Tuesday, February 28, 2012
Monday, February 27, 2012
என்ன முயன்றாலும்
கண்ணீர் சிந்தாமல்
கடக்க முடிந்ததே இல்லை
இந்தப் பாடல்களை,
_____________________________________________________
“தேனே! தென்பாண்டி மீனே!”-
படம்: உதய கீதம்.
_____________________________________________________
“அழகிய கண்ணே! உறவுகள் நீயே! நீ எங்கே!
இனி நான் அங்கே! என் சேய் அல்ல!
தாய் நீ! “
படம்: உதிரிப் பூக்கள்
______________________________________________________
“கண்ணே! நவமணியே!
உன்னைக் காணாமல் கண்ணுறங்குமோ!”
படம்- என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு.
_______________________________________________________
பாடல் முடிந்தவுடன்
பற்றிப் படர்ந்து அழுத்தும்
மெளனத்தையும் சோகத்தையும்
தவிர்க்கவே முடிந்ததில்லை
இந்தப் பாடல்களின் முடிவில்.
“ நினைத்து நினைத்துப் பார்த்தேன்!
நெருங்கி விலகி நடந்தேன்!”
படம்: 7G ரெயின்போ காலனி
________________________________________________________
“ பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப் பார்த்தேன்!”
படம்: உயிரே
_________________________________________________________
“என்ன குறையோ!
என்ன நிறையோ!
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்!”
படம்: மந்திரப் புன்னகை
____________________________________________________________
Tuesday, February 21, 2012
Sunday, February 12, 2012
உறக்கத்திற்கு ஓய்வு கொடுத்துவிட்டு
இதோ விழித்திருக்கிறது
இன்னும் ஒரு இரவு.
சன்னலுக்கு அப்பால்
சத்தமடங்கிய ஊர்,
இருள் போர்வைக்குள்
இதமான தூக்கத்தில்.
யார் கனவில்
யார் யாரோ!!
குழல் விளக்கின் துணையுடன்
குளிர் விரட்டிக் கொண்டே
இணைக்க முயல்கிறேன்
இரைச்சலில்லா மனமெங்கும்
இறைந்து கிடக்கும்
வார்த்தை மலர்களை!
சரம் வேண்டுமா?
மாலை வேண்டுமா?
தீர்மானிக்க முடியவில்லை..
இரண்டில் எது
மிக அழகென்று?
செடியில் இருந்தபோதும்
கொடியில் இருந்தபோதும்
மரத்தில் இருந்தபோதும்கூட
மனதில் ஐயம் எழவில்லை.
அழகாக இருந்தது
மலர் மலராகவே!
கோர்க்க முயல்வதால்தான்
தோற்றுக் கொண்டிருக்கிறேன் போலும்-
மலர்களைப் போல்
சில வார்த்தைகளையும்
சிற்சில வாக்கியங்களையும்!
சரி தான்!
இருந்து விட்டுப் போகட்டுமே!
இருந்து விட்டுத்தான் போகட்டுமே
அவை வார்த்தைகளாகவே!
அலங்காரத் தோரணம் கட்ட
அவதி எதற்கு?
அலுத்துக் கொள்கிறது மனம்!
அயர்ந்து உறங்கும்
அருகாமைப் படுக்கைத் தோழியை
அதிக பட்ச பொறாமையுடன்
அழைத்துப் பார்க்கிறேன்-
அசைவொன்றும் இல்லை!
இரவின் மடியில்
இறுதியாக விளங்கிற்று-
உரத்த சிந்தனையை விட
இந்த நேரம்
உறக்கத்திற்கே மிகச் சிறந்தது என்று.
இம்முறை தோன்றியது
கவிதையல்ல கொட்டாவி………!
Friday, February 10, 2012
Tuesday, February 7, 2012
Subscribe to:
Posts (Atom)