கால் கொலுசு சத்தமிட
ஊர் முழுவதுவதும் சுற்றிவந்த
மாலைகளின் வசீகர நினைவுகளில்
அப்பாவின் மிதிவண்டி
முன்னிருக்கைக்காக
இன்னும் தவித்திருக்கிறது
மனது!
காலங்கள் கடந்த பின்னும்
என் கால் புழுதி துடைத்து
ஏந்திச் சென்ற தோள்களிலேயே
தொங்கிக் கொண்டிருக்கிறது
ஆசை ஆசையாய் மனது!
நான் நானாக இருப்பதற்கும்-என்
நாட்கள் நலமாய் இருப்பதற்கும்
நாள்தோறும் துணையிருக்கும்
அப்பாவிற்கு
நன்றியென என்னால்
எதைச் செய்துவிட முடியும்?
அப்பாவிற்கு நன்றி என்பதே
அர்த்தமற்றதாகாதோ?
உயிர் தந்தவர்க்கும்
உலகம் தந்தவர்க்கும்
நன்றி சொல்ல முடியுமா
என்ன?
THANKS APPA!
WISH YOU A VERY
HAPPY BIRTHDAY!