I'm@ Kancheepuram now. There were numerous processions today on Senkodi's immolation here. But being tooooooooo sensitive or reacting instantly to emotional let downs is not the solution for burning problems. Its great time for politicians to attend senkodi's funeral n give all great lectures. But Friends, who's the loser? Pl. note! not a single Leader today sacrifices a single drop of his blood, leave alone his Life for a social cause. think and act. Life is precious atleast to struggle n get solutions for problems in reality. Live n Let Live. Good night everybody.
Monday, August 29, 2011
its time to change
Anna Viradham is over. On the other side a women activist Senkodi set herself fire against death sentence to Rajiv Gandhi's assassins. No doubt we're against the capitol punishment. But don't lose your valuable lives to save other's life, Protest.Let your voice knock the Law's doors. Are you punishing your family for grooming you for all these days? Think,,,,,,,,,,,,,,,,,.
Saturday, August 27, 2011
iravu
முடிவிலா வானத்தின்
எண்ணிலா வின்மீன்களை
எண்ணிவிடும் முயற்சியில்
மணித்துளிகளை விரட்டிக் கொண்டிருக்கிறேன்
அண்ணாந்து பார்த்தவாறு
தனித்துப் படுத்துக்கிடக்கும் நான்.
என் தலைமேல் விழ
தயாராக இருக்கிறது
நடுநிசி மழையின்
கடைசி நீர்த்துளி!
Friday, August 26, 2011
today
Punishment to Democracy at the capital. Capitol Punishment to three. Hail gandhiji. Hail Congress. Hail Ahimsa
Thursday, August 25, 2011
Anna -The Faster
Nine Days Over. An elderly man fasting for Nine days. Parliamentary session is going on. Nothing turned up @ the Govt;s apex level. Whats happening in India? Long Live Democracy. long live our elected representaives. You've escaladed your salaries to unexpected peaks without any murmuring in single voice voting. But is it bitter to find a way to break this evil Bribery. Nobody has the guts to say Yes, Lets bring everybody under Law. Whats happening in India? God knows....
ஒரு நிமிடம்
நிறைய இறைச்சல் அலை தொடங்கி, வலை முழுவதும். பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கருத்து, ஏதும் உருப்படியாக இல்லாவிட்டாலும். யாருக்கும் படிப்பதற்கோ சிந்திப்பதற்கோ நேரம் இருப்பதாய் தெரியவில்லை. ஆனாலும் எதையோ சொல்லி விடும் அவசரத்தில், ஏதோ ஒன்றைப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நக்கல் நிறைந்த, என்னைத் தவிர எல்லாம் மோசம் என்கிற சமூகத்தைச் சாடிக் கொண்டே இருக்கிற அர்த்தமில்லா வெறும் பேச்சு. தளர்ந்து போகிறேன் நான். இது சரிதானா….நண்பர்களே! பேச்சு முக்கியம் இல்லை. சமூகம் பற்றிய அக்கறையின்றி இலக்கியம், வரலாறு, அரசியல், புவியியல் பற்றிய அறிவும் இன்றி அர்த்தம் இல்லாத இந்த வெறுங்கூச்சல் என்னை அயர்வுற வைக்கிறது. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று அறிவைத் திறந்து பாருங்கள், கண்களை மட்டும் அல்ல, அறிவைத் திறந்து. நிறைய படியுங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். சரியெனப் பட்டால் செயல்படுங்கள். பின் பேசலாம், அலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும், வலைப் பக்கங்களிலும். நட்புடன் நான் காஞ்சனா.
Tuesday, August 23, 2011
iravin madiyil
எத்தனை ஜனனம் தந்தும்
சற்றும் இளமை குன்றாத
பூமியின் மடியில் பிறந்த
அத்தனை மாந்தரைப் போலும் நான்.
