பொய்யெனத் தெரிந்திருந்தும்
புதைந்து போகிறேன்
உன் நேசத்தோடு!
என் பொக்கிக்ஷமே!
புன்னகையே!
பெரும்பொருளே!
பூக்களோடும் புல்லாங்குழலோடும்
புயலாய் புரட்டிப்போடும்
உன் கண்களோடும்
போரிட முடியவில்லை
என்னால்!
நீச்சல் தெரியாமல்
நீருக்குள் மூழ்கி
நீளும் அலைகளில்
தத்தளித்து தரைதட்டி
தவியாய் தவித்து
கரை சேரும்
கனல் கனங்களை
அனுதினமும் எனக்கு
ஏன் தந்தாய் நீ?
என்று உனை
கேட்கும் விதம்
நானறியேன்!
பிரித்தெடுக்க முடியாத
பிரியங்களை என்னுள்
பிசைந்து வைத்துவிட்டு
பிரிந்தொளிந்து விளையாடும்
வெண்ணெய் திருடா!
இதில்
எண்ணெய் ஊற்றி
சமைக்கவா?
என்னை ஊற்றி
சமைக்கவா?
உனக்கன்றி
வேறு எவர்க்குச் சொல்ல?
LOVE LOTS!!!!
HAPPY VALENTINE’S DAY!
No comments:
Post a Comment