Monday, October 31, 2011

Feverish. No Probs. I'm fine n alright. N.....................I'm Alright. Thank you God for giving me the strength to handle things strong n smooth n to support my people cross the turbulence smoothly  to some extent. Its Review meeting day after tomorrow. Have to Get ready. Going to Sleep listening to Andhi Mazhai Pozhigirathu......Love you SPB Sir, for the Great Song. Salutes Raja Sir, for the Great Composition. Good Night People.

இதுவும்
கடந்து
போகும்….

Saturday, October 29, 2011

God! Give me Strength  Physically n mentally. Be with me. I Need You Now.


என்ன குறையோ?
என்ன நிறையோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன தவறோ?
என்ன சரியோ?
எதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.
என்ன வினையோ?
என்ன விடையோ?
அதற்கும்
நான் உண்டென்பான்
கண்ணன்.

நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்.
வலியும் வரலாம்;
வாட்டம் வரலாம்;
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்!
நேர் கோடு
வட்டம் ஆகலாம்;
நிழல் கூட
விட்டுப் போகலாம்;
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்.
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்;
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்.
அந்த கண்ணனை,
அழகு மன்னனை,
தினம் பாடி வா மனமே!

உண்டு எனலாம்;
இல்லை எனலாம்;
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்!
இணைந்து வரலாம்;
பிரிந்தும் தரலாம்;
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்!
பனி மூட்டம்
மலையை மூடலாம்;
வழி கேட்டுப்
பறவை வாடலாம்;
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்.
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை நனைப்பான்.
அந்த கண்ணனை,
கனிவு மன்னனை,
தினம் பாடி வா மனமே!

Thursday, October 27, 2011

கண்ணே! நவமணியே! உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ? எப்பொழுது கேட்டாலும் கண்களைக் கசிய வைக்கும் ஒரு பாடல். பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கையில் சிந்தனை சிலநேரம் சிதறிப் போவதுண்டு. எனினும் எனினும் ஒவ்வொரு முறையும் நான் தவிர்க்க நினைக்கும் அந்த LAST STANZA கடைசி சரணம் வருகையில் மட்டும் மணம் ALERT ஆகி கண்களும் நெஞ்சமும் கணக்க என்னை ஈர்த்து விடுவதை தவிர்க்கவே முடியாமல் போவது எவ்வாறு என்பது மட்டும் MILLION DOLLAR QUESTION. என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு..

Tuesday, October 25, 2011

HAPPY DEEPAVALI


இன்றே தொடங்கிவிட்டது தீபாவளி. சுற்றிலும் பட்டாசு சத்தம். மழை விடிவதற்காய் கைகளில் பட்டாசுகளுடன் காத்திருந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன, யார் முதலில் வெளியில் சென்று பட்டாசு வெடிப்பது என்ற போட்டியில், தம்பி கையில் இருந்த கம்பி மத்தாப்பு என் கையை பதம் பார்த்தது அந்த சிறு வயதில் வலித்தபோதும், என் கைகளில் மாறாத வடு, மனதிற்குள் மழலைக் காலத்தின் மகிழ்ச்சித் தருணங்களை நூறு மடங்கு மகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்துகிறது. THANKS DA SRIDHAR FOR BEING A GREAT BROTHER. தாத்தா எண்ணெய் தேய்த்து விட்டது, அம்மா சீயக்காய் தேய்த்து விட்டதும், அப்பா கை பிடித்து பட்டாசு வெடித்ததும், அண்ணன் தம்பியுடன் அமர்ந்து தீபாவளி விருந்துண்டதும், அக்கம்பக்கத்தாருடன் பலகாரங்கள் பரிமாறியதும், தூறும் மழையில் பட்டாசு, பலகாரங்களுடன் ஊருக்குப் பயணப்பட்டதும், சொந்த பந்தங்களுடன் மாலையில் தீபாவளி கொண்டாடியதும், பெரியப்பாக்கள், அத்தைகள் கொடுத்த ஒற்றை ரூபாய் பரிசுடன் பேருந்தில் ஊர் திரும்பியதும், தீபாவளி எவ்வளவு சந்தோக்ஷமானது? தீபாவளிகள் தொடரட்டும் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சியின் மழையுடன். HAPPY DEEPAVALI.

