Sunday, February 14, 2016



மார்கழி 27
நீராய் பிறவி எடுத்தே
நின் தாகம்
தீர்க்க முயல்கிறேன்!
என்
தீரா தாகம் கொண்ட
திரை கடலே!
காற்றாய் பிறவி எடுத்தே
உன் மூச்சில்
கலந்து கரைய முயல்கிறேன்!
என்
மாறா சுவாசத்தின்
மறை பொருளே!
தீயாய் பிறவி எடுத்தே
உன் குளிர் இரவில்
இதம் சேர்க்க முயல்கிறேன்!
என்
தீராக்காதலின்
திறவுகோலே!
எத்தனை பிறவி எடுத்தும்
பித்தம் தெளிந்தேனில்லை!
என்
கோரா வரங்களின்
அருந்தவமே!
மொத்தமாய் உனில் தொலைய
சித்தம் கொண்டேனடா!
முத்துக் கண் திறந்து
முகம் பார்த்து
ஒரு வரம் கொடு!
கண் திறடா!
கண்ணா!
முழுச்சிக்கோ!
என் பாவை 27

No comments:

Post a Comment