Friday, December 27, 2019



குளமான கண்களுடன் தான் இன்றும்
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறேன்.
துளிக் கண்ணீரும் கூடாதென
எப்போதும் தாங்கி நின்றீர்களே என்னை?
கடலெனக் கண்ணீரில் கரைகிறேன்.
இப்போது,
எங்கே இருக்கிறீர்கள் அப்பா?
என்னை அழ வைத்துவிட்டு
எங்கே போனீர்கள்?

ஓய்ந்த நாளின் முடிவில்
சாய்ந்து கொள்ள உங்கள்
தோள்கள் இல்லை.
அரற்றும் இந்த மனதிற்கு
ஆறுதல் சொல்ல உங்கள்
குரல் இல்லை.
" அம்மா" என்றழைக்க மாட்டீர்களா
எனத் தெருவெங்கும் தேடுகிறேன்.
என் அழுகுரல் உங்களுக்குக்
கேட்கவே இல்லையா அப்பா?

இப்போதுதான் கிளம்புகிறேன் அப்பா
என்ற அழைப்புக்கு,
"பார்த்து வாம்மா" எனும் பாசக்குரல்
கேட்காதா என,
பேருந்து நிலையத்தில் எனக்காகக்
காத்து நிற்பீர்களா என,
குளிருக்குப் போர்த்தியிருக்கும்
யாரோ ஒருவரின் சால்வைக்குள்
இருப்பீர்களா என
தனியே இந்த இரவுகளின் சாலைகளில்
தவித்துத் தேடியவாறு
கடந்து கொண்டிருக்கிறேன் அப்பா!
துயரத்தை எங்களுக்குத்
துணையாக வைத்துவிட்டு
எங்களை விட்டு விட்டு
எப்படிப் போனீர்கள்
என்பது புரியவே இல்லை!

எங்களை நிம்மதியாக உறங்கச் செய்து விட்டு
எங்களுக்கான கனவுகளுடன்  நீங்கள் விழித்திருந்த இரவுகளை மட்டுமே
அறிந்திருக்கிறேன்.
எங்களை நித்தம் அழ வைத்து விட்டு
எவ்வாறு உறங்கிப் போனீர்கள் அப்பா!
ஒரு நொடியேனும் உங்கள்
அறிவு உறங்கியதில்லை,
அன்பு உறங்கியதில்லை,
நேர்மை உறங்கியதில்லை,
உலகிற்கான உழைப்பு உறங்கியதே இல்லை.
எனில்,
எங்களைத் தாங்கிய
உங்கள் நெஞ்சம்
உறங்கிப் போனதெப்படி அப்பா?

அப்பா...
அப்பா...
அப்பா...
உங்கள் உறஙகா இதயம
உறஙகிப் போனது எப்படி?

என்னைச் சுமந்த இதயம்
எப்படித் துடிக்க மறந்தது
அப்பா!
அந்த மணித்துளியில்
என் முகம் நினைத்தீர்களா?
ஐயோ! என் மகளே!
என ஒரு முறை அழைத்தீர்களா?
இன்றிரவு முதல் நான் அருகிலில்லாமல்
எப்படி உறங்குவாய் மகளே
என பதைபதைத்தீர்களா?
அச்ச கணங்களில் இனி
அப்பா இன்றி என் செய்வாள்
என் மகள் எனக் கடவுளிடமே
கேள்வி கேட்டீர்களா!
உலகத்தின் மிகச் சிறந்த மகளுக்காக
ஏழுலகினும் மிக மிகச்சிறந்த
என் அப்பா!
எனக்காக
நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
ஆனால் அந்த கடவுளுக்கு
ஏன் காதுகள் கேட்கவில்லை அப்பா?

உலகத்தின் அன்பு மொத்தத்தையும்
ஆறுதல் மொத்தத்தையும்
பாசம் மொத்தத்தையும்
பரிசாகத் தன் மகளுக்குத் தர
வரம் என எனக்கே எனக்கென வாய்த்த
அப்பாவைப் பார்த்து, பேசி,
என் அச்சம், கோபம், குழப்பங்கள்,
வெற்றி, மகிழ்ச்சி, என
எல்லாவற்றிலும் எனக்காக துணை நின்ற
அப்பாவின் ஆசைக் குரல்,
அன்புக் குரல்,
தங்கக் குரல்,
கம்பீரமான குரல் கேட்டு
மாதம் ஒன்றாகி விட்டதா?

என் மொத்த அச்சங்களையும்
ஒற்றை சுமைதாங்கியாய் தாங்கி
நானே ஆகி என் நிழலாக,
நிஜமாக, உயிராக்
என் உலகாக இருந்த அப்பாவை
இனி எப்போது காண்பேன்?