அர்த்தமில்லாத பணத்திற்காகவும்
மின்னி மறையும் பொன்னிற்காகவும்
அலைந்து திரிந்து அயர்ந்த
என் நாளின் முடிவில்
தளர்ந்து மண்மேல் விழுகிறது
தனிமரமாய் என் உடல்,
பொன் மண்ணெல்லாம் தவிர்த்து
கண்ணுக்குப் புலப்படாத திருப்தியை
இன்னும் அண்ட வெளியில்
தேடிக் கொண்டிருக்கும் மனதுடன்!ஒவ்வொரு இரவுப் பொழுதிலும்
எனக்கான காத்திருப்பின் முடிவில்
தன் வாழ்க்கையின்
தலைசிறந்த பாடலை
இசைத்துக் கொண்டிருக்கும்
என் சன்னல்
பிரதேசக் குயில்
எனக்கு மட்டுமே
புரிந்த மொழியில்
கூறிச் செல்வது
புதிய விடியலின்
புரியாத அதிசயத்தை…..
Saturday, August 20, 2011
நான் காஞ்சனா
எனக்கு எவ்வளவு என்னைப் பிடிக்கும். என் அப்பாவைப் பிடிக்கும் அளவிற்கு. என் அம்மாவைப் பிடிக்கும் அளவிற்கு. என் பெயரைப் பிடிக்கும் அளவிற்கு. என் தாத்தா வைத்ததாய் சொல்லப்படும் என் பெயர். எனக்கு மிகவும் பிடித்த என் பெயர். பசும்பொன், சுத்த தங்கம். சுத்த தமிழில் வசு, பொன், அடுத்தொரு உலோகத்துடன் கலந்து ஆபரணம் ஆனாலும் தன் உறுதியை மாற்றிக் கொள்ளாமல் தானாகவே மிளிரும், எல்லோருக்கும் பிடித்த, சுரங்கங்களை நோக்கி ஓட வைத்த, ஒரே ஒளியில் மின்னும், சுத்த தங்கம். என் தமிழைப் பிடிக்கும் அளவிற்கு எனக்கு என் பெயரைப் பிடிக்கும். நான் காஞ்சனா.
Good Night/Morning
Its 12.06 am ............Midnight. Going to Sleep. Shall I? Good Night Friends.Bye.Sweet Dreams.
Friday, August 19, 2011
குருவே சரணம்
சற்றேறக் குறைய மூன்று மாதங்களுக்குப் பின் இன்று குருவின் தரிசனம். பேங்க் ஆப் இந்தியாவில் இருந்தபோதும் சரி, இந்தியன் வங்கிக்கு வந்த பிறகும் சரி, குருஸ்தலங்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு தொடர்பு, சிறப்பு ஈர்ப்பு இருந்துள்ளது. காவிரி சூழ்ந்த கும்பகோணத்திலிருந்து கபிஸ்தலம் வரையிலான என் பேங்க் ஆப் இந்தியா நாட்களில், காவிரியும், பாபநாசமும், சுவாமிமலையும், உப்பிலியப்பன் கோயிலும், திருக்கருகாவூரும், சரஸ்வதி கோவிலும் மட்டுமல்லாமல், குருவுமல்லவா என்னை ஈர்த்தழைத்தார் ஆலங்குடியில். காவிரியும் கொள்ளிடமும் கண்கொள்ளாமல் விரிய விரிய கூட்டத்தோடு சென்று கும்மியடித்து பொழுது போக்கி வாராமல், என் மனமும் உடலும் ஒன்றாய் பயணித்துக் களித்த ரசித்து ரசித்து வாழ்ந்த நாட்கள். உச்சி வெயில், ஊர்மூழ்கடிக்கும் வெள்ளம் என கும்பகோணம் தனிதான்.
