Anna, I have something to share with you. I don't want to make it public in my blog or facebook. Check your mail, if you feel so. come back to me, if you feel its worthy. use e kalappai latest version to read tamil lines.I'm not feeling well. Going to sleep. Good night, Kanchana always.
Saturday, November 26, 2011
Cheers!
Topped the List in Yesterday's Recovery Camp with Cash Recovery of Rs.29.20 lakhs.Accolades from Zonal Office. Still DGM,HO n ZM has given the Challenge to achieve 20 lakhs in other two days. Thanks to All the Customers who responded to the Campaign, inspite of the incessant Rainfall. Result of the two weeks hard work. I wish to free the Famers atleast from the clutches of the Non Performing Asset Concept n To get away from the Alarming Penal Interest Charged. I can't change or stop RBI's stringent guidelines on Loans tightening n pressure rising day by day. But I can atleast save the farmers from mounting NPAs. Giving loans afresh as much as possible with limited manpower with me. To handle with seniors, My God, Its an art to be learnt by experiencing only. Any way, Made myself Comfortable by doing things myself. My Branch is My Baby. I have take care n nurse it. Some times even ailments like Stress, Tension, Head ache, Back Pain due to continuous working without rest take a Back Seat, when greeted by People for your achievements. I have to maintain the respects and TRUST, my Customers have on me. No Pain; No Gain. Give yourself a Pat Kanchana.Gear up for the next Challenge. Cheer up.
Wednesday, November 23, 2011
Tuesday, November 22, 2011
தேவதைகளின் தேசம்!
அழகு அழகு தேவதை! பாடல் செவியில் வழிந்து கொண்டிருக்கிறது. நினைத்துக் கொள்கிறேன், தேவதைகள் கற்பனைக் கதைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் வாழ்கிறார்கள் ஒவ்வொரு தாயின் உருவிலும் என.
பள்ளிக்காலங்களில் ஒவ்வொரு கிருஸ்துமஸ் விழாவின் போதும், குழந்தை இயேசுவின் பிறப்பைப் பற்றி மேரி மாதாவிற்குத் தெரிவிக்கும் தேவதையாக வலம் வந்த என் வாழ்விலும் தேவதைகள் வந்திருக்கிறார்கள்; வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்கள், என் வியப்பைப் புறந்தள்ளி சகஜமாக சாதாரண பெண்மணிகளாக பேசிப் பழகி இருக்கிறார்கள், பேசாமல் கடந்து போயிருக்கிறார்கள், உடன் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
எனக்குக் கருத்து தெரிந்து உலகத்தின் மிகச் சிறந்த அழகி, நான் கேட்பதற்கு மேலாகவே அன்பை அள்ளி அள்ளி வழங்கும் என் அம்மா. அதிலும் ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் தன் தோழியுடன் அம்மா நின்று கொண்டிருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படத்தில் அம்மா அத்தனை அழகு. INNOCENT BEAUTY. என் இரண்டரை வயது புகைப்படத்தில் இன்னும் கொள்ளை அழகு அம்மா. எல்லா மகள்களைப் போலும் சிறுவயதில் நான் எப்பொழுதும் அப்பா செல்லம். இப்பொழுதும்தான். மிதிவண்டியின் முன்னிருக்கை எப்பொழுதும் என்னுடையதாகத்தான் இருந்திருக்கிறது. ஆனாலும் மதிய நேர தக்காளி சாதம் முட்டையுடன் அம்மா தன் பாசத்தையும் சேர்த்து அனுப்பியிருந்ததை எப்பொழுதும் நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கும் தம்பிக்குமான காலை நேரக் கலவரங்களை அம்மாவின் கன்ணீரே பெரும்பாலும் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு பொறுப்பான ஆசிரியர் என்பதைத் தாண்டி, சிறந்த தலைமை ஆசிரியர் என்பதைத் தாண்டி அம்மா அழகான அடக்கமான குடும்பத் தலைவியாய், ஒரு அன்பான அருமையான பெண்மணியாய், ஒரு அறிவார்ந்த அருள் பொழியும் அற்புதமான அழகு தேவதையாக இருப்பதை பெருமிதத்துடன் நான் உணர ஆரம்பித்தது நான் கல்லூரியில் சேர்ந்த பின்புதான். தனியாக என் வேலைகளை நான் செய்து கொள்ளும் தேவை வந்தபோதுதான், அம்மா எனும் தேவதையின் அருமை தெரிந்தது. I ALWAYS WANTED TO SAY THIS TO YOU MA. I LOVE YOU SO MUCH. பணி நிறைவு பெற்ற பின்னரும் இன்று வரை அயராமல் எங்களுக்காக உழைக்கும் அம்மா ஒரு அன்பான தேவதை என்பதில் ஐயமேதும் இல்லை.