என் ஒரு நொடி மெளனத்தைக் கூட
உடனடியாகக் கண்டு கொள்ளும்
உங்கள் இதயத்தில்
எங்கும் எங்கெங்கும் நிறைந்திருந்த
செல்ல மகளைத் தவிக்க விட்டுச் செல்ல
எப்படி ஒத்துக் கொண்டீர்கள் அப்பா?
அது சாத்தியமே இல்லையே!

நீங்கள் இல்லா வீட்டின் வெறுமை
தாங்க இயலாததாக,
எதைக் கொண்டும்
நிரப்ப இயலாததாக
நம்ப இயலாததாக
ஏற்றுக் கொள்ளவே முடியாததாக
இருக்கிறது அப்பா!
நாங்கள் என்ன செய்வோம்?
அப்பா!
நாங்கள் என்ன செய்வோம்?

Monday, December 23, 2019

My vision is blurred Appa.
My eyes are struggling all the time
To stop letting the tears rolling down.
I couldn't see any future before my eyes.
There's no way seen ahead.
Seems like all the gates are closed.
Appears that all the doors are shut.
You shouldn't have left Appa.
It's too too unfair.
I always wanted to quit.
But, may be Gods are so
So upset with me.
They didn't hear me.
May be I'm that unfortunate being.
They took my father with them.
May be it's my misfortune.
It's coz of all my sins.
You had been my Life Appa.
You should have lived 100 years.
I should have come with you and taken that Moment.
You should have lived Appa.
You must have.
Couldn't you see, how we are suffering without you?
Can't you see?
Haven't heard you for 28 days now Appa.
Haven't seen you.
Haven't spoken with you.
I'm lost Appa.
How you've left us?

Sunday, January 6, 2019

என்னை வீழ்த்தும் வகை
நீ அறிவாய் பராசக்தி!
ஆனால்
நான் வீழ்ந்து போவது
உனக்குச் சரியோ?

ஐயன் அழைத்தாலன்றி
அவனைக் காண
முடியாதெனில்,
அவன் அழைத்தே
அச்சகோதரிகளின் சன்னிதான
நுழைவு நடந்தது.
அப்படித்தானே!

அவன் அனுமதியன்றி
அவன் அழைப்பின்றி
அணுவும் அசையாது
எனில்
அவர்கள் வரவால்
அரிஅரசுதனுக்கு மட்டற்ற
மகிழ்ச்சி தான்.
அத்தனை தடைகள் தாண்டி
அவர்கள் அவனை தரிசித்த தில்
அய்யப்பனுக்கு அவ்வளவும்
மகிழ்ச்சி தான்!

ஆண்டாண்டு காலமாய்
தன்னைத் தரிசிக்க வரும்
ஆண்கள் ஒவ்வொருவரின்
வீட்டிலும்
அத்தனை நாட்களும்
விரதம் இருக்கும்
அக்காக்களையும்,
தங்கைகளையும்,
அவன் தாய் வயதுடைய
அன்னைகளையும்
அவன் அறிவான்
எனில்,
அவன் அழைத்தே
அவன் அக்காவும், அம்மாவும்
அத்தனை எதிர்ப்புகளுக்கு நடுவில்
அவனை சந்தித்திருக்கிறார்கள்!
சரிதானே!

நீங்கள் மனதாலும்
உடலாலும் செய்த
சகல பிழைகளையும்
மன்னித்துக் கொண்டிருக்கும்
பதினெட்டாம் படி அரசன்,
பாதுகாப்புக்காய் வைத்ததொரு
பத்தாம்பசலி பழக்கத்தைப்
பற்ரிக் கொண்டிருக்கும்
உங்கள் அறியாமை
ஆச்சாரங்களை உடைக்கவே,
ஒரு மனிதிச் சுவரின் பின்
இரு மகள்களைத்
த்ன்னைப் பார்ர்க்க
அழைத்திருக்கிறார் என்று
வைத்துக் கொள்ளுஙகளேன்!

மற்றபடி
பிந்து,
கனகதுர்கா,
என்ற
பெயரில் என்ன இருக்கிறது?
ஐயன் ஐயப்பன் அழைத்தே
அவர்கள் சன்னிதி
நுழைந்தார்கள் எனில்
பெயரில் என்ன இருக்கிறது?
ஆண், பெண்
என்ற
அனர்த்தங்களில் தான்
என்ன இருக்கிறது?
சாமி சரணம்!

