என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.. LET ME SPELL CHECK THAT. இப்போதைக்கு WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR
Saturday, December 31, 2011
Good bye 2011
இரண்டாயிரத்து பதினொன்றின் இறுதி இரவில் இல்லம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். 2011ன் இரவென்று சொல்லி விட முடியாது. நள்ளிரவு என்று சொல்லிக் கொண்டிரும்போதே 2012 பிறந்து விடும் நிறைய நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு. பேருந்தின் இரண்டாவது இருக்கையில் பயணம் என்பதை விட, அமர இருக்கை கிடைத்ததே பெருமகிழ்ச்சி. சன்னலுக்கு வெளியே கடக்கும் இரவு தெளித்த வாசல்களில் நேற்று பெய்த அடை மழையின் மிச்சங்கள். ஒற்றை குண்டு பல்பு எரிய அடைத்த வீடுகளுக்குள் உறங்கப் போய் விட்ட இந்தக் குடும்பங்களுக்கும் நாளை புத்தாண்டு தான். வயது வித்தியாசமின்றி டாஸ்மாக் வாசலில் கூடிக் குதூகலித்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கும் நாளை புத்தாண்டுதான். என்ன! நாளைய விடியலில் அவர்கள் நாற்று நட,, கட்டிடம் கட்ட, சாலை பராமரிக்க, சுத்தம் செய்ய என வேலைக்குப் போவார்கள். இவர்கள் கொண்டாட்டத்தின் அயர்வில் உறங்கிக கொண்டிருப்பார்கள். புத்தாண்டு விடிந்துதான் இருக்கும். மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவர்களைப் பார்த்து உனக்கு ஏன் இத்தனை கோபம் என்பீர்கள். கோபம் ஒன்றுமில்லை. குடி போதையில் அங்கே விபத்து, இங்கே பிரச்சனை என்று கேட்காமல் இருந்தால் சரிதான்.
2011 WAS A TOUGH YEAR என்று சொல்லிப் புலம்பியதுண்டுதான். ஆனால் 2011 தான் என் மேலாண்மைத் திறனை எனக்கு உணர்த்தியது. கடினமான சந்தர்ப்பங்களைச் சமயோசிதமாக சமாளிக்கும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொடுத்தது. தனித்து விடப் பட்டாலும் தழல் போல் போராடும் சக்தியைக் கற்றுக் கொடுத்தது. தினமும் தாமதமாகத் தான் அறை(அ)) வீடு திரும்ப வேண்டும் என்றாலும் சலித்துக் கொள்ளாமல் அலுவலகம் செல்லும் பொறுமையைக் கற்றுக் கொடுத்தது. பெரியப்பாவின் மறைவு, சில முள் மணிகள், நிறையப் போராட்டம் எனக் கடந்தாலும் அறிவும், சமூகத்தில் மரியாதையும் உயர்ந்தது,,,அழகான புதிய நட்புக்களின் வரவும், எல்லாவற்றுக்கும் மேல் என் கல்லூரி நண்பர்களுடன் மீண்டும் இணைந்தது என்று 2011ன் கொடை ஏராளம்.
கண்ணாடியில் எழுத்து, புகைப்படங்கள் எனப் பதிவு சதமடித்தது சிறப்பு.. மாற்றங்கள் வளர்ச்சிக்கான மாற்றங்கள் என எடுத்துக் கொள்கிறேன்.
2011த்தைச் சிறப்பாக்கிய சுற்றத்திற்கும், நட்பிற்கும், சக பணியாளர்களுக்கும்,, வாடிக்கையாளர்களுக்கும், அப்பா, அம்மா, அண்ணா, தம்பி அனைவருக்கும் நன்றி. இன்று பிறந்த நாள் கொண்டாடும் அம்மாவிற்கு .ஆயிரம் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
BYE BYE 2011.
WELCOME 2012.
HAPPY NEW YEAR…………………………………… LOVE ALWAYS KANCHANA…
Friday, December 30, 2011
Wednesday, December 28, 2011
Monday, December 26, 2011
MERRY CHRISTMAS
இன்று கிருஸ்துமஸ். தேவ மைந்தனின் பிறந்த நாள். பாவிகளையும் இரட்சிக்க வந்த பரமன் மண் மீது ஜனித்த நாள். தன்னை சிலுவையில் அறையக் காத்திருக்கும் உலகத்தைக் காக்க அன்பைச் சுமந்து வந்த நல் மேய்ப்பன் மனித வடிவெடுத்த நன்னாள்.