வெளி உலகிலும் தேவதைகள் என்னைக் கடந்து போயிருக்கிறார்கள். நான் பதினோராம் வகுப்பு பயின்ற நேரம் என நினைவு. பள்ளி முடிந்து திரும்பிய ஒரு பேருந்துப் பயணத்தில் பார்த்த அந்தப் பெண்ணைப் போன்று ஒரு அழகியை நான் இது நாள் வரையில் காணவில்லை. ஒரு கல் குவாரியில் வேலை செய்து விட்டு வீடு திரும்பும் ஒரு எளிய நரிக்குறவர் குடும்பத்துப் பெண். ஒரு சிறிய மூக்குத்தி, கவரிங் கம்மல், வெளிரிய தாவணி, கலைந்த தலை, களைத்த முகம், எல்லாம் தாண்டி ஒளி வீசும் கண்களுடன் உடன் பயணித்த அந்த தேவதை போன்ற பெண்ணைப் பின்னொரு நாள் பார்த்ததாக ஞாபகமே இல்லை. அவளைப் போன்றொரு பெண்ணையும் பிறகு பார்க்கவே இல்லை. தேவதைகள் அழுக்கு தாவணியும் கட்டியிருப்பார்கள் என உணர்ந்த நாள் அது.
கல்லூரியில் UGயின் போதும் PGயின் போதும் இருவேறு தேவதைகளைச் சந்தித்திருக்கிறேன். UGயில் மாருதியின் ஓவியம் உயிரோடு வந்தது போல் இருந்த ஒரு சீனியர் PG மாணவி. பெயர் தெரியாத அவரைப் பார்ப்பதற்காகவே அவர் துறை பக்கம் செல்வதுண்டு. உன் ஆள் வந்தாச்சு. YOU ARE CRAZY YA என்பாள் பானு. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் எனப் பித்துப் பிடிக்க வைத்த முகம் அது. கண்கள், மூக்கு, வாய், நெற்றி என ஒரு ஓவியமாகத்தான் தோற்றமளித்தார் அந்த அழகு தேவதை அக்கா. பின்பு ஒரு துணைப் பேராசிரியரை மணமுடித்ததாகக் கேள்வி. ஆனால் உண்மையா எனத் தெரியவில்லை.
ஆனாலும் பித்தம் தலைக்கேறி கடிதம் எழுதியது லாவன்யா SIS இடம்தான். எளிய, சாதாரணமான ஆனால் அத்தனை அழகான ஒரு பெண். என் இளங்கலை இறுதி ஆண்டில், PG படித்துக் கொண்டிருந்த லாவன்யா அக்காவிற்கு நான் எழுதிய கடிதம் எங்கள் நண்பர்களிடையே வெகு பிரசித்தம். HOW YOU COULD BE SO BEAUTIFUL? YOU’RE SO GORGEOUS SO THAT I COULDN’T TALK TO YOU STRAIGHT. N ITS SO PAINFUL. I ALWAYS WANTED TO SAY THIS. YOU ARE REALLLLLY REALLLY BEAUTIFUL LIKE MY MOM. WILL YOU BE MY FRIEND AND TALK TO ME. என எழுதி லாவன்யா அக்காவிற்கு அனுப்பியே விட்டேன். யார்யா அந்தப் பொண்ணு? கலை மூலம் அழைப்பு வந்தது. சிறு கூச்சம், அசட்டுத்தனம், நண்பர்களின் கேலி என நடந்த அறிமுகப் படலத்தின் பின் அந்த அழகு தேவதையின் நட்பு வட்டத்தில் நானும் ஐக்கியமானேன். லாவன்யா அக்காவிற்கு அம்மா இல்லை, அப்பா மற்றும் தம்பிக்கு SISதான் அம்மாவாக இருப்பதை அறிந்து அன்றிரவு உண்மையாகவே அழுதேன். அம்மாவின் அழகு லாவன்யா அக்காவிடம் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான். PG யிலும் தொடர்ந்தது எங்கள் நட்பு. என் SENIOR RESEARCH FELLOWSHIPன் போது