Friday, October 12, 2018



கொஞ்சம் இல்லை, நிறையவே வருத்தம் தான். ஒரு அக்ரி சீட் வேஸ்ட்.
நல்லா வந்துட்டான் மகன்னு நம்பிய தாயின் நம்பிக்கை வேஸ்ட்.
பண்ண லவ் வேஸ்ட்.
எவ்வளவு பிரச்சனை வந்தாலும், உன் கூட இருப்பேன்னு சொன்னதை நம்பிய மனைவியின் நம்பிக்கை வேஸ்ட்..
இத்தனை ஆயிரம் பேரை IAS ஆக்குற அப்பா, நம்மையும் கலெக்டராக்கிடுவார்னு நம்பிய மகள்களோட நம்பிக்கை வேஸ்ட்.
எல்லாத்துக்கும் மேல், தன்னம்பிக்கை, பிரச்சனைகளுக்கு தீர்வு காணல் என்று ஊருக்கெல்லாம் பாடம் சொன்னதை, ஒரு நிமிடம் தனக்கு சொல்லிக்க்வும், ஞாபகப் ப்டுத்திக்கவும் மறந்த அறிவு வேஸ்ட்.
கொஞ்சும் இல்லை.
நிறையவே வருத்தம் தான் சீனியர்.
ஏணிப்படிகள் தம்மைத் தாமே உடைத்துக் கொண்டு
நொறுங்கிப் போவதில்
எனக்கு எப்போதும்
உடன்பாடில்லை.
ஆயிரமாயிரம் மனங்களில்
தன்னம்பிக்கை ஒளியேற்றுபவர்கள்,
நிமிட இருளுக்கு தம்மை
இரையாக்கிக் கொள்வதில்
எனக்கு உடன்பாடே இல்லை.
என் சொந்த விருப்பு வெறுப்புகள்
என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டுமே,
என்னை படிக்கல்லாக நினைத்தவனின் நம்பிக்கையை நொறுக்கிவிட்டு நொறுங்கிப் போவதை
எப்படி ஏற்றுக் கொள்வது?
உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்,
வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளவே முடியாதது,
நம்மை நம்பியவர்களை ஏமாற்றுவது என்று.
உங்களை நிறைய நம்பினோம் சீனியர்!
ஏமாற்றி விட்டீர்கள்!
மற்றபடி உங்களுக்காக
நான் வருத்தப்படப் போவதில்லை.
கூற்றுக்கிரையென நீங்களும்
மாய்ந்து தானே போனீர்கள்?
உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள், நீங்கள் செய்தது சரிதானா என்று?
அண்ணாந்து பார்த்தோம்
பெருமைபட்டுக் கொண்டோம்
ரொம்ப நம்பினோம்
ஆனால்,
ஏமாத்திட்டீங்க சீனியர்!
ஏமாத்திட்டீங்க.
Can't forgive you for this!
Can't!
For many, you would've been the ray of hope, source of inspiration and figure of strength. Now by what you've done, you've shattered the faith, for at least one among them, that there is always a life to live and move forward.
Your soul would've witnessed the agony and sorrow of the gathering crying around you.
How can you rest in peace Senior?
How?
#SayNoToSuicide
There is someone for you always...

