Friday, December 27, 2019



குளமான கண்களுடன் தான் இன்றும்
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறேன்.
துளிக் கண்ணீரும் கூடாதென
எப்போதும் தாங்கி நின்றீர்களே என்னை?
கடலெனக் கண்ணீரில் கரைகிறேன்.
இப்போது,
எங்கே இருக்கிறீர்கள் அப்பா?
என்னை அழ வைத்துவிட்டு
எங்கே போனீர்கள்?

ஓய்ந்த நாளின் முடிவில்
சாய்ந்து கொள்ள உங்கள்
தோள்கள் இல்லை.
அரற்றும் இந்த மனதிற்கு
ஆறுதல் சொல்ல உங்கள்
குரல் இல்லை.
" அம்மா" என்றழைக்க மாட்டீர்களா
எனத் தெருவெங்கும் தேடுகிறேன்.
என் அழுகுரல் உங்களுக்குக்
கேட்கவே இல்லையா அப்பா?

இப்போதுதான் கிளம்புகிறேன் அப்பா
என்ற அழைப்புக்கு,
"பார்த்து வாம்மா" எனும் பாசக்குரல்
கேட்காதா என,
பேருந்து நிலையத்தில் எனக்காகக்
காத்து நிற்பீர்களா என,
குளிருக்குப் போர்த்தியிருக்கும்
யாரோ ஒருவரின் சால்வைக்குள்
இருப்பீர்களா என
தனியே இந்த இரவுகளின் சாலைகளில்
தவித்துத் தேடியவாறு
கடந்து கொண்டிருக்கிறேன் அப்பா!
துயரத்தை எங்களுக்குத்
துணையாக வைத்துவிட்டு
எங்களை விட்டு விட்டு
எப்படிப் போனீர்கள்
என்பது புரியவே இல்லை!

எங்களை நிம்மதியாக உறங்கச் செய்து விட்டு
எங்களுக்கான கனவுகளுடன்  நீங்கள் விழித்திருந்த இரவுகளை மட்டுமே
அறிந்திருக்கிறேன்.
எங்களை நித்தம் அழ வைத்து விட்டு
எவ்வாறு உறங்கிப் போனீர்கள் அப்பா!
ஒரு நொடியேனும் உங்கள்
அறிவு உறங்கியதில்லை,
அன்பு உறங்கியதில்லை,
நேர்மை உறங்கியதில்லை,
உலகிற்கான உழைப்பு உறங்கியதே இல்லை.
எனில்,
எங்களைத் தாங்கிய
உங்கள் நெஞ்சம்
உறங்கிப் போனதெப்படி அப்பா?

அப்பா...
அப்பா...
அப்பா...
உங்கள் உறஙகா இதயம
உறஙகிப் போனது எப்படி?

என்னைச் சுமந்த இதயம்
எப்படித் துடிக்க மறந்தது
அப்பா!
அந்த மணித்துளியில்
என் முகம் நினைத்தீர்களா?
ஐயோ! என் மகளே!
என ஒரு முறை அழைத்தீர்களா?
இன்றிரவு முதல் நான் அருகிலில்லாமல்
எப்படி உறங்குவாய் மகளே
என பதைபதைத்தீர்களா?
அச்ச கணங்களில் இனி
அப்பா இன்றி என் செய்வாள்
என் மகள் எனக் கடவுளிடமே
கேள்வி கேட்டீர்களா!
உலகத்தின் மிகச் சிறந்த மகளுக்காக
ஏழுலகினும் மிக மிகச்சிறந்த
என் அப்பா!
எனக்காக
நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த கடவுளுக்கு
ஏன் காதுகள் கேட்கவில்லை அப்பா?

உலகத்தின் அன்பு மொத்தத்தையும்
ஆறுதல் மொத்தத்தையும்
பாசம் மொத்தத்தையும்
பரிசாகத் தன் மகளுக்குத் தர
வரம் என எனக்கே எனக்கென வாய்த்த
அப்பாவைப் பார்த்து, பேசி,
என் அச்சம், கோபம், குழப்பங்கள்,
வெற்றி, மகிழ்ச்சி, என
எல்லாவற்றிலும் எனக்காக துணை நின்ற
அப்பாவின் ஆசைக் குரல்,
அன்புக் குரல்,
தங்கக் குரல்,
கம்பீரமான குரல் கேட்டு
மாதம் ஒன்றாகி விட்டதா?

என் மொத்த அச்சங்களையும்
ஒற்றை சுமைதாங்கியாய் தாங்கி
நானே ஆகி என் நிழலாக,
நிஜமாக, உயிராக்
என் உலகாக இருந்த அப்பாவை
இனி எப்போது காண்பேன்?

