற்கு இனிமையென்றால் மட்டும் போதாது, பார்ப்பதற்கும் அவ்வளவு ரசனையுடன் படமாக்கப் பட்டிருக்கும் அழகு,… அருமை. பாடலை இயற்றிய திரு.வைரமுத்துவாகட்டும், இசையமைத்த திரு. ஜிப்ரான் ஆகட்டும், படம் பிடித்த,,,,அந்த அற்புதக் கலைஞராகட்டும், ஒரு சோறு பதம். நெடுநாள் கழித்து ஒரு பாரதிராஜா பாடல் பார்த்தது போன்ற மகிழ்ச்சி. YOU HAVE PLACES TO GO வாகை சூட வா TEAM. DEFINITELY YOU HAVE A GREAT FUTURE MR.GIBRAN. ALL THE BEST.

Saturday, October 15, 2011


சுழித்தோடும் இருளோடையை
கிழித்தோடும் சுடரொளிபோல்
பசித்த புலியாய்
காத்திருக்கிறது அறிவு;
ருசிக்க மறந்து
போனது நாவு;
ரசிக்க மறந்து
போயின விழிகள்;
ஐம்புலனை ஒன்றாக்கி
அமுதா விக்ஷமாவென
ஆய்வு முடித்தபின்
நுகர்வோம் அறிவை;
பகிர்வோம் தெளிவை;
இரவின் மெளனத்தை
மொழிபெயர்க்கிறது மூளை.

ருசி சில நொடிகள்,
ரசனை சில மணிகள்,
வாசனை தாண்டிய
யோசனையைத் தூண்டும்
அறிவு அழிவற்றது.
புல் கண்டும்
புள்ளிற்காக காத்திருக்கும்
பசித்த புலியாய்
தெளிந்த ஞானச்செறிவு.