Tuesday, July 24, 2018

It's a forward,subject to verification of facts.
However,the contents are lessons
Its how great people conquer heights.....Hats off to them ....
POWER OF LOVE 
by SUDHA MURTHY
It was in Pune that I met Narayan Murty through my friend Prasanna who is now the Wipro chief, who was also training in Telco(TataMotors) . Most of the books that Prasanna lent me had Murty's name on them which meant that I had a preconceived image of the man. Contrary to expectation, Murty was shy,bespectacled and an introvert. When he invited us for dinner. I was a bit taken aback as I thought the young man was making a very fast move. I refused since I was the only girl in the group. But Murty was relentless and we all decided to meet for dinner the next day at 7.30 p.m .. at Green Fields hotel on the Main Road ,Pune.
The next day I went there at 7' o ! clock since I had to go to the tailor near the hotel. And what do I see? Mr. Murty waiting in front of the hotel and it was only seven. Till today, Murty maintains that I had mentioned (consciously! ) that I would be going to the tailor at 7 so that I could meet him... And I maintain that I did not say any such thing consciously or unconsciously because I did not think of Murty as anything other than a friend at that stage. We have agreed to disagree on this matter.
Soon, we became friends. Our conversations were filled with Murty's experiences abroad and the books that he has read. My friends insisted that Murty as trying to impress me because he was interested in me. I kept denying it till one fine day, after dinner Murty said, I want to tell you something. I knew this as it. It was coming. He said, I am 5'4" tall. I come from a lower middle class family. I can never become rich in my life an! d I can never give you any riches. You are beautiful, bright, and intelligent and you can get anyone you want. But will you marry me? I asked Murty to give me some time for an answer. My father didn't want me to marry a wannabe politician, (a communist at that) who didn't have a steady job and wanted to build an orphanage...
When I went to Hubli I told my parents about Murty and his proposal. My mother was positive since Murty was also from Karnataka, seemed intelligent and comes from a good family. But my father asked: What's his job, his salary, his qualifications etc? Murty was working as a research assistant and was earning less than me. He was willing to go dutch with me on our outings. My parents agreed to meet Murty in Pune on a particular day at10 a. m sharp. Murty did not turn up. How can I trust a man to take care of my daughter if he cannot keep an appointment, asked my father.
At 12noon Murty turned up in a bright red shirt! He had gone on work to Bombay , was stuck in a traffic jam on the ghats, so he hired a taxi(though it was very expensive for him) to meet his would-be father-in-law. Father was unimpressed. My father asked him what he wanted to become in life.
Murty said he wanted to become a politician in the communist party and wanted to open an orphanage. My father gave his verdict. NO. I don't want my daughter to marry somebody who wants to become a communist and then open an orphanage when he himself didn't have money to support his family.
Ironically, today, I have opened many orphanages something, which Murty wanted to do 25 years ago. By this time I realized I had developed a liking towards Murty which could only be termed as love. I wanted to marry Murty because he is an honest man. He proposed to me highlighting the negatives in his life. I promised my father that I will not marry Murty without his blessings though at the same time, I cannot marry anybody else. My father said he would agree if Murty promised to take up a steady job. But Murty refused saying he will not do things in life because somebody wanted him to. So, I was caught between the two most important people in my life.
The stalemate continued for three years during which our courtship took us to every restaurant and cinema hall in Pune. In those days, Murty was always broke. Moreover, he didn't earn much to manage. Ironically today, he manages Infosys Technologies Ltd., one of the world's most reputed companies. He always owed me money. We used to go for dinner and he would say, I don't have money with me, you pay my share, I will return it to you later. For three years I maintained a book on Murty's debt to me.. No, he never returned the money and I finally tore it up after my wedding.
The amount was a little over Rs 4000. During this interim period Murty quit his job as research assistant and started his own software business. Now, I had to pay his salary too! Towards the late 70s computers were entering India in a big way.
During the fag end of 1977 Murty decided to take up a job as General Manager at Patni computers in Bombay .. But before he joined the company he wanted to marry me since he was to go on training to the US after joining. My father gave in as he was happy Murty had a decent job, now.
WE WERE MARRIED IN MURTY'S HOUSE IN BANGALORE ON FEBRUARY 10, 1978 WITH ONLY OUR TWO FAMILIES PRESENT.I GOT MY FIRST SILK SARI. THE WEDDING EXPENSES CAME TO ONLY RS 800 (US $17) WITH MURTY AND I POOLING IN RS 400 EACH..
I went to the US with Murty after marriage. Murty encouraged me to see America on my own because I loved travelling. I toured America for three months on backpack and had interesting experiences which will remain fresh in my mind forever. Like the time when the New York police took me into custody because they thought I was an Italian trafficking drugs in Harlem . Or the time when I spent the night at the bottom of the Grand Canyon with an old couple. Murty panicked because he couldn't get a response from my hotel room even at midnight. He thought I was either killed or kidnapped.
IN 1981 MURTY WANTED TO START INFOSYS. HE HAD A VISION AND ZERO CAPITAL...initially I was very apprehensive about Murty getting into business. We did not have any business background ... Moreover we were living a comfortable life in Bombay with a regular pay check and I didn't want to rock the boat. But Murty was passionate about creating good quality software. I decided to support him. Typical of Murty, he just had a dream and no money. So I gave him Rs 10,000 which I had saved for a rainy day, without his knowledge and told him, This is all I have. Take it. I give you three years sabbatical leave. I will take care of the
financial needs of our house. You go and chase your dreams without any worry. But you
have only three years!
Murty and his six colleagues started Infosys in 1981,with enormous interest and hard work. In 1982 I left Telco and moved to Pune with Murty. We bought a small house on loan which also became the Infosys office. I was a clerk-cum-cook- cum-programmer. I also took up a job as Senior Systems Analyst with Walchand group of Industries to support the house.
In 1983 Infosys got their first client, MICO, in Bangalore . Murty moved to Bangalore and stayed with his mother while I went to Hubli to deliver my second child, Rohan. Ten days after my son was born, Murty left for the US on project work. I saw him only after a year, as I was unable to join Murty in the US because my son had infantile eczema, an allergy to vaccinations. So for more than a year I did not step outside our home for fear of my son contracting an infection. It was only after Rohan got all his vaccinations that I came to Bangalore where we rented a small house in Jayanagar and rented another house as Infosys headquarters. My father
presented Murty a scooter to commute. I once again became a cook, programmer, clerk,
secretary, office assistant et al. Nandan Nilekani (MD of Infosys) and his wife Rohini stayed with us. While Rohini babysat my son, I wrote programs for Infosys. There was no car, no phone, and just two kids and a bunch of us working hard, juggling our lives and having fun while Infosys was taking shape. It was not only me but also the wives of other partners too who gave their unstinted support. We all knew that our men were trying to build something good.
It was like a big joint family,taking care and looking out for one another. I still remember Sudha Gopalakrishna looking after my daughter Akshata with all care and love while Kumari Shibulal cooked for all of us. Murty made it very clear that it would either be me or him working at Infosys. Never the two of us together... I was involved with Infosys initially.
Nandan Nilekani suggested I should be on the Board but Murty said he did not want a husband and wife team at Infosys. I was shocked since I had the relevant experience and technical qualifications. He said, Sudha if you want to work with Infosys, I will withdraw, happily. I was pained to know that I will not be involved in the company my husband was building and that I would have to give up a job that I am qualified to do and love doing.
It took me a couple of days to grasp the reason behind Murty's request..I realized that to make Infosys a success one had to give one's 100 percent. One had to be focussed on it alone with no other distractions. If the two of us had to give 100 percent to Infosys then what would happen to our home and our children? One of us had to take care of our home while the other took care of Infosys.
I opted to be a homemaker, after all Infosys was Murty's dream. It was a big sacrifice but it was one that had to be made. Even today, Murty says, Sudha, I stepped on your career to make mine. You are responsible for my success.
That's the Power of Love.