பின்னர் இந்தியன் வங்கியில் சேர்ந்த பின்பு, சென்னை- பிறகு மூன்றரை ஆண்டு காஞ்சிபுரத்திற்குப் பிறகு, என் முதல் கிளை மேலாளர் பொறுப்பு. கிளை நிர்வாகத்தின் வேர்கள் அறியாமல் தான் கம்மவார்பாளையத்தின் மேலாளரானேன். அப்பா வந்து என்னை என் இருக்கையில் அமர வைத்த அன்று கூறினார்-பயப்படக் கூடாதும்மா! நான் இருக்கிறேன் என்று. எல்லாம் நல்ல படியா நடக்கும்மா குரு பார்வை பக்கத்திலேயே இருக்கிறது கோவிந்தவாடியில் என்று. என் பால்கனியின் வெளியே வந்து பார்த்தேன். எதிரிலுள்ள ஆலயத்தில் குரு அஞ்சாதே என்று அருள்பாலித்தார். அன்றும் அதற்குப் பிறகும் நினைத்த்துண்டு வாரா வாரம் வியாழக் கிழமை கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று. திருவண்ணாமையில் இருந்தும் கார்த்திகை தீபத்திற்கு மட்டுமே மலை சுற்ற போனது போல், இங்கும் 3-4 மாதங்களாகி விடுகின்றன குருவைப் பார்ப்பதற்கு. இன்றும் கூட லோக் அதாலத் நோட்டீஸ் கொடுக்கச் சென்றதால் தான், தற்செயலாக கோவிலின் வாசலில் ஒரு வாடிக்கையாளரைப் பார்க்கும் முகமாகத்தான் குரு என்னைத் தன்னைப் பார்க்க அழைத்திருந்தார். நானும் குருவும் மட்டும் தனியே அமைதியாக அரை மணி நேரம். நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்தது சன்னிதியில். அதனால் தான் அவர் குரு போலும்!
மாலையில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு சூடான வாக்குவாதம். அன்னா ஹசாரே தேவையே இல்லை என்றார் என் உதவி மேலாளர். இளைஞர்கள் வேலையற்று அவர் பின்னால் கொடி பிடிக்கிறார்கள் என்றார். இதனால் ஊழல் ஒழியப்போவதில்லை. அன்னா ஹசாரே என்ன அதிக பட்சம் மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருப்பார். பின் க்ளுக்கோஸ் ஏற்றிக் கொள்வார். இதனால் மாறப் போவது எதுவும் இல்லை என்றார். என் வாதம் இதுதான். 121 கோடி பேரில் 100 பேர் திருந்தட்டும் போதும். ஒரு அடியெடுத்து வைக்காமல் நெடும்பயணம் ஏது? சிறு தூண்டுகோல் இல்லாமல் ஒளிதான் ஏது? எனக்குள் ஏற்பட்ட பாதிப்பு, இன்னும் ஏனையோருக்கு ஏற்பட்டிருந்தால் எத்தனை பெரிய திருப்பம் அது? ஒரு தலைமுறை திருந்தும். அழகான மறு தலைமுறையை உருவாக்கும். அதற்கு அன்னா ஹசாரேயின் தலைமை ஒரு தூண்டுகோலாய் அமையட்டுமே! அமையும்.
என் தேசம் வளர்ந்திட நான் பாடுபடாவிடில் யார் பாடுபடுவது? என் நாடு சிறந்திட நான் போராடாவிடில் யார் போராடுவது? பெருமிதத்துடன் பேரமைதியுடன் பேருந்து ஏறினேன். என்றும் இல்லாமல் இன்று அமர இடம் கிடைத்தது.
வானம் வசப்படும்.
Thursday, August 18, 2011
கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது!