லாவன்யா அக்காவைப் பார்க்க நேர்ந்தது. ஒரு பயங்கர சாலை விபத்தில் சிக்கி, மிக்க சிரமத்தின் பின்னரே மருத்துவர்களால் பிழைக்க வைக்கப்பட்ட லாவன்யா SISSY. உடைந்த கால் கூடிக்கொண்டிருப்பதாகக் கூறினார். வலியுடன் விந்தி நடந்த போது நான் அழத்தொடங்கி இருந்தேன் அந்த அழகு தேவதையைப் பார்த்தவாறு. அவரைப் போன்றொரு அழகான பெண்ணை நேற்று முன் தினம் அலுவலகம் செல்லும் பேருந்தில் பார்க்க நேர்ந்தது. தெரிந்த ஆசிரியர்களில் அவர் தெரியாத அறிமுகம். இறங்குகையில் கவனித்தேன், அவர் விந்தி நடப்பதை. தேவதைகளுக்கு இறக்கைதான் முக்கியமே தவிர கால்கள் அல்ல. அவர்கள் அறிவென்றும் அன்பென்றும் தங்கள் இறக்கைகளை விரிக்கத் தவறுவதே இல்லை.
MATHS MISS RAJESWARI, BIOTECH MADAM PARVATHI, PARAMJEET KAUR என தேவதைகள் எப்பொழுதும் என்னுடன் பயணித்திருக்கிறார்கள்.
இவர்கள் தவிர்த்து, வெள்ளித்திரையில் திவ்ய பாரதி என்றொரு நடிகை என்னை வெகுவாகக் கவர்ந்தார். நிலாப் பெண்ணே என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க வேண்டும் என்பதற்காகவே, அவர் பருவமடையும் வரை இயக்குனர் காத்திருந்ததாகக் கேள்வி. ஆனால் அந்தத் தாரகை வெகு சீக்கிரம் மின்னி மறைந்து விட்டார். ப்ரியமானவளே! பாரதி கண்ணம்மா! எனத் தொடங்கி அவருக்காக எழுதிய கண்ணீர் கவிதை ஒன்று இப்பொழுதும் என் பள்ளி கால கவிதைப் புத்தகத்தில்.
அதற்குப்பின் UNDOUBTEDLY AISHWARYA RAI. அன்பே! அன்பே! கொல்லாதே! பாடல் அவருக்கே அர்ப்பணம்.
திரைப்படங்களில் சிம்ரன் மற்றும் காஜோல் சற்று வித்தியாசமாக எதிர்பாராத பொழுதுகளில் ஈர்த்தவர்கள். DDLJ முதல் KKHH வரை காஜோலின் கண்கள் சாமானிய தேவதைகளின் கதைகளுக்கு அழகு சேர்த்துள்ளன.
சிம்ரன்-கனவுக் கன்னி எனக் கவர்ச்சிப் பதுமையாகத் தள்ளி விட முடியாத அழகான பெண். VIP படத்தில் “மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே” பாடல் முடியும் முன் I LOVE YOU எனச் சொல்கையில் உயிரை ஊடுருவும் சிம்ரனின் கண்களைப் பார்ப்பதற்காகவே நிறைய நாள் நான் காத்திருந்ததுண்டு; பார்த்தாலே பரவசம் படத்தில் “முதலியார்! உன் பொண்ணோட நிலைமையைப் பார்த்தியா?” எனப் பொருமுகையில் சிம்ரன்; 12B CLIMAXல் மருத்துவமனையில் நிச்சலனமாக நிற்கும் சிம்ரன்; வாரணம் ஆயிரத்தில் “ சூர்யா! அம்மாகிட்ட வந்திடுடா!” எனும் சிம்ரன் என அழகிற்கு அழகாக அர்த்தம் சொன்ன சிம்ரன், கதாநாயகிகளுக்கும் கதையில் வேலையுள்ளது என அசர வைத்த சிம்ரன் சமீப கால சினிமாவில் ஒரு ஆச்சர்ய அறிமுகமே. BUT ONCE A SIMPLY BEAUTIFUL SIMRAN. இப்பொழுது ஜாக்பாட் என்று கூத்தடிப்பது நிஜமாகவே UNBEARABLE.
