Thursday, December 24, 2015




மார்கழி 8

வாரம் ஒன்று வளமாய்க் கழிந்தது
மாறன் வில் பலமாய் வளைந்தது
மார்கழி காண்!
மாதவா! இது
மார்கழி காண்!
தீரனே! அரங்கநாதா!
ஈரம் கொள்! நாராயணா!
அகிலோடு ஆம்பலும்
முகில்தொடும் மூங்கிலும்
மல்லியும் முல்லையும்
மனம் வீசும் பிச்சியும்
தாழிநிறை வெண்ணெயும்
தாள் சுமந்து நிற்கின்றோம்!
நாமே யாமாய்!
யாமே நாமாய்!
யாதுமான பின்னாலும்
யாது இது ரமணா!
பாரம் கையில் இல்லை!
சாரங்கா!
உன்னைச் சுமக்கும் மனதில்!
இறக்கி வைக்க மனம் இல்லை!
இடம் தேடுகின்றோம்!
இறங்கி வந்து உன்
இதயம் கொடேன்!
இருள் விலக வேண்டும் கண்ணா!
மருள் தீர வேண்டும்!
அண்ணலே! விழி திறவாய்!
அருள் கூர்ந்து அகம் புகுவாய்!

என் பாவை # 8


No comments:

Post a Comment