Tuesday, April 10, 2018


எளியோர் வாட பொறுப்பதில்லை சூரியன்;
வறியோர் வாட பொறுப்பதில்லை வான்மழை;
யாவும் சரி என்பதில் உண்மையில்லை எனில்
யாவும் தவறென்பதிலும் உண்மையில்லை;
தெவிட்டத் தெவிட்ட தேன் சுவைக்க வைக்கும் வாழ்க்கைதான் மறு நாள்,
வலிக்க வலிக்க ஊசி குத்தி மருந்தினை ஏற்றுகின்றது!

அதோ சுற்றிச் சுழன்றோடிக் கொண்டிருக்கும் பேய்க் காற்றின் நடுவே
வெறும் காய்ந்த சருகுகளும் காகிதங்களுமே இருக்கின்றன;
காண்கின்ற என் கண்களில் கூட அல்ல,
மனதில் ஆடிக் கொண்டிருக்கிறது பேய்!

மனசு எப்படி பார்க்கிறதோ,
அவ்வளவு தான்யா வாழ்க்கையும்.
போலாம் போன்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்!
போலாம் ரைட்!

No comments:

Post a Comment