தண்ணீரில் நிற்கும் போதே
வேர்க்கின்றது,
என்னைப் பிரமிக்க வைத்த திரைப்படப் பாடல் வரிகளில்,
இது நிறையவே பாதித்த கற்பனை. வாவ்! வைரமுத்து இந்த அர்த்தத்தில் தான் எழுதினாரா என்று தெரியவில்லை,
நீ இல்லாமல் நான் அழுதுகொண்டிருக்கிறேன் என்பதை, உன்னைப் பாராமல் என் கண்ணில் விழும் எல்லாம் முள்ளாகத் தான் குத்துகின்றன என்பதை, தண்ணீரில் மிதக்கும் கண்களைக் கூட, நீயற்ற தனிமையில் நான் அழும் கண்ணீரினால் உப்புக் கரிக்கும் தண்ணீரில் நிற்கின்றது என்பதை, வலியை உப்புக் கரிக்கும் வியர்வையாய் பதிவு செய்திருக்கும் கவிஞனுக்கு என் வணக்கங்கள்.
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது.
-நன்றி கவிப்பேரரசு வைரமுத்து.
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
-நன்றி மகாகவி பாரதி (-யார்- வேண்டாம், எனக்கு நீர் பாரதி மட்டுமே).
உறங்கப் போகிறேன். இனிய இரவு எல்லோருக்கும் உரித்தாகட்டும்.
Wednesday, August 17, 2011
Andhi mazhai pozhikirathu
A Busy Disturbed day. Purchased Gandhiji's My experiments with truth and Bharatiyar Kavidhaigal Books in the evening. listening to Andhi Mazhai Pozhikirathu for atleast 20 times today. God, who is the magician of this song? SPB or ilayaraja or vairamuthu or janaki? Couldn't remove the head set today. Nenjukkul theeyai vaithu Mogam Enbai.. thanneeril nirkumpothe Thaagam enbai.. Kettana Iravugal, Suttana kanavugal.. Imaigalum Sumaiyadi ilamaiyile.
Tuesday, August 16, 2011
Happy Independence day
என் தாய்நாட்டின் அறுபத்தைந்தாவது சுதந்திர தினம் இவ்வாறாக தொடங்கியது. காலை சரியாக ஏழு முப்பது மணிக்கு பிரதமர் மழையுடன் கொடி ஏற்றினார். ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் தீர்வாகாது என்றார். மகாத்மா நினைவிற்கு வந்தார். மாலையில் குமரி அனந்தன் இதையே வழி மொழிந்தார். மகாத்மா உண்ணாவிரதம் இருந்தது அன்னியர்களை எதிர்த்து. ஆகையால் அன்னா ஹஜாரே உண்ணாவிரதம் இருப்பது சரியாகாது என்றார். நீங்கள் எல்லாம் காந்தி வளர்த்த காங்கிரஸ்காரர்கள்தானே ஐயா!
ஒரு இனத்தையே அழித்துவிட்டு, வெட்கமோ, உறுத்தலோ இல்லாமல் இந்த நாட்டுக்கு வரும் ராஜபக்சேவின் பிரதிநிதிகளுக்கு, எதிர்ப்புத் தெரிவித்த நம்மவர்களை கண்டித்துவிட்டு, கொலைகாரர்களிடம் குடியரசுத்தலைவர் மன்னிப்புக் கேட்கிறார். ஊழலை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்கும் ஒரு முதியவரை அடக்கி ஒடுக்க கைது செய்கிறீர்கள்.
இதுவா சுதந்திரம். வெட்கக் கேடு. போதாதென்று ஜனநாயகத்தில் ஊழலை ஒழிக்க முடியாதென்று பேச இரண்டு பேர் வேறு.
நெஞ்சு பொறுக்குதில்லையே! இறைவா இந்த தேசத்தை இவர்களிடமிருந்து காப்பாற்று….!
எட்டரை மணிக்கு நானும் தம்பியும் வீட்டு மாடியில் தேசியக் கொடி ஏற்றினோம். மிகவும் பெருமிதமும் பேரானந்தமும் அடைந்த ஒரு அற்புத தருணமது. மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறந்தது.