இதை எழுதிக் கொண்டிருக்கையில் யோசிக்கிறேன். பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகெல்லாம் படைத்தவளோ என எழுதியது பொய்யாகவும் இருக்கக் கூடும். அழகான பெண்களை அவர்களாகவே ஆராதிக்கப் பெண்கள் தயங்குவதில்லை என்பது மெய்யாகவும் இருக்கக் கூடும். ஏனெனில் தேவதைகளின் தேசம் அழகானது மட்டுமல்ல ஆச்சர்யமானதும் கூட.
Monday, November 21, 2011
Saturday, November 19, 2011
Thursday, November 17, 2011
யானை, இரயில் மற்றும் கமல்.
ஞாயிறு பொதிகையில் செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது. சச்சின் டெண்டுல்கர் நூறாவது சதத்தை நழுவ விட்டார் என்ற வழக்கமான செய்தியைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தன் 57(!!)வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் என்ற வரலாற்று சிறப்பு மிக்க செய்திகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதை எல்லாம் எப்பப்பா செய்தியாக்கினீங்க?-SRIDHAR. எனது நான்காம் வகுப்பு வரை திரைப்படங்களை கிட்டத்தட்ட வெறுத்திருக்கிறேன். என் திரை விரோத விரதத்தை வெற்றிகரமாக முடித்து வைத்ததில் பெரும்பங்கு உலக நாயகனுக்கு உண்டு.
எனக்கும் தம்பிக்கும் நடைபெற்ற உலக யுத்தங்களில் முக்கியமானவை இரண்டு. ஒன்று காலை வேளையில் பள்ளிக்குக் கிளம்புவது. யாருக்கு முதலில் குளியலறை என்பது தொடங்கி யார் அம்மாவிடம் ஊட்டிக் கொள்வது எனத் தொடர்ந்து யாருடைய சாக்ஸ் என பள்ளிக்கான பேருந்து ஏறும் வரை தொடரும் யுத்தம், மதியம் உணவுவரை தொடரும். யுத்தம் II- OBVIOUSLY யார் BEST கமலா? ரஜினியா? என்பது தான். பின்னாளில் இருவரும் இருவரின் திறமைகளையும் ஆய்வு செய்து இருவரும் அவரவர் LINEல் BEST எனத் தெளிந்தது வேறு கதை. எனினும் இப்பொழுதும் வியப்பாக இருக்கிறது, HOW CRAZY I WAS ABOUT KAMAL THEN என நினைத்துப் பார்க்கும் போது!
புன்னகை மன்னன் படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் என எனக்கே தெரியவில்லை. அதிலும் ஹீரோ சேதுவை JUST LIKE THAT தூக்கிச் சாப்பிட்ட அந்த சாப்ளின் செல்லப்பா, UNDOUBTEDLY ONE OF THE BEST OF KAMAL. A BRILLIANT BLEND OF COMEDY
பதினாறு வயதினிலே(MY ALL TIME FAVOURITE; NONE TO BEAT THAT SAPPANI YET!) சலங்கை ஒலி, நிழல் நிஜமாகிறது(I HATE YOU SANJEEVI, AM I?), வாழ்வே மாயம்(எனக்கு படம் பிடிக்கலப்பா), மூன்றாம் பிறை(ESP. மூக்கின் நுனியில் அழுகையுடன் குழந்தையான தன் காதலியைத் தாலாட்டும் கண்ணே கலைமானேவுக்காக), நினைத்தாலே இனிக்கும்(WHAT A WAITING?). குருதிப் புனல்(A TOO EARLY PRODUCTION), சத்யா, குணா(ஒரு தீபாவளி ரிலீஸ் தளபதியுடன்), மகாநதி(அப்பா), செம STYLISH விக்ரம், சதி லீலாவதி (பலனிக் கண்ணு), தேவர் மகன்(மறக்க மனம் கூடுதில்லையே), அவர்கள், மைக்கேல் மதன காம ராஜன், PKS, வசூல்ராஜா (MASTER.OF MADRAS SLANG! LOVE THOSE DIALOGUE DELIVERIES ALWAYS, GREAT WORK), நாயகன், சிகப்பு ரோஜாக்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, ஹே ராம், எதையேனும் விட்டிருக்கக் கூடும், கணக்கிட முடியாது கமல் சாரின் காவியங்களை.