Tuesday, April 24, 2018


Happy birthday Sweet heart!
God bless you!
























Love you
Love you
Love you
Always...

Tuesday, April 10, 2018


எளியோர் வாட பொறுப்பதில்லை சூரியன்;
வறியோர் வாட பொறுப்பதில்லை வான்மழை;
யாவும் சரி என்பதில் உண்மையில்லை எனில்
யாவும் தவறென்பதிலும் உண்மையில்லை;
தெவிட்டத் தெவிட்ட தேன் சுவைக்க வைக்கும் வாழ்க்கைதான் மறு நாள்,
வலிக்க வலிக்க ஊசி குத்தி மருந்தினை ஏற்றுகின்றது!

அதோ சுற்றிச் சுழன்றோடிக் கொண்டிருக்கும் பேய்க் காற்றின் நடுவே
வெறும் காய்ந்த சருகுகளும் காகிதங்களுமே இருக்கின்றன;
காண்கின்ற என் கண்களில் கூட அல்ல,
மனதில் ஆடிக் கொண்டிருக்கிறது பேய்!

மனசு எப்படி பார்க்கிறதோ,
அவ்வளவு தான்யா வாழ்க்கையும்.
போலாம் போன்னு போய்ட்டே இருக்க வேண்டியது தான்!
போலாம் ரைட்!

Thursday, March 15, 2018

I'm almost breaking down.
I don't want to.
I don't want to.

Sunday, February 4, 2018


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீயாம்!
பற்றி எரியாதா என்ன?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என ஈசனையே எதிர்கொண்ட சங்கத் தமிழ் வளர்த்த மதுரையாயிற்றே! பற்றி எரியாதா என்ன?
யானோ அரசன், யானே கள்வன் என குற்றம் செய்த கோமகனைக் கேள்வி கேட்டு, ஒற்றை சாபத்தில் மாநகரையே எரித்த கண்ணகி வாழ்ந்த மதுரை ஆயிற்றே!
பற்றி எரியாதா என்ன?

தமிழ்த்தாய்க்கு மரியாதை தர மறுத்தது மட்டுமல்லாது, அது எங்கள் மரபு கிடையாது என்று மார்தட்டி பறைசாற்றும் மடாதிபதிகளின் முன் மண்டியிட்டு கிடப்பீர்கள் எனில், திரிபுரம் எரித்தவள் ஆட்சி செய்யும் மதுரை பற்றி எரிந்து தன் கோபத்தைக் காட்டாதிருந்திருந்தால் தான் வியப்பு!
பற்றி எரியத்தானே செய்யும்!

தமிழ்நாடு இல்லம் என்ற பெயரில் கை வைத்த உடனே நெற்றிக்கண் திறந்து பற்றி எரிந்தது பாருங்கள் மதுரை! ஹைலைட்டே அதுதான்.

ஆகமம் பேசும் ஆதீனங்களுக்கும், பிஜேபி அட்ராசிட்டி வகையறாக்களுக்கும்  நாம் சொல்லிப் புரிய வைக்க முடியாதென, எரிந்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது தமிழ் வளர்த்த மதுரை!
அது பாரதி சொன்ன தமிழின் அக்னிக்குஞ்சு!
நீங்கள் பொந்தில் வைத்து தமிழ் இருந்த இடத்தை இல்லாமல் ஆக்கக் கூட நினைக்கலாம் தான்.

ஆனால்,

ஹா!!!, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தமிழ்!
அதுதான் தமிழ்!

ஆகம விதி மீறலால் மதுரை எரியவில்லையடா மூடர்களே!