கிருஸ்துமஸ் தினம் என் பள்ளிக் காலத்தின் நினைவுப் புதையலில் நிச்சயம் தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்து வைத்துள்ளது. SUPPOSE CHRISTMAS, TABLEAU, XMAS TREE, STARS, SANTA CLAUS, SURPRISE GIFTS, CHOCOLATES, மந்திரக்கோல் இவற்றுடன் குழந்தை இயேசு பிறந்த நற்செய்தியை ஒரு குழந்தை தேவதை வருடம்தோறும் சொன்னதுண்டு. சொன்ன குழந்தை நான் (நான் நான் நானேதான்). தேவதையின் வெண்ணிற ஆடை எப்பொழுதோ யாரிடமோ போய் விட்டது. சொன்ன தேவதை நிழற்படத்திலும் நிஜத்திலும் இன்னும் இருக்கிறாள் அப்படியே அந்த கிருஸ்துமஸ் நினைவுகளைப் பொக்கிக்ஷமாகச் சுமந்து கொண்டு.
பிறப்பால் இந்துவாக இருப்பினும் சிறு வயது முதலே எல்லா மதங்களையும், எல்லா தெய்வங்களையும் எல்லா கோயில்களையும் ஒன்றாக மதிக்கச் சொல்லித் தந்திருக்கிறார் என் தந்தை. பிதா, சுதன், பரிசுத்த ஆவியெனக் கூறும் கிருத்துவ சகோதரர்களும், மாதா, பிதா, குரு, தெய்வம் எனக் கூறும் இந்து சகோதரர்களும், தந்தை சொல் மிக்க மந்திரமில்லை எனக் கூறும் அவ்வைத் தமிழும் குறிப்பிடும் என் அப்பாவுடன் கிட்டத்தட்ட எல்லா மத ஆலயங்களையும் சிறு வயது முதலே சுற்றும் வாய்ப்பு எனக்கும் என் சகோதரர்களுக்கும் கிடைத்தது. கீதையும், பைபிளும், குரானும் எப்பொழுதும் எங்கள் வீட்டு பூஜை அறையை அலங்கரிப்பதாலோ என்னவோ, பதினான்கு ஆண்டுகளாக நான் படித்த பள்ளியை நடத்தியது ஒரு கிருத்துவ நிறுவனம் என்றாலும் இயேசுவும் முருகனும் கண்ணனும் எனக்கு ஒன்றாகத்தான் தெரிந்தார்கள்.

டிசம்பர் கிருஸ்துவுக்கென்றால், மார்கழி கிருக்ஷ்ணனுக்கு. அதிகாலையின் பஜனைப் பாடல்களும், நள்ளிரவின் கிருஸ்துமஸ் கேரல்ஸ் எனும் நாம சங்கீர்த்தனங்களும் கேளாமல் விடிந்ததுண்டோ எந்த டிசம்பர்/மார்கழி நாட்களும்? அதனால் தானோ என்னவோ என் பள்ளி மற்றும் கல்லூரிப்பருவத்தில் மதமாற்றம் என்ற மாயையை வெகு சுலபமாகக் கடக்க முடிந்தது. இந்தத் தெளிவை உருவாக்கியதில் பெரும் பங்கு என் பள்ளிக் கால MOTHERS AND SISTERS ஐயே சேரும். SR.ஜோதி.! தலைமை ஆசிரியராகவும், நல் ஆசானாகவும், நல்ல சகோதரியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும், இருள் விலக்கிய ஒளி விளக்காகவும், ஒழுக்கத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் தானே நல் எடுத்துக்காட்டாகவும் இருந்து எங்களை நாங்களாக்கிய SR.JOTHI. MY SINCERE RESPECTS FOR YOU SISTER. ஒவ்வொரு ஆசிரியர் தினத்திலும் இன்னும் நான் உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
பகிர்ந்து கொள்வதையும், சக மனிதரை மதிப்பதையும் நேசிப்பதையும், இரை தேடுவதோடு இறையையும் தேடு என்ற மாபெரும் தத்துவத்தையும் IN THE NAME OF THE FATHER, AND OF THE SON, AND OF THE HOLY SPIRIT, நான் படித்த CHRISTIAN SCHOOLS அன்று சொல்லிக் கொடுத்தன. அதை நான் இன்றும் பின்பற்றுகிறேன்.
