நேற்று ஒரு தொலைக்காட்சி
சேனலில் இசைஞானி இளையராஜா அவர்களின் பேட்டி ஒளிபரப்பாகியது. அலைகள் ஓய்வதில்லை
படத்தின் இசைத்தொகுப்பில் இடம்பெற்று திரையில் வெளிவராத மற்றும் மேகா
திரைப்படத்தில் இடம்பெறும் “புத்தம்புது காலை