Sunday, February 14, 2016



மார்கழி 28
மார்கழி கழியுது காண்
மணிவண்ணா!
மாக்கள் பால் சொரியுது
காண்!
சேற்றுச் செந்தாமரையும்
செவ்வன பூத்தது காண்!
செங்கமலக் கண்ணா!
கூற்றிதை கேளடா!
குளிரானாய்!
பனியானாய்!
குளிர் தந்த
காய்ச்சலும்
நீயே ஆனாய்!
காந்தும் காய்ச்சலின்
மருந்தை உன்
கண்களில் ஒளித்துக் கொண்டால்
காய்ந்து போவேன்
என நினைத்தாயோ!!
கண் திறந்து
உன் கண்களைத்
தேடிப் பார்!
அவை
என்னிடம் சேர்ந்து
எத்தனை
நாட்களாகின என்பது
உனக்குத் தெரியும்!
நாடகம் போதுமடா!
நண்பா!
கண் முழிச்சிக்கோ!
எழுஞ்சுக்கோடா!
கண்ணா!
எழுஞ்சுக்கோ!
என் பாவை 28

No comments:

Post a Comment