என் ஒரு நொடி மெளனத்தைக் கூட
உடனடியாகக் கண்டு கொள்ளும்
உங்கள் இதயத்தில்
எங்கும் எங்கெங்கும் நிறைந்திருந்த
செல்ல மகளைத் தவிக்க விட்டுச் செல்ல
எப்படி ஒத்துக் கொண்டீர்கள் அப்பா?
அது சாத்தியமே இல்லையே!

நீங்கள் இல்லா வீட்டின் வெறுமை
தாங்க இயலாததாக,
எதைக் கொண்டும்
நிரப்ப இயலாததாக
நம்ப இயலாததாக
ஏற்றுக் கொள்ளவே முடியாததாக
இருக்கிறது அப்பா!
நாங்கள் என்ன செய்வோம்?
அப்பா!
நாங்கள் என்ன செய்வோம்?

Monday, December 23, 2019

My vision is blurred Appa.
My eyes are struggling all the time
To stop letting the tears rolling down.
I couldn't see any future before my eyes.
There's no way seen ahead.
Seems like all the gates are closed.
Appears that all the doors are shut.
You shouldn't have left Appa.
It's too too unfair.
I always wanted to quit.
But, may be Gods are so
So upset with me.
They didn't hear me.
May be I'm that unfortunate being.
They took my father with them.
May be it's my misfortune.
It's coz of all my sins.
You had been my Life Appa.
You should have lived 100 years.
I should have come with you and taken that Moment.
You should have lived Appa.
You must have.
Couldn't you see, how we are suffering without you?
Can't you see?
Haven't heard you for 28 days now Appa.
Haven't seen you.
Haven't spoken with you.
I'm lost Appa.
How you've left us?

Sunday, January 6, 2019

என்னை வீழ்த்தும் வகை
நீ அறிவாய் பராசக்தி!
ஆனால்
நான் வீழ்ந்து போவது
உனக்குச் சரியோ?

ஐயன் அழைத்தாலன்றி
அவனைக் காண
முடியாதெனில்,
அவன் அழைத்தே
அச்சகோதரிகளின் சன்னிதான
நுழைவு நடந்தது.
அப்படித்தானே!

அவன் அனுமதியன்றி
அவன் அழைப்பின்றி
அணுவும் அசையாது
எனில்
அவர்கள் வரவால்
அரிஅரசுதனுக்கு மட்டற்ற
மகிழ்ச்சி தான்.
அத்தனை தடைகள் தாண்டி
அவர்கள் அவனை தரிசித்த தில்
அய்யப்பனுக்கு அவ்வளவும்
மகிழ்ச்சி தான்!

ஆண்டாண்டு காலமாய்
தன்னைத் தரிசிக்க வரும்
ஆண்கள் ஒவ்வொருவரின்
வீட்டிலும்
அத்தனை நாட்களும்
விரதம் இருக்கும்
அக்காக்களையும்,
தங்கைகளையும்,
அவன் தாய் வயதுடைய
அன்னைகளையும்
அவன் அறிவான்
எனில்,
அவன் அழைத்தே
அவன் அக்காவும், அம்மாவும்
அத்தனை எதிர்ப்புகளுக்கு நடுவில்
அவனை சந்தித்திருக்கிறார்கள்!
சரிதானே!

நீங்கள் மனதாலும்
உடலாலும் செய்த
சகல பிழைகளையும்
மன்னித்துக் கொண்டிருக்கும்
பதினெட்டாம் படி அரசன்,
பாதுகாப்புக்காய் வைத்ததொரு
பத்தாம்பசலி பழக்கத்தைப்
பற்ரிக் கொண்டிருக்கும்
உங்கள் அறியாமை
ஆச்சாரங்களை உடைக்கவே,
ஒரு மனிதிச் சுவரின் பின்
இரு மகள்களைத்
த்ன்னைப் பார்ர்க்க
அழைத்திருக்கிறார் என்று
வைத்துக் கொள்ளுஙகளேன்!

மற்றபடி
பிந்து,
கனகதுர்கா,
என்ற
பெயரில் என்ன இருக்கிறது?
ஐயன் ஐயப்பன் அழைத்தே
அவர்கள் சன்னிதி
நுழைந்தார்கள் எனில்
பெயரில் என்ன இருக்கிறது?
ஆண், பெண்
என்ற
அனர்த்தங்களில் தான்
என்ன இருக்கிறது?
சாமி சரணம்!