இன்றும் நான் நம்பும் இன்னுமொரு SENTIMENT. அன்றைய தினத்திற்கான தேவ வாக்கியமாக, அசரீரியாக வழியில் தென்படும் சர்ச் சுவர் வசனங்கள். என் எல்லா சோதனைக் காலங்களிலும், குழப்பமான சூழ்நிலைகளிலும் சொல்லி வைத்தது போல் ஏதோ ஓரிடத்தில் தோன்றும் “பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன்” என்ற வாக்கியம்.
இதையெல்லாம் தந்த இயேசுபிரானின் பிறந்த நாளை குதூகலமாகக் கொண்டாடிய காலங்கள் உண்டு. ஆனால் மகிழ்ச்சியான இந்த நாளில் நீ ஏன் விபரீதமான முடிவை எடுத்தாய் அறிவொளி? எத்தனையோ அழகான கிருஸ்துமஸ்கள் வந்தாலும், என் பால்ய கால நண்பனே, உன் மறைவுக்கான அதிர்ச்சியுடன் அழுகையுடன் விடிந்த அந்த கிருஸ்துமஸ் தினத்தை மறக்க முடியாமல் தான் கழிகிறது ஒவ்வொரு டிசம்பர் 25ம். ஒரு சிறந்த நிர்வாகியாகவும் கவிஞராகவும் இருந்த உன் தந்தை இப்பொழுதும் வீட்டிற்கு வருகிறார் என் தந்தையின் நண்பராக மட்டுமல்ல, என் நண்பனின் தந்தையாகவும். தற்கொலை எதற்கும் முடிவல்ல என்று ஆழமாக எனக்கு உணர்த்தியது நீ தான். அதை நான் எப்பொழுதும் எல்லாரிடத்திலும் சொல்லி வருகிறேன். முடிந்த வாழ்க்கையை திருத்தி எழுத முடியாது. நம்மை நாம் திருத்திக் கொள்ளலாம், நாம் மற்றவர்களையும் திருத்தலாம் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை அந்த கிருஸ்துமஸ்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தது. ஆண்டுகள் ஓடிவிட்டன. சோகங்களும் மெதுமெதுவாக.
எனக்கு மிகவும் பிடித்த நட்சத்திரங்கள் ஒளிர நான் நடந்து போகும் வழி எங்கும் அன்பின் வெளிச்சம் விரிகிறது அனைவரின் வாழ்விலும் குழந்தை இயேசுவின் பிறப்பு புதிய வெளிச்சத்தையும், புன்னகையையும் நிச்சயம் விதைக்கும் என்ற உன்னத செய்தியோடு. எழுத்தாளர் திரு. பவா செல்லதுரை அவர்களின் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதையின் இறுதியில் வருவதுபோல் தாயும் சேயும் நலமும் பூரண நலம் என்ற மகிழ்ச்சியின் செய்தியோடு.
MERRY CHRISTMAS.
Tuesday, December 20, 2011
இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு உனக்கும் டிக்கெட் சொல்லிடட்டுமா என்றான் SRIDHAR. QUARTERLY CLOSING DA. NO CHANCE என்றேன் வருத்தத்துடன். LAST TIME GOT TICKETS AT LAKSHMAN SHRUTHI. WE ENJOYED THE SHOW IN 2006 AT CHENNAI TILL MIDNIGHT. A FANTASTIC MUSICAL NIGHT. A SECOND CHANCE. நன்றாகத்தான் இருந்திருக்கும். நன்றாகத்தான் இருந்திருக்கும்.,……….
Poraali
போராளி (முழுமையாக) மற்றும் ராமன் தேடிய சீதை (கொஞ்சம் கொஞ்சம்) மற்றும் நீ வருவாய் என (முதல் 2 பாடல்கள் + வங்கி மேலாளர் PORTION) திரைப் படங்களுடன் ஞாயிறு மாலை கழிந்தது. மனித மனங்களையும் உறவுகளையும் வெவ்வேறு கோணங்களில் கையாண்ட திரைக்கதைகள். பிடித்திருந்ததா தெரியவில்லை. ரசிக்கும் படி இருந்தன. வெகு நாட்கள் கழித்து அமர்ந்து பார்த்த புதிய திரைப்படம் போராளி. GOOD SHOT SAMUTHRAKANI N SASI . BUT…SHOULD HAVE CUT DOWN GORI BLOODY SECOND HALF.