நாட்களுடன் நழுவுகின்றன
சூழ்நிலையும் வானிலையும்.
மழை நாட்கள்
வந்து போகின்றன
மாற்றம் இல்லாத
ஒரே குணத்துடன்,
குடையற்ற தருணங்களில்
என்னை நனைத்தவாறோ;
குடையுள்ள தருணங்களில்
என்னைத் தவிர்த்த
உலகை நனைத்தவாறோ!
என் உலகம்
நனைவதற்காய் பழகிவிட்டேன்
குடையில்லா பயணங்களை!

மழையில் நான் நனைவதும்
மழைக்கு என்னை நனைப்பதும்
பழகிய மகிழ்ச்சி- என்
அழகிய உலகத்தில்.

Friday, October 21, 2011

நானே நானா?



இரண்டு நாட்கள் மண்டல அலுவலகத்தில் 60 லட்சம் மதிப்புள்ள CREDIT PROPOSAL முடித்து இன்று ஆவலாய் அலுவலகம் திரும்பினேன். புகைவண்டிப் பயணம், வழியெங்கும் புன்னகையோடு வணக்கம் சொன்ன மக்கள் என மகிழ்ச்சியாகத்தான் தொடங்கியது காலை. ஆனால்…… பின்னர்
எனக்கு என்னவாயிற்று?
எனக்கு என்னவாயிற்று?
இன்று எனக்கு என்னதான் ஆயிற்று?
எடுத்து வைத்த சிற்றுண்டியை அறையில் விடுத்து மதிய உணவு மட்டும் எடுத்துச் சென்றிருந்தேன். ஏனிந்த மறதி? பின் மூர்த்தி கொண்டு வந்ததை உண்பதற்குள் வானம் சூரியனை உச்சிக்கு அழைத்துச் சென்று விட்டது. மதியம் 12 மணிக்கு தோசையும் மிளகாய்ப் பொடியும். மதியமோ நிலைமை சுத்த மோசம். மண்டல அலுவலக தொலைபேசி அழைப்புகள் ஒரு புறம், வாடிக்கையாளர் மறு புறம் என்றிருக்க, தலைவலி, தலை சுற்றல், படபடப்பு,  துடிக்கும் கண்கள், பூச்சி பறப்பது போல் வந்த தலை சுற்றல் இவையெல்லாம் ஏன் எனத் தெரியவில்லை? MAY BE BECAUSE OF THE LA….TE BREAKFAST, இரண்டு நாட்களாக AC அறையில் இருந்து விட்டு வந்ததனால் MAY BE BECAUSE OF HEAT, என எனக்கு நானே காரணங்கள் சொல்லிக் கொண்டாலும், எனக்கு என்னவோ ஆயிற்று என உரக்கச் சொல்லும் மனதை மெளனிக்க முடியவில்லை. உண்மை போலும் தோன்றுகிறது. இந்தக் கவனச் சிதறல் எனக்கு நன்மை பயக்காது தானே! இந்த உடல் நலக்குறைவு என்னை பலவீனமாக்குகிறது. இப்பொழுதும் தொடரும் இந்த தலை வலி IT WEAKENS ME. DR.KANNAN ஐக் கேட்டால், YOUR WORK STRESS IS SPOILING YOUR HEALTH. IF YOU STARVE, YOU’LL SWELL. DON’T FOREGO YOUR TIMELY FOOD, TIMELY REST AND HEALTH FOR ANYTHING, ANYTHING INCLUDING YOUR PROFESSION என்கிறார். ஒரு வகையில் பலருக்கு உதவினாலும், என் வாழ்க்கையை நான்    COMPROMISE செய்து கொண்டிருப்பதாய் ஒரு கலக்கம். CUSTOMERS, ZO, HO, TARGETS, REVIEWS, DISHOOOM, DISHOOM, DISHOOM என ஒரு மேலாளராய் வெளியில் சிரித்தாலும், உள்ளே இவ்வளவு அழுத்தத்துடன், அச்சத்துடன், கலக்கத்துடன் இன்னும் எவ்வளவு நாள் தாங்கும்? சமயத்தில் பலவீனமானது போல் உள்ளெழும் இது போன்ற புலம்பல்கள், காணாமல் தான் போகின்றன அடுத்த நிமிட அவசர வேலையில். எனினும் அப்பா சொன்னதாய், அம்மா சொன்னது போல், என் பேச்சு, என் கவிதைகள், என் ஓவியங்கள், என் உலகளாவிய அறிவு சார்ந்த பேச்சு, என் கைவினைப் பொருட்கள், என் சிரிப்பு என என் எல்லாம் எங்கே போயின? எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு, சலிப்பூட்டும் இந்த அவசர வாழ்க்கை சரிதானா? என் கலெக்டர் கனவுகள், கவிதைகள், உள்ளுக்குள் எப்பொழுதும் கேட்கும் ஒரு புல்லாங்குழல் அல்லது வயலின் இசை, சிறு கோபங்கள், நிறைய கேள்விகள், தேடல்கள் இவையெல்லாம் இல்லாமல், காஞ்சனா யார்? நிறைய வலிக்கச் செய்யும் இந்தக் கேள்வியிலிருந்து நான் எப்பொழுது எங்கே விடை பெறுவேன்? மற்றுமொரு அழகான பகல் பொழுதை அலுவலகத்தின் உள்ளேயே கழித்துவிட்டு, இரவின் தனிமையில் நான் நான் நான் மட்டும்.

எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்களின் “நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை” சிறுகதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

Thursday, October 20, 2011

வாகை சூட வா

அண்மையில் அதிசயமாக ஒரு அழகான தமிழ்ப்பாடலை கவனிக்க நேர்ந்தது. ஆமாம். அதுதான் பொருத்தமான சொல். கேட்க நேர்ந்ததென்று எழுதுவதைவிட, கவனிக்க நேர்ந்ததென்பதே சரியான சொல். சர சர சாரக் காத்து வீசும்போது எனத் தொடங்கி சர சரவென மண்மணத்துடன் மனதை ஈர்த்த அழகான பாடல். கேட்பதற்கு இனிமையென்றால் மட்டும் போதாது, பார்ப்பதற்கும் அவ்வளவு ரசனையுடன் படமாக்கப் பட்டிருக்கும் அழகு,… அருமை. பாடலை இயற்றிய திரு.வைரமுத்துவாகட்டும், இசையமைத்த திரு. ஜிப்ரான் ஆகட்டும், படம் பிடித்த,,,,அந்த அற்புதக் கலைஞராகட்டும், ஒரு சோறு பதம். நெடுநாள் கழித்து ஒரு பாரதிராஜா பாடல் பார்த்தது போன்ற மகிழ்ச்சி. YOU HAVE PLACES TO GO வாகை சூட வா TEAM. DEFINITELY YOU HAVE A GREAT FUTURE MR.GIBRAN. ALL THE BEST.

Saturday, October 15, 2011


சுழித்தோடும் இருளோடையை
கிழித்தோடும் சுடரொளிபோல்
பசித்த புலியாய்
காத்திருக்கிறது அறிவு;
ருசிக்க மறந்து
போனது நாவு;
ரசிக்க மறந்து
போயின விழிகள்;
ஐம்புலனை ஒன்றாக்கி
அமுதா விக்ஷமாவென
ஆய்வு முடித்தபின்
நுகர்வோம் அறிவை;
பகிர்வோம் தெளிவை;
இரவின் மெளனத்தை
மொழிபெயர்க்கிறது மூளை.

ருசி சில நொடிகள்,
ரசனை சில மணிகள்,
வாசனை தாண்டிய
யோசனையைத் தூண்டும்
அறிவு அழிவற்றது.
புல் கண்டும்
புள்ளிற்காக காத்திருக்கும்
பசித்த புலியாய்
தெளிந்த ஞானச்செறிவு.

Thursday, October 13, 2011


உறக்கம் அறுபட்ட
இரவின் துளியொன்றில்
உரக்கச் சத்தமிடும்
உள்ளத்தை மெளனிக்க
செவிகளில் திணிக்கிறேன்
இசைப் பதிவின்
இருபத்து மூன்றாம் பாடலை.
பதித்து வைத்த இசை
பதிய மறுக்கிறது
பட்டாம்பூச்சி மனதிற்குள்.
இருளின் ஒளியில்
உருளும் இரவு
விடியும் நொடிக்காக
காத்திருக்கிறேன்- ஒரு
மின்விசிறியும் நானும் மட்டும்
பேசிக் கொண்டிருக்கும்
இன்னுமொரு நடுநிசியில்.

Tuesday, October 11, 2011


உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
வேதனை தீரலாம்
வெறும் பனி மறையலாம்.
இனியெல்லாம் சுகமே!