Wednesday, February 25, 2015


போலாகி போலாகி,
பாவனைகள் நாமாகி,
நேற்று இன்றாகி,,
இன்று நாளையாகி,
நாளை என்றோவாகி.
நேரமது மாயையாகி
காலமதுவும் பாவனையே ஆகி,
மெய்யாகி பொய்யாகி,
மென்மையும் வன்மையுமாகி,
விருப்பமாகி வெறுப்புமாகி,
நெருப்பாகி பனியுமாகி,
நானாகி நீயாகி,
யாரோ எதுவாகவோ ஆகி,
தூசாகி துரும்பாகி,
இரும்பாகி எறும்பாகி,
எலியாகி புலியாகி,
இருளாகி ஒளியாகி,
எட்டுத் திக்காகி,
சப்த நிசப்தங்களாகி.
பேயாகி பூதமாகி,
உருவமாகி அருவமாகி,
ஈசனாகி ஏசுவாகி,
யாதுமாகி ஏதுமற்றதாகி,
இருப்பதும் இல்லாததுமாகி,
போலாகி போலாகி,
பாவனையே நாமாகினோமோ!!!