Friday, December 16, 2011
sms
Friends!Did you visit my new blog "sms". Stay in touch with my new blog. You can send your SMS too,in this page...
Wednesday, December 14, 2011
FEAR NOT
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
துச்சமாக வெண்ணிநம்மை தூறுசெய்த போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்

I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though the entire world stands united against me,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though I’m belittled and vilified,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though I’m reduced to live by begging for food,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Though I’ve lost everything that I yearned for,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Even if my own friends try to poison me,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Even when confronted by an aggressor’s uniformed armies,
I’m not afraid, not afraid am I. I have no such thing as fear.
Even if the sky falls on my head,

Monday, December 12, 2011
TO D M SARON
என் வலைப் பதிவும் தங்கள் வலைப்பதிவும் ஒரே ரசனையில் ஒரு வெண்மலரைப் பின்னணியாகக் கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது பவா சார். நான் காஞ்சனா. என் தம்பி DR.SRIDHARஐ தாங்கள் அறிவீர்கள். நாங்கள் இருவருமே தங்கள் நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை சிறுகதையின் மிகப் பெரிய ரசிகர்கள். நான் நடந்து வரும் வழி எங்கிலும் நட்சத்திரங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றன. இந்த கிருஸ்துமஸ்ஸிலும் குழந்தை ஏசுவின் வருகையை, தாயும் சேயும் நலம் என்ற நற்செய்தியை கேட்க ஆவலாக உள்ளோம். தங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன். வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களுடன் நான் காஞ்சனா.
Thursday, December 8, 2011
Wednesday, December 7, 2011
Friday, December 2, 2011
Thursday, December 1, 2011
WHY THIS கொலை வெறி DHANUSH AND ANIRUDH?
WHY THIS கொலை வெறி DHANUSH AND ANIRUDH? வாழ்க ராணி; வாழ்க ராஜாங்கம் என இளையராஜா, அடுத்த வாரிசில் அழகாக மெட்டமைத்த வாழ்த்துப் பாடலை, இப்படிக் கூட கொலை செய்ய உங்களால் மட்டுமே முடியும் MR ANIRUDH. அது வாழ்த்து; இது வசை. SUCH A BRILLIANT SCHOLARLY LYRICக்கு பெருமையடித்துக் கொள்ள உங்களால் மட்டுமே முடியும் MR.DHANUSH. HANDல் GLASS. GLASSல் SCOTCHஆ. தண்ணியடிக்கிறதுக்கு தத்துவம் பேசாதீங்க தனுக்ஷ். TASMAC வாசலில் தமிழ்நாட்டின் தாலிகள் குவிந்து கிடப்பது உங்கள் கண்களுக்கு என்றும் தெரிந்ததே இல்லையா? எல்லோரும் நல்லாத்தானய்யா இருந்தீங்க? 14-15 வயசிலேயே தண்ணி, தம், ஈவ் டீசிங், எத்தனை வயசு வாழணும்னு ஆசைடா உங்களுக்கெல்லாம்? போதாததற்கு நீங்க பார்க்கிற பெண் உங்களைப் பார்க்கவில்லை என்று போதை, புலம்பல் வேறு? பத்தாவதில் நான்கு பாடங்களை ஆறு முறை எழுதி பாஸ் ஆகிவிட்டு, பாலிடெக்னிக் போகும் பையன், அவன் படிக்கும் பாலிடெக்னிக் வருவதற்குள், பேருந்தே அதிர பத்து முறை இதே பாடலை தன் செல்போனில் பாட விடுகிறான்.
இந்த உலக மகா பாடலுக்கு விளம்பரம் செய்ய எல்லா சேனலிலும் ஒரு TEAM. RING TONE, CELL PHONE நேயர் விருப்பம் எனத் திரும்பத் திரும்பப் போட்டு TENSION பண்ண ஒரு கூட்டம். பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வருகிற கொலை வெறிக்கு,,,
Subscribe to:
Posts (Atom)