Sunday, February 14, 2016

மார்கழி 29
குளிர் மார்கழியே!
குழலூதும் வான்பிறையே!
மலர் தேனே!
மறையுறையும் அரும்பொருளே!
வெண்ணெய் வழிய வழிய
வெண்பொங்கல் மணக்கிறது!
விளையாட்டு போதுமடா!
விழிகளால் விளக்கேற்ற வா!

வழியெங்கும் பார்த்திருக்கிறேன்!
விழி விரியக் காத்திருக்கிறேன்!
சுழலாடும் படகாய்
சுற்றிச் சுற்றி
உனைத் தேடுகிறேன்!
நான் நீயாகி
நாட்கள் பல கடந்து விட்டன!
நீ நானே என்பதை
நீ உணரும்
நேரம் எது?
நீ வரும் வரத்துக்காய்
தீயில் தவமிருக்கின்றன
என் கண்கள்!
எழுந்திருச்சு வாடா!
என் கண்ணா!
எழுஞ்சி வா!
என் பாவை 29

No comments:

Post a Comment