தொலைக்காட்சியில் வழக்கம் போல் சாலமன் பாப்பையா, ஜெகத்ரட்சகன், லியோனி (Where’ve you gone Gnanasambandhan Sir?) இவர்களுடன்- இந்த வருட சிறப்பு நடுவராக சிங்கமுத்துவும் ஒரு தொலைக்காட்சியின் பட்டிமன்றத்தை சிறப்பித்துக் கொண்டிருந்தார். சற்று வித்தியாசமாக பொதிகையில் திரு. அப்துல்காதர் தலைமையில் கவியரங்கம். விஜய் டீவீயில் தமிழில் ஆங்கிலக் கலப்பு பற்றி கொஞ்சம் தமிழ் நிறைய ஆங்கிலத்தில் தமில் எலுத்தாலர்கலும் இணைய தமில் காவலர்கலும் நிறைய கவலைப் பட்டுக் கொண்டிருந்தார்கள். சிறப்பம்சம்- ழகரத்தைத் தன் பெயரில் கொண்டிருந்தவர்க்கு ழகரம் பட்ட பாடு அவர் நாவறியும். மற்றும் சில தொலைக்காட்சிகளில் அமலா பால், தமன்னா, அனுக்ஷ்கா, விக்ரம், நந்தா என பலரும் தேச பக்தியை வளர்த்துக் கொண்டிருந்தனர். காந்தி, Rang De Basanthi, பாரதி என சென்ற வருடம் வரையில் கூட ஒளீபரப்பிய தொலைக்காட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்து அவற்றை விடவும் சிறந்த தேச பக்திப் படங்களாகிய கில்லி, தூங்காநகரம், தம், கிரி, வானம் போன்ற சிறந்த படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. வல்லரசு வழக்கம் போல பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடினார். வானம் எல்லா தவறுகளையும் காட்டி விட்டு, இறுதியில் நாட்டுப் பற்றைக் கொண்டாடியது. You too Simbu? எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, மாலையில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தை டிவிடியில் பார்த்தோம். தி ஹிண்டுவில் பகத்சிங்கின் கடிதங்களை படித்தவாறு Rang De Basanthi யும். சற்று ஆறுதலுக்காக.
இதெல்லாம் கூட பரவாயில்லை. TOP OF ALL. நான் மிகவும் வேதனைப்பட்ட, வெட்கப் பட்ட, அவமானப் பட்ட இரண்டு நிகழ்ச்சிகள் இரண்டு சேனல்களில் ஒளிபரப்பாகின. ஒன்று பொதிகையிலும் மற்றொன்று மக்கள் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. கேள்விகள் மிகச் சாதாரணமானவை தாம். பின்வருமாறு.
காந்திஜியின் இயற்பெயர் என்ன? பாரதியாரின் இயற்பெயர் என்ன? நம் தேசிய கீதம் எது? தேசிய கீதத்தை இயற்றியவர் யார்? காந்திஜி எழுதிய நூல் யாது? பகத்சிங் யார் ?எதற்காக எவ்வாறு கொல்லப்பட்டார்? பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட அவரது நண்பர்கள் பெயர் என்ன? வாஞ்சிநாதன் யார்? எதற்காக கொல்லப்பட்டார், நம் சுதந்திர தினம் எப்பொழுது? நாம் சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது எத்தனையாவது சுதந்திர தினம்? நம் குடியரசு தினம் எப்பொழுது? நாம் சுதந்திரம் பெற்ற பொழுது காந்திஜி எங்கிருந்தார்? பாரதியார் பாடல் ஏதேனும் ஒன்று பாடுக.
ஒவ்வொரு இந்தியனும் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பெருமையுடன் பதிலளிக்க வேண்டிய கேள்விகள்.
ஆனால் இவற்றிற்கு கிடைத்த பதில்கள், பெரும்பாலும் தெரியாது. அல்லது கீழ்கண்டவாறு.
காந்திஜியின் இயற்பெயர் என்ன?- மகாத்மா காந்திஜி, மோகன்லால் கரம்சந்த் காந்தி, மோகன் காந்தி.