தமிழுக்கு ஒரு இழுக்கெனில், தமிழ் மண்ணிற்கு ஒரு களங்கமெனில், தமிழ் நாட்டிற்கு ஒரு கேடு விளைவிக்க யாரேனும் ஒருவர் நினைத்தால் கூட, என்ன நிகழும் என மதுரை கோடிட்டுக் காட்டி எச்சரித்திருக்கிறது.
அவ்வளவுதான்!

யுகம் யுகமாக மதுரை எரிந்தது நெற்றிக்கண்ணாலோ, கண்ணகியின் கண்ணீராலோ அல்ல! சத்தியம் தவறாத தமிழின் வலிமையால்!!!

தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்!!!!

#தமிழ்டா

Saturday, January 6, 2018

கனவு மெய்ப்பட வேண்டும் என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் நன்றே தொடங்கியிருக்கிறது 2018.

மத்திய மாநில அரசுகளின் முக்கிய தலைமை அதிகாரிகள், நிர்வாக இயக்குனர்கள், வங்கிகளின் பொது மேலாளர்கள், அனைத்து மாவட்ட திட்ட இயக்குனர்கள், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தலைமை அதிகாரிகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன இயக்குனர்கள் மற்றும் வங்கியாளர்கள், நபார்டு தலைமை அதிகாரிகள் என சான்றோர்கள் நிறைந்த அரங்கில், பாரதியின் “ கனவு மெய்ப்பட வேண்டும்” என்ற மந்திர வாக்கியத்துடன், என் இருப்பை இந்த உலகத்திற்கு உறுதியுடன் உரக்கச் சொல்லி இந்த ஆண்டிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன்.

நேற்று சென்னையில் நடைபெற்ற, ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவனங்களுக்கான (Rural Self Employment Training Institutes –RSETIs) மாநில அளவிலான முதல் கூட்டத்தில் , இந்தியன் வங்கி சார்பாகவும், இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனங்கள் சார்பாகவும்,  இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனம், திருவண்ணாமலையின் இயக்குனர் என்ற முறையில், அந்த மாபெரும் சபையில் பேசக் கிடைத்த வாய்ப்பை, நான் அழுத்தமாய் நம்பும், என்னை வழி நடத்தும் பாரதியின் வைர வார்த்தைகள் மூலம் என்னை அடையாளப் படுத்திக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி!!!!

மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்ற காலத்தை வென்ற கவிஞரின் வரிகள் நனவாகி கண்முன் நிகழ்கையில், "கனவு மெய்ப்பட வேண்டும்" என்ற மகாகவியின் வார்த்தைகள் மனதிற்குள் எழுந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

“ ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ என்ற பாரதியின் வரிகளையே என் டைரியின் முதல் வரியாய் நான் எப்பொழுதும் எழுதுகிறேன். என் கனவு மட்டுமல்ல, இங்குள்ள அனைவரின் கனவும் மெய்ப்பட வேண்டும் என்பதே அனைவரின் கனவுமாக இருக்கும். அவை யாவும் நிச்சயம் மெய்ப்படும் என்று நான் முழுமையாய் நம்புகிறேன். அந்த நம்பிக்கையையே இந்த உலகத்தினர் அனைவருக்குமான என் செய்தியாக  நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் கூறுகிறேன். இங்கு மட்டுமல்ல. வாழ்க்கையை ஒரு பெரிய கேள்விக்குறியோடு எதிர்கொண்டு, எங்கள் பயிற்சி மையத்துக்கு வரும் அனைவருக்கும், இந்த நல்வார்த்தைகளையும். நம்பிக்கையையுமே நான் எப்போழுதும் ஆழமாக தீர்க்கமாக அளித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களை சாதனை மனிதர்களாக மாற்றும் ஆற்றல் இந்த மந்திரச் சொற்களுக்கு உள்ளது. அது சாத்தியப் பட்டுக் கொண்டும் இருக்கிறது.
இந்த நம்பிக்கை வரிகள் மட்டுமே அவர்கள் விரும்பும் மற்றும் இன்றைய உலகிற்குத் தேவைப்படும்  மாற்றத்தைக் கொண்டு வரும் என நான் அழுத்தமாய் நம்புகிறேன்” என்று அரங்கு நிறைந்த பலத்த கரவொலிக்கிடையே பதிவிட்டு இந்த ஆண்டை ஆரம்பித்திருப்பதில் மகிழ்ச்சியும் திருப்தியும்.

 இந்தக் கரவொலிகளை, எனக்குள் கனவுகளை விதைத்த, எனக்குக் கனவு காண கற்றுக் கொடுத்த, என் கனவுகளைத் தன் கண்களுக்குள் தாங்குகின்ற, அவற்றை மெய்ப்படுத்த எப்பொழுதும் எல்லா விதத்திலும் பாடுபடுகின்ற, என்னையே தன் கனவாகக் கொண்டிருக்கின்ற என் அன்பிற்குரிய அப்பாவிற்கு உரித்தாக்குகிறேன். Thank You Pa.

