Saturday, August 30, 2014




நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் இசைஞானி இளையராஜா அவர்களின் பேட்டி ஒளிபரப்பாகியது. அலைகள் ஓய்வதில்லை படத்தின் இசைத்தொகுப்பில் இடம்பெற்று திரையில் வெளிவராத மற்றும் மேகா திரைப்படத்தில் இடம்பெறும் “புத்தம்புது காலை” பாடல் பற்றி அவர் கூறிய புதிய தகவல். உண்மையில் அப்பாடல் “அலைகள் ஓய்வதில்லை” படத்திற்காக உருவானதில்லை. அது இயக்குனர் திரு. மகேந்திரன் இயற்றவிருந்த புதிய படம் ஒன்றிற்காக உருவானது. அத்திரைப்படம் நின்று போனதால், அந்த பாடலில் மயங்கி இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களால் “ அலைகள் ஓய்வதில்லை”க்கு படமாக்கப் பட்டு, பின்பு அவருக்கே அந்த பாடல் படமாக்கப்ப்பட்ட விதத்தில் திருப்தி இல்லாததால், கேசட்டோடு நின்று போனது என்றார்.

மேகாவிலும் அந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. காலம் கடந்து நிற்கும் அந்த பாடலின் ஜீவனை, அதை ஏன் எவராலும் இன்று வரை காட்சிப் படுத்த இயலவில்லை என ஆச்சரியமாக இருக்கிறது.


சட்டெனத் தோன்றுகிறது. இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில், ஒளி ஓவியர் பாலுமகேந்திராவின் கைவண்ணத்தில் அந்த பாடல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதற்காகத்தான் அப்பாடல் காத்திருந்து  காத்திருந்து காற்றில் கலந்ததோ? இல்லை! இந்த சிறுவனுக்காகவா?

ஹீம்! காணும் காட்சிகளில் என்ன இருக்கிறது. அவர் பாடலின் ஜீவன், அதுவே அவரானார்!



பயணங்கள் முடிவதில்லை!

Saturday, August 16, 2014


சேது படம் பார்த்தேன்! 
என்ன சொல்வது? 
என்ன சொல்வது? 
என்ன சொல்வது?
விக்ரம் என்ற அபார திறமைசாலியின் முகவரி! தேசிய விருதுக் குழுவை புருவம் உயர்த்தச் செய்த ஒரு புதிய இயக்குனரின் முதல் படைப்பு! தமிழ் திரையுலகின் இளம் இயக்குனர்களை புத்துணர்வோடு தன்னம்பிக்கையோடு நடைபோடச் செய்த ஒரு திருப்புமுனை திரைப்படம்! பாலாவின் படைப்புகளில் உச்சம்! இவை எல்லாவற்றுக்கும் காரணம் உயிரோட்டமான அந்த இசை! வழக்கமான ஒரு காதல் கதையை காவியமாக பாலாவால் படைக்க முடிந்ததென்றால் ....என்றால், அதற்கு முழு முதற்காரணம் இசைஞானியின் இசை என்பது புரிகிறது! இளையராஜாவின் அபூர்வ குரல் வித்தையில் அந்த "எங்கே செல்லும் இந்த பாதையும்"


 "வார்த்தை தவறிவிட்டாயும்", CLASS!


கதாபாத்திரங்களின் மனநிலைகளையும் அவற்றின் மாற்றங்களையும் அத்தனை பிரமாதமாக  எடுத்துச் சொல்ல பாலா மெனக்கெட்டிருக்கலாம்! ஆனால் நிகழச் செய்தது நிகழ்த்திக் காட்டியது ராஜா சார்! தங்களுக்கு பூரண ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க அந்த ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன் ராஜா சார்! வாழ்க வையகம் உள்ளளவும்! Long Live Raja Sir!

And Director Mr.Bala, This is your ultimate movie! Even after all your movies till date, I bet this is your ultimate! இனி எந்நாளும் எக்காரணத்தைக் கொண்டும் தங்கள் திரைப்படங்களுக்கு தயவுசெய்து இசைஞானியை மட்டும் விட்டு விடாதீர்கள்! உங்கள் படைப்புகளின் ஜீவன் அவரிடம்தான் இருக்கிறது!

ஒரு சாதாரண காதல் கதை, அசாதாரண இசையால் வெற்றி பெற்ற கதை இது. Sethu Rocks!