பாரதியாரின் இயற்பெயர் என்ன?- மகாகவி பாரதியார்,
நம் தேசிய கீதம் எது-ஜாரே ஜஹான் சே அச்சா, நீராரும் கடலுடுத்த, செம்மொழியான தமிழ் மொழியாம். இதைவிடக் கொடுமை- தப்பு தப்பாய் தேசிய கீதத்தைப் பாடிவிட்டு தேசிய கீதம் பாடுவதையே நிறுத்தி விட்டு, போதும் சார், பாட அசிங்கமாயிருக்கு என்ற இளைஞர் கூட்டம். இவ்வாறு கூற உங்களுக்கு வெட்கமாக இல்லை.
தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?-தெரியவில்லை, பாரதியார், காந்திஜி எழுதிய நூல் யாது-தெரியவில்லை, சத்தியாகிரகப் போராட்டம், பகத்சிங் எதற்காக எவ்வாறு கொல்லப்பட்டார்-அவ்வளவாக தெரியவில்லை, சுடப்பட்டார்,
பகத்சிங்குடன் தூக்கிலிடப்பட்ட அவரது நண்பர்கள் பெயர் என்ன?- என் friends பேரே ஞாபகம் இல்லை. ஏன் பாஸ் இப்படி எல்லாம் கேள்வி கேட்டு டென்க்ஷன் பன்றீங்க?
வாஞ்சிநாதன் யார், எதற்காக கொல்லப்பட்டார்?-கப்பம் கட்டாதததால் தூக்கிலிடப்பட்டார்.
நம் சுதந்திர தினம் எப்பொழுது?-செப்டம்பர் 9, 1957, 1946, 1985, 1954,ஆகஸ்ட் 17,
நாம் சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகின்றன?-88, 105, 58, 61, 85, 75, 57.
நாம் கொண்டாடிக் கொண்டிருப்பது எத்தனையாவது சுதந்திர தினம்?-75, 63, 85, 58.
நம் குடியரசு தினம் எப்பொழுது?-1954, 1964 நிச்சயமாக.
நாம் சுதந்திரம் பெற்ற பொழுது காந்திஜி எங்கிருந்தார்?-நான் பிறக்கவே இல்லை, மேலே போய் விட்டார், சுட்டுக் கொன்று விட்டார்கள்.
பாரதியார் பாடல் ஏதேனும் ஒன்று பாடு- ஓடி விளையாடு பாப்பா.
இந்தக் கேள்விகள் எல்லாம் கேட்கப் பட்டது- கல்லூரி வாசலில் இருந்த மாணவர்களிடமும், திரையரங்க வாசலில் இருந்த மாணவர்களிடமும், மென்பொறியாளர்களிடமும், எட்டாவது, பன்னிரண்டாவது படிக்கும் பள்ளி மாணவர்களிமும், அவர்களுக்கு பாடம் சொல்லித் தரும் ஆசிரியர்களிடமும். ம்ஹூம். ஒருவராவது சரியாகச் சொன்னால் தானே. என் ஆசிரியர்கள் புத்திசாலிகளாக சமூக அக்கறை உடையவர்களாக இருந்து எங்களை உருவாக்கினார்களா? அப்படியானால் இன்றைய ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
நிகழ்ச்சி முடிவில் வருத்தத்துடனும், வேதனையுடனும் தொகுப்பாளர் கூறியது.
இந்நிகழ்ச்சியில் மகாத்மா மற்றும் பாரதியின் முழு பெயரைக் கூறுபவர்களுக்கு சத்திய சோதனை புத்தகத்தைப் பரிசாகத் தருவதாகத் திட்டம். ஆனால் பாதியாவது சரியாகச் சொன்னதற்காக தந்த புத்தகங்கள் மூன்று மட்டுமே. மற்றவை அப்படியே என்னிடம். வருங்கால இந்தியாவின் தூண்களை நினைத்தால் தான் மிக்க வேதனையாக இருக்கிறது என்று வருத்தத்துடன் முடித்தார், இந்த பாடலின் பின்னணியில்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா,
இச்சுதந்திரத்தை கண்ணீரால் காத்தோம்,
…… அது கருகத் திரு உளமோ.