முக்கியமாக அன்பே சிவம்- தன்னை “செத்துப் போ” எனச் சொல்லி சபித்து விட்டுப் போனவனின் அடியாளிடம் “பொழச்சிப் போங்க” என கம்பீரமாகக் கூறிவிட்டுப் போன நல்லா @ நல்லசிவம். BRILLIANT KAMALJI. அன்பே சிவம் படத்திற்குப் பின், சில பல KHANகளை மறந்து விட்டு, நிறைய பேர் மீசை வளர்த்தார்கள் என ஞாபகம்.
மும்பை எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின் போதுதான், கமல் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யானைபோல், ரயில் போல் கமலும் என்றும் அதிசயம் தான். மருதநாயகமோ பொன்னியின் செல்வனோ, எதுவாயினும் ஒரு சரித்திர கதாநாயகனாகக் கமலைப் பார்ப்பதற்கு நானும் காத்திருக்கிறேன்.
Tuesday, November 15, 2011
கண்ணாடிக்காக
ஓராண்டு ஓடி விட்டது, நிழல் கண்ணாடி நிஜ உலகில் காலடி எடுத்து வைத்து. இத்தனை நாட்களும், என் எண்ணங்களை, உணர்வுகளை வர்ணம் பூசாத வானவில்லாக, வாசனைப் பூக்களாக, என் நாட்குறிப்பேட்டைப் போல் இயல்பாகத்தான் எழுதி இருக்கிறேன் என நம்புகிறேன். என் நிழலாகவும், என் மனதின் கண்ணாடியாகவும் எப்பொழுதும் உண்மையான என் உணர்வுகளாகவும் தான் இருந்திருக்கிறது கண்ணாடி. பூனாவின் ரிசர்வ் வங்கி வளாகத்தில், ஓரிரவில், நான் எழுதத் தொடங்குகையில் இருந்த மகிழ்ச்சியை, பெரும்பாலான சமயங்களில், கண்ணாடி எனக்கு வழங்கி இருக்கிறது. அதற்கும் மேல், நான் நானாக இருந்த நொடிகளின் பிரதிபலிப்பாய், ஒரு ஆத்மார்த்தமான நண்பனாய் என் மனசாட்சியாய் இருந்திருக்கிறது கண்ணாடி எனபதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.. கண்ணாடியின் சாரம் குன்றாமல், தனியே கிளைத்து மலர்ந்திருக்கின்றன, இன்னும் இரு பதிவுகள். எப்பொழுதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இசைக்காக ஒன்று. உலகத்தை இயக்கும் விசைக்காக மற்றொன்று. ALL ABOUT THE SWEET NOTHINGS WHICH RULE EVERYTHING IN THIS WORLD; THE INVISIBLE BUT INVINCIBLE, HIGHLY INFLAMMABLE N COMBUSTIBLE BUT INEVITABLE O2, THE UNIVERSE BREATH IN TO LIVE. எது எப்படியாயினும் வேடமிடாத வெளிச்சமாக என் வலைப்பதிவு தொடரவேண்டும் என்பதே என் ஆசை, கனவு, ஆவல் எல்லாம். கனவு மெய்ப்படும். இன்னும் எழுதுவேன்,.. நான் காஞ்சனா..
இரவின் மடியில்
நிலவும் தூங்க சென்று விட்ட
நிச்சலனப் பொழுது!