கனவு மெய்ப்பட வேண்டும்
இங்கு வாழும் மானிடர்க்கெல்லாம்!

Sunday, October 22, 2017

இன்னும் எத்தனை நாட்கள்
என்னை எழுதாமலே கடந்து போகப் போகிறாய்?
எனும் கவிதையின் குரல்
இப்போதும் கேட்கிறது ஈன ஸ்வரத்தில்.
எழுதக் கூடாதென்றில்லை!
வலிந்து வார்த்தைகளை வளைத்துப் போடுவதில்
எனக்கு உடன்பாடில்லை என்கிறேன் வலியுடன்.
காற்றின் பாதையில் கைத்துடுப்புடன்
கடந்து போகும்போதெல்லாம் ஒரு
காட்டாறு எனக்காகக் காத்திருப்பதை,
கடமையென உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறது அறிவு!
கவிதைகளைக் காக்க வைப்பதில்
எனக்கு உடன்பாடில்லை!
ஆனாலும்
ஆற்றுப் படுகையை கண்களால் அளந்தவாறு கடந்து போகும்
ஒரு பசியற்ற பரிசல்காரன் போல் காற்றோடு கவிதைகளைக் கரையவிட்டு விட்டு, கடந்து போய்க் கொண்டிருக்கும் மனதிடம் நான் மல்லுக்கட்டவும் தயாராக இல்லை.
மண்டியிடவும் தயாராக இல்லை!
கனவுகளின் இழைகளுக்குள் தோன்றி
கனவுகளுக்குள்ளாகவே நெசவாகி
கனவுகளோடே உறங்கிப் போகும்
கவிதைகளை
யாரால் என்ன செய்ய முடிகிறது?
உள்ளுக்குள் கவிதைகள்
வரி வரியாய்
வாசனை வார்த்தைகளாய்
சரம் சரமாய்
இன்னும் உயிர்ப்புடன்
இடம் வலமாய்
உலவிக் கொண்டுதான் இருக்கின்றன.
கட்டாயம் எழுதுவேன்.
கட்டாயம்!
ஆனால் அதற்காகக் கொஞ்சமோ நிறையவோ
 காத்திருக்கத்தான் வேண்டியிருக்கிறது.
காத்திருக்கிறேன்.
கடிகார முட்களுக்குக் காலத்தின் அளவுகளைக் கற்றுக் கொடுப்பது போல்தான் அது!

Sunday, October 1, 2017

ஏதோ ஒன்றை சொல்லாமல் தான்
இவ்வாறாக தினம் உறங்கப் போகின்றேன்
சில நாட்களாய்!

Tuesday, August 29, 2017

When it hurts,
Accept that it hurts.
Experience the pain.
Go through the wound.
Yes.
It's pain means Pain only.
Undergo.

Tuesday, April 25, 2017




But, for all the numerous stories n' secrets n' sentiments I've shared with u, for all these days, I fall short of words now to say a "Thank you" for being part n' parsel of my soul always. I' ve  told u everything right from my achievements to my disappointments, ups n downs, joy n sorrow, fear n anger, pats n knocks, pride n mistakes, I've shared with u everything. Probably, you'll never know, that you're the best friend of someone like this; the soulmate of someone like this; the Cupid n the Darling dearest of someone like this; N' the heart n' soul of someone like this.
Thank you Sachin!!!!
You're not different from me.
You're Me.
You're just me.
You're just me.
Thanks for being mine too Buddy!!!
Thanks for being Me!!!
Thank you Buddy!!!
Wish you a very happy and blessed birthday!!!!
Love you....
God bless you...
#HappyBirthdaySachin

Monday, April 25, 2016





Happy Birthday Dude!!!
Many more happy returns of the day!!!
Like an early morning dream
You fill my heart n mind!
Like a deeply flowing stream
You're meandering all kind!
N
What do I have to give 
Other than my Love
For the transformation I see in me
Is all the difference you have made!
Growing old with the years
Throwing a pain in the spine
Doesn't stop me
Growing young with your Love
Glowing in each n every cell of mine!
What else to say other than
Thank you!
For all of them n
For all of them to come!
I thank you a hundred times
Just to say " I love you"
I thank you a hundred times
Just to say " I live you "
N
I thank you a hundred times
Just to say " I miss you " 
All the time.
I can scorch you more than this!
I can porch you more than this!
I can live you more than this!
N
I can love you more than this!
More than this!
More than this!

Tuesday, March 29, 2016



கட்டை விரல் நுனியில் நின்று
காற்றில் சுழன்றாடும் தனியுடலாய்
தாளமற்றதொரு தாளகதியில்
தாவித் தாவி தனக்குள்ளேயே
தவழ்ந்தாடுகிறது மனது!