Happy independence Day SMS உடன் நம் சுதந்திர உணர்வும், நாட்டுப் பற்றும் நிறைவு பெற்று விடுகின்றன அல்லவா! கண்கள் திறந்திட வேண்டும்.
வாழ்க இளைய பாரதம்.
Friday, August 12, 2011
கடவுளின் கருணை
பிஞ்சுக் கால்களிலும்
பஞ்சு விரல்களிலும்
உச்சிக் குடுமியிலும்
எச்சில் முத்தத்திலும்
பச்சை பால்வாசத்திலும்
கொச்சை மழலையிலும்
அழகுப் பார்வையிலும்
மெழுகுப் புன்னகையிலும்
இன்னும் இருக்கிறது
எண்ணத்திற்குள் அடங்காத
கடவுளின் கருணை.
ஈர மார்பினிலும்
தூறல் தாலாட்டிலும்
தாங்கும் தோள்களிலும்
தூங்கும் மடியினிலும்
தாயும் தந்தையுமாய்
பாயும் பாசத்துடன்
உன்னுடன் இருக்கின்றது
கண்ணுக்குத் தெரியாத
கடவுளின் கருணை.
Thursday, August 11, 2011
பயணம்
சன்னலோர இருக்கை
செவிக்கு இளையராஜா
புசிக்க சோளப்பொறி
அந்தியின் தூரிகை
நிலவு வழியும் இரவு
முன்னிருக்கை மழலை
பின் நகரும் மரங்கள்
என தொடரும் பயணம்
என் இருப்பின் பயனை
சொல்லாமல் சொல்கையில்,
மறந்துதான் போகிறது
அவசரமாய் தொடங்கி
அவதியாய் தொடர்ந்து
அலுப்புடன் கடந்து போன
அலுவலக வார நாட்கள்.
Tuesday, August 9, 2011
இன்னும் சில வேண்டுதல்கள்
கண்கள் திறந்திட வேண்டும்
காற்றினில் அமைதியின் வாசம் வேண்டும்.
சிந்தனையில் தெளிவு வேண்டும்
சீரிய நோக்கம் அதில் நிலைபெற வேண்டும்.
துன்பம் விலகிட வேண்டும்
தூய காற்று சுவாசிக்க வேண்டும்.
நல்லவர் நட்பு வேண்டும்
நட்பிலும் தாய்மையை தரிசிக்க வேண்டும்.
பசுமை தழைத்திட வேண்டும்
பாரினில் நித்தம் பகுத்தறிவு வேண்டும்.
மானுடம் உயர வேண்டும்
மண்ணிலும் விண்ணிலும் மகிழ்ச்சியே வேண்டும்.
உணவு அனைவருக்கும் வேண்டும்
உயிர் வளர்த்திட உண்மையே வேண்டும்.
வெற்றி பழகிட வேண்டும்
வேட்கையிலும் வெற்றியே நினைவாய் வேண்டும்.
வாழ்க்கை முழுமையாய் வேண்டும்- எல்லோர்
வாழ்விலும் வளமையே வேண்டும்.
Monday, August 8, 2011
கவிதை
வாசனை வார்த்தைகள் சிக்காவிட்டாலும்
யோசிக்க நேரம் கிட்டாவிட்டாலும்
எழுதுகோலோ காகிதமோ தேவையென
எண்ணம் தோன்றியிரா விட்டாலும்
இப்படி ஓர் வார்த்தை வடிவம் இருப்பதை
நினைத்தே பார்த்திராத போதும்
ஒவ்வொருவருக்குள்ளும் உறவாடிக் கொண்டுதான்
இருக்கிறது உருப்பெறாத ஒரு கவிதை.
Subscribe to:
Posts (Atom)