இரவு விளக்கின்
மங்கிய வெளிச்சத்தில்
விழித்திருப்பதாய் தோன்றும்
சில உறங்கும் வீடுகள் தொலைவில்.
இலைகளைக் கூடத் தாலாட்டித்
தூங்க வைத்து விட்டது
என்னுடன் விழித்திருக்கும்
குளிரில் குளித்த தென்றல்.
உறங்க நினைத்து
சன்னல் சாத்துகையில்
உயிரோட்டத்துடன் தெரிகிறது-
விடியும் முன்
சமைத்து குளித்து
நாளைய பகலுக்கு
வாழ்க்கையைத் தயார் செய்யும்
நடைபாதையோரக் குடும்பங்களின்
உறங்காத உலகம்.
Monday, November 14, 2011
Back From Home. Last year at Baramathi. This year at Kanchipuram. The Night remains cool as it is. Dawn only differs. Miles away. Life is strange but beautiful. Mona, Ice, Uma, Udhay(But where're you Man! you're still 5 years old in my memories!), Padma Anna, Bhavesh Bhaiya,Srija,Paramjeet, Vyoma Mme, Shradhha, Jo,Kavi, Jo..Friends....You too made my Life special....Yes...Life is strange but beautiful.
Friday, November 11, 2011
நீ நான் நிலா..
அந்தரத்தில் தொங்க விடப்பட்ட ஒரு அலங்கார விளக்கு போலும், வட்டமாக வடிவெடுத்த ஒரு புதிய கோழி முட்டை போலும், கருப்பு வண்ணத்திரையில் யாரோ வட்டமாக துளையிட்டது போலும் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது பெளர்ணமி நிலா.கடந்து போகும் மேகங்களில் நிலா சிரிக்கிறது, முறைக்கிறது கண்ணைக் கட்டிக் கொண்டு கண்ணாமூச்சி ஆடுகின்றது. வட்டம், பிட்ட அப்பமாகி, அரை வட்டமாகி, பிறையாகி, முழுதாய் மறைந்தோடி, பளீரென மீண்டும் பிறந்து வருகின்றது நிலா இன்னும் பிரகாசமாய், இன்னும் இன்னும் இன்னும் அழகாய். மேகங்கள் சூழ்ந்த கார்கால இரவுகளிலும், மேகமே இல்லாத கோடை இரவுகளிலும், தனக்கென ஒரு தனித்துவத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறது நிலா. நிலா கும்பல்களிலும், கண்ணாமூச்சி ஆட்டங்களிலும், குலை குலையாம் முந்திரிக்காயிலும் சிறார்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது நிலா. தனி இரவுப் பயணங்களிலும், கால் நனைக்கும் கடலலைகளிலும், கோடையின் மொட்டை மாடி இரவுகளிலும், நில்லாமல் உடன் வருகிறது நிலா, மனிதரைப் பாடேன் என நான் சபதமேற்ற ஓரிரவிலும், என் மொழி வைராக்கியம் மெல்லக் கரைந்த மற்றொரு இரவிலும் சலனமற்ற சாட்சியாக இருந்தது நிலா. கவியரங்கம் முடிந்து நாம் கதை பேசிப்போன இரவுகளிலும், மெளனத்தின் கைபற்றி நாம் காலாற நடந்த நாட்களிலும், நம் நட்பின் பொய் விரிசலை மெய்யான உன் கண்ணீரும் பொய்யான என் கோபமுமாக ஒரு புதிய பசை கொண்டு பசிய ஒட்டிச் சென்ற அந்த பனி ஊறிய இரவுகளிலும் நட்பிற்கு நீர் பாய்ச்சி நம்மோடு இருந்தது நிலா. சிம்லாவின் சில்லென்ற இரவுகளிலும், சென்னையின் சூடான இரவுகளிலும், யமுனை சலசலத்த தாஜ் மகால் இரவுகளிலும், கங்கை ஆர்ப்பரித்த ஹரித்வார் இரவுகளிலும், சேர்ந்தல்லவா பயணித்தது இந்த நிலா. நிலா நினைவுகள் இன்று பெளர்ணமியாக உருவெடுக்கக் காரணம் வெண்ணிலா, என் நிலா, என்னை நானாகவே அப்படியே ஏற்றுக் கொண்ட என் உயிர்த் தோழி வெண்ணிலாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூற விழித்துக் கொண்டிருக்கும் இந்த 11.11.11லும் என்னுடன் விழித்துக் கொண்டிருக்கிறது என்னுடன் பிறந்து, வளர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் மாறாத அதே நிலா. HAPPY BIRTHDAY ICE. நிலவும் நானும் பாடிக் கொண்டிருக்கும் உனக்கான பிறந்த நாள் வாழ்த்துப் பாடல், உன் காதுகளை எட்டுகிறதோ இல்லையோ? உன் கனவுகளையேனும் தாலாட்டட்டும். THANK YOU FOR BEING MY FRIEND N FOR ACCEPTING ME AS I AM. GOD BE WITH YOU. MANY HAPPY RETURNS. GOOD NIGHT/MORNING.
