Wednesday, December 30, 2015



மார்கழி 14

பால் பீய்ச்சும் ஆவினமே!
என் பாலகனைக் கண்டீரோ!
தோள் சாயும் பூவினமே!
என் தனயனைக் கண்டீரோ!
வாள் விழி பூவையரே!!
என் கண்ணனைக் கண்டீரோ!
என எப்போதும் போல்
எங்கும் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்!
எங்கேயடா! ஒளிந்து கொண்டிருக்கிறாய்!

தொட்டிலில் நீ விட்டுப் போன
தூங்காத புல்லாங்குழல்!
கொட்டிலில் நீ சிந்திப் போன
பச்சைப் பாலின் வாசம்!
குட்டி இராட்சசா! என்
குறும்புக்கார கண்ணா!
நீ ஒளியும் இடம்
அறிந்தவள் நான் என்பதை
அறியாததுபோல் நடித்தது போதும்!
உலகளந்த பரமனாய் உன்னை
ஊர் பார்க்கலாம்!
கலகக்காரா! உன்
கள்ளம் அறிந்தவள் நான் என்பதை
உள்ளம் உணர்வாயாக!

உன் உள்ளும் புறமும்
உணர்ந்த அன்னையடா நான்!
என் பிள்ளை நீ
என்பதை உணர்வாயாக!
ஒளிந்த இடத்திலேயே
உறங்கிவிட்டாயா என்ன?
எழுந்திருச்சுக்கோடா!
என் கண்ணா!
எழுந்திருச்சுக்கோ!
எழுந்திருச்சுக்கோ!!!!


என் பாவை # 14

No comments:

Post a Comment