குக்கூ என பெயரிட்டதற்காக thank you Raju Murugan!!!!
கண் பார்வையற்ற இருவரின் காதலுக்கு, குரலால், உணர்வால் மட்டுமே காதலை உணர மற்றும் பகிரக் கூடிய இருவரின் காதல் கதைக்கு, அழகிய கண்களுடைய குயிலின் மொழியைப் பெயராய் சூட்டியிருப்பதற்கு நன்றி! தன் கருத்த தேகத்தை அடர்ந்த இலைகளுக்குள்ளும் கிளைகளுக்குள்ளும் புதர்களுக்குள்ளும் ஒளித்துக் கொண்டு தன் தனித்தன்மையுடனான குரலால் தன் இணைப்பறவையுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் குயிலின் மொழியை, இரைச்சலான, எல்லாவற்றையும் கடைவிரித்துப் பார்க்கும் ஒரு உலகில் ஒடுங்கி ஒதுங்கி ஓரமாய் ஆனால் விட்டுக் கொடுக்காத தைரியமான தமக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரின் வாழ்க்கையைச் சொல்ல ஒரு குறியீடாய் பயன்படுத்தியதற்கு நன்றி! பாரதியைப் படித்த, பாரதியைப் பிடித்த எவருக்கும் குயில் தோப்பையும் குயில் பாட்டையும் பிடிப்பது ஒன்றும் புதிதல்ல, வியப்புக்குரியதும் அல்ல! ஆகவே பாரதிக்காகவும் எனக்காகவும் தங்கள் முதல் படைப்புக்கு குக்கூ என பெயர் சூட்டியதற்கு நன்றி! குக்கூ வெற்றி பெற வாழ்த்துக்கள்!