Wednesday, November 9, 2011
Awaiting
Sachin again missed the ton. Don’t know how n why, but it always happens. India wins but Sachin misses his century. Its long since I’d seen the celebrations of Sachin’s hundred n India ’s win together. How long to wait da? Awaiting to write the next Congratulations message on your Blow up. Do it soon.
Friday, November 4, 2011
செருக்கிழந்த சிங்கமாகிறேன்
அருவமாய் நீ என்னுள்
அசைந்து நகர்கையில்!
தவிர்ப்புக்கும் தவிப்புக்கும்
நடுவில் நடக்கும்
தர்க்கத்தின் உச்சத்தில்
தனித்தனியாகி விடுகிறது
அறிவும் மனமும்.
உறக்கமும் விழிப்புமற்ற ஓர்
உன்னத தருணத்தில்
உரக்க எழுகிறது
உள்ளுக்குள் ஒரு கேள்வி!
முதிராத இரவுகளில்
முடியாத புதினமாய்
கரையும் கனவுகளின்
கடைசி அத்தியாயத்தில்,
உன் கைகள்
ஏந்தி இருப்பது
எனக்கான
காத்திருப்பையா?
இல்லை….
கதவடைப்பையா?
Tuesday, November 1, 2011
Sorry Raja Sir!
Very very Sorry Raja Sir. We know, Your loss is irrecoverable.இளையராஜா சார்! இன்று எங்கள் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய எங்கள் ஆயாவின் நினைவு நாள். பாட்டி என்பது சற்று அன்னியமாக இருக்கிறது.105 வயதிலும் தளராமல் 113 வயது கணவருக்கு- எங்கள் தாத்தாவுக்குத்தான்-, அன்பை மட்டுமே பரிமாறிய எங்கள் ஆயாவின் நினைவு நாளில், இனி ஜீவா அம்மாவையும் நினைத்துக் கொள்வோம். தாங்கள் தங்கள் மனைவியை எவ்வளவு நேசித்திருக்கிறீர்கள் என்பதற்கும், ஜீவா அம்மா அவர்கள் தங்களை எவ்வளவு பத்திரமாக பொக்கிக்ஷம் போல் போற்றி வந்திருக்கிறார் என்பதற்கும் தங்கள் இசையே சாட்சி. அதிலும் “ ஒரு ஜீவன் அழைத்தது; என் ஜீவன் பாடுது” என ஜீவன் எனத் தொடங்கும் பாடல்களில் இருந்த ஜீவனுக்கு அவர்களும் காரணம் என யாம் அறிவோம். தங்களுக்கு ஆறுதல் கூறும் நிலையில் நாங்கள் இல்லையெனினும், இசையோடு கலந்து விட்ட ஜீவா அம்மையாருக்கு தங்கள் பாடல்களே சமர்ப்பணம்.
(1)ஆராரிரோ பாடியதாரோ! தூங்கிப் போனதாரோ!
(2) கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது? தண்ணீரில் நிற்கும் போதே வியர்க்கின்றது!
(3) வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நான் இருந்து வாடுகின்றேன்.
இசையே அருமருந்தாகும், காத்திருக்கிறோம் தங்கள் கண்ணீரும் காயங்களும் ஆறுவதற்காக.
Subscribe to:
Posts (Atom)