என் முதல் மழைக் கவிதையின்
ஈரம்
இன்னும் என் விரல்களில்!
என் முதல் மழைக் கனவின் சாரம்
இன்னும் என் விழிகளில்!
என் முதல் மழைக் குயிலின்
குரல்
இன்னும் என் செவிகளில்!
என் முதல் மழை நனைவிற்குள்
இன்னும் மூழ்கிக்
கிடக்கிறேன்!
இப்போதைய என் உலகம், உயரம்,
இன்னும் உடனிருப்பவையை எல்லாம்
மறந்து
எப்போதாவது வந்து போகும்
மழைக்காக
எப்போதும் காத்திருக்கிறது
இந்த மனது!
என் முதல் மழைக்கு முன் பறந்த
தும்பிகளுடனும்
அன்றைய மாலையில் பறந்து கடந்த
ஈசல்களுடனும்
இன்னும் பறந்து கொண்டே
இருக்கிறாள்
தன்னை மழைக்குக் கொடுத்து
தானே மழையாகி மழை இரவிற்குள்
வின்மீன் தேடிப்போன ஒரு
சின்னஞ்சிறுமி!!!!
-நான் காஞ்சனா.
No comments:
Post a Comment