Friday, August 15, 2014


இதோ இந்த நள்ளிரவில்தான்
என் தேசம்
இந்தியாவானது!
சுதந்திரத்தை
சுவாசித்தது!
தன் மண்ணில்
தனக்கான தண்ணீரில்
தாகம் தணித்துக் கொண்டது!

மற்றும்
உற்சாக வாழ்த்துக்களுடன்
உறங்கப் போக
கற்றுக் கொண்டது!

உறங்க நேரமில்லை தோழா!
உன் தேசம்
உனக்காகக் காத்திருக்கிறது!
விழித்திரு!
விதைகளுக்குள்
ஒளிந்திருக்கின்றன
விருட்சத்தின்
வேர்கள்!
நீ 
விதை!
நீ
விருட்சம்!
நீ 
இந்தியன்!
சுதந்திரம் போற்றுவோம்!

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
Celebrate Freedom!
Happy Independence Day!

Thursday, August 14, 2014


ஒரு விதைக்குள்
ஒளிந்திருக்கும் விருட்சமாய்
வேர் பரப்பி
விழுதுகள் இறக்கி
உலகத்தின் ஒளிக்காக
உதிக்கத் தயாராகிறது
ஒன்றுபட்ட
பாரதம்!

மொழியால் நாங்கள்
பிரியவில்லை;
மொழியின் பெயரால்
பிரிக்கப் பட்டிருக்கிறோம்
என்பதை யாம்
எப்பொழுதும் உணர்ந்திருக்கிறோம்!

இனத்தால் நாங்கள்
வேறுபடவில்லை;
இன அரசியலால்
கூறுபோடப் பட்டிருக்கிறோம்
என்பதையும் யாம்
இப்பொழுதும் உணர்ந்திருக்கிறோம்!

இந்த உலகத்திற்கான
இரையையும்
இறையையும்
இந்த தேசம்
கொண்டுள்ளதை
அகிலத்தார் உணர்வது
அதிகத் தொலைவில்
இல்லை!

யார் துண்டாட
நினைத்தாலும்
நாங்கள்
ஒன்றுபட்டே நிற்போம்
என்ற பேருண்மையை;

அமைதி என்ற
இந்த பிரபஞ்சத்தின்
இணையற்ற இசையை
இந்த மண்ணின் மக்கள்
ஓங்கி ஒலிக்கச் செய்வோம்
என்ற பெருமிதத்தை;

வேற்றுமையில் ஒற்றுமை
காணும் மண்ணின்
மகத்துவத்தின் விசையை
உணரத் தயாராகுங்கள்
உலகத்தாரே!

இந்த தேசத்தின் பெயர்
இந்தியா!
இதன் மக்கள்
இந்தியர்!
அன்றும்
இன்றும்
என்றென்றும்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
Being Proud to be an Indian!
Wish you All a Happy Independence Day!

Tuesday, August 5, 2014



படுத்துக் கிடக்கும்
கடல் பற்றிய
கவிதையோ?

தொடுவானம்,
நெடும் அலைகள்,
தொட்டுக் கடக்கும்
முகில்கள் பற்றிய
கற்பனையோ?

எது கரைந்தது
எதில் எனத்  தெரியாமல்
ஒட்டிக் கிடக்கும்
அடிவானம் பற்றிய
சிந்தனையோ?

திறக்கும் பக்கங்களில்
பறக்கும் பறவை
எடுத்துச் செல்வது
எதுவாக இருக்கக் கூடும்?
ஏகாந்த இரவில்
எழும் கேள்விக்கான
எழுதாத விடை
எதுவாக இருந்தால்
என்ன?
இவற்றில்
எதுவாகவும்!!!
எதுவாகவும் தான்
இருந்துவிட்டுப் போகட்டுமே!!!
பறப்பது சுகம்
பறவையாயினும்
பக்கங்களாயினும்!

Friday, August 1, 2014



எப்படிச் சொன்னாலும்;
எப்படிக் கேட்டாலும்;
எப்படி உணர்ந்தாலும்;
வலியை வலியென்றே
வலியுறுத்தும் வலியை
பொய்யெனச் சொல்வதோ,
பொய்யென உணர்வதோ
இயலாத ஒன்றெனில்,
பூவின் போர்வையில்
புல்லின் போர்வையில்
புன்னகையின் போர்வையில்
முட்கள் விரித்த பாதையில்
முடியாமல் தொடரும்
இந்த பயணத்தை
யாதெனச் சொல்வேன்?
யாதென உணர்வதென
யாரிடம் கேட்பேன்?
யாதுமாகி நின்றவனே!
நான்
யாரிடம் கேட்பேன்??????????????