நாளங்களின் நாட்டியத்தில்
நாணிடப்படாத வில்லொன்று
அம்பெய்யத் தயாராய்
எப்போதும்!

தானே தன்னைக் குடையும்!
தானே தன்னை அறியும்!
நானே என் கேள்வியாய்!
நானே அதன் பதிலுமாய்!

என் குழலின் துளைகளில்
ஏதொரு பிழையுமில்லை!
எனினும்
என் குரலினுக்கென்று
ஏதொரு மொழியுமில்லை!

யாருடனும் யாதொன்றும்
பகிர்வதற்கில்லை
என் பயணத்தில்!
வேறென்ன சொல்ல?

தான், தனது என ஏதுமின்றி
தனித்த தன் பயணப் பாதையில்
தாகங்களற்ற என்

தண்ணீர் அறிவு!

Tuesday, March 8, 2016



முகம் தெரியாத எதிர்கால கணவனுக்காக
முழுநாளும் நோன்பு நோற்கிறாய்.
மூடனோ, முட்டாளோ, முன்கோபியோ,
முகத்தில் அறைபவனோ அமைந்துவிட்டாலும்
முன்வினை என முகாந்திரம் சொல்கிறாய்!
முன்கோபம் குறைவதற்காக மீண்டும்
முன்னூறு விரத முறைகள்- அவன்
முகம் கோணாமல் நடந்து கொள்ள
மூவாயிரம் அறிவுரைகள்!
முடிவேயில்லா பிரார்த்தனைகள்!
இன்னும்
இன்னும்
இன்னும்….
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும்
இத்தனை பத்தாம்பசலித்தனமா!
விழித்தெழடி பெண்ணே!
விடிந்து வெகுநேரமாகிறது!

நாளொரு நிர்பயாவை
நாடு விழுங்கிக்கொண்டிருக்கையில்
நாடக சாத்திரங்கள் எல்லாம்
நமக்கிங்கு எதற்கடி?
நல்லதொரு நாள் கிழமையென
நங்கையர்க்கேதும் இல்லை!
ந்மக்கான நேரம் யாவும்
நன்றே என்றுணர்!
நல்ல நேரம் இது! பெண்ணே!
நமக்காகவும் பேசத் தொடங்கு!

கண்ணகிக்காகவும் திரெளபதிக்காகவும்
பேசுவது போல்
மாதவிகளுக்காகவும் மணிமேகலைகளுக்காகவும்
கூட பேசு- உன்
அக்கா தங்கைகளுக்காக மட்டுமல்ல!
அப்பாவிகளுக்கும் அபலைகளுக்காகவும்
கூட பேசு!
சத்தியம் பேசு!
சமதர்மம் பேசு!
சங்கடம் ஏதுமின்றி
சத்தமாகப் பேசு!
உரக்கப் பேசு!
உற்சாகமாக பேசு!
உயரங்களைத் தொடும்
உத்வேகத்துடன் பேசு!
பெண்ணியம் பேசு!
பெண்ணே!
உன்-னியம் பேசு!!!

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

Happy Women’s Day!!!

காவிய நாயகியாய்
கடலோரம் நின்றது போதும்!
கண்ணகியாய் காந்தாரியாய்
கண்களைக் கட்டியிருந்தது போதும்!
கண்ணகிகளைத் தாண்டியும்
காவியங்கள் உண்டென்பதை
கனமாய் உன் மனதில் பதி!
கண்கள் திற!
கதவுகள் திற!
காற்றை உள் வாங்கு!
சுவாசிக்கப் பழகு!!!


காதணிகளுக்காக அல்ல!
காதுகள் கேட்பதற்காக
என்பதை உணர்!
கவிதைகள் கேள்!
கவிதைகள் செய்!
கல்வி கொள்!
கல்வி கொடு!
என் கல்வி!
என் உரிமை!
என உரிமையாய்
கேட்டு வாங்கு!

காலை புலர்வது
உனக்காகவும் என்பதை அறி!
கனவுகள் விதை!
காவியம் படை!
கடல் கடந்தும்
நல் அறிவு கொள்!
காதலும் கடந்து போகும்!
கண்களைச் சுதாரி!
உனக்காக யோசி!
எனக்காக யோசி!
நமக்காக யோசி!

பேசு!
பாடு!
நீ
பெண் என்பதை
பெருமையுடன் உணர்!
சிறகை விரி!
சிகரம் தொடு!
பெண்மையில் பெருமிதம் கொள்!!!
பெண்மையில் பேரானந்தம் கொள்!
மலர்கள் மகரந்தத்திற்காக
மட்டுமல்ல!!!!!!
மணம் வீசு!
பெண்ணே!
மனம் பேசு!!!

மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

Happy Women’s Day!!!