மார்கழி 13
உன்னிடம் சொல்வதற்கு
என்னிடம் ஏதுமில்லை!
உன்னிடம் பேசுவதற்கு
என்னிடம் எதுவும் இல்லை!
உன்னிடம் பகிர்வதற்கு
என்னிடம் எதுவுமே இல்லை!
மண்ணைத் தின்று வந்தாலும்
வெண்ணெய் திருடித் தின்றாலும்
என்ன செய்து வந்தாலும்
உன்னைக் கொஞ்சுவேன் என்றா நினைத்தாய்!
கண்ணா!
நான் அறிவேனடா!
மண்ணும் விண்ணும் அறியா
உன் அகம் அனைத்தையும்
கண்ணா!
நான் அறிவேனடா!
பேச வேண்டாமா!
பேசாதே!
வெறுக்க வேண்டுமா என்னை!
வேண்டும் வரை
வெறுத்துக் கொள்!
மறந்து விடுவாயா!
மகிழ்ச்சி!
மறுபடியும் நினைத்துத் தொலைக்காதே!
அன்பாய் பார்க்க
மறந்து போ!
அரவணைக்கக் கூட
மறந்து போ!
உன்
அத்தனை பாசாங்கையும்
அறிவேன் நான்!
அத்தனைக்குப் பிறகும்
நீ வந்து
அடையப் போவது
என் மடியெனும்
கூடுதானே!
அன்னையடா!
என்னை விடவும்
உன்னை வேறு
யார் அறிவார்?
என் கண்ணா!
நான் உன்
அன்னையடா!!!
முழிச்சுக்கோ!!!!
என் பாவை # 13
No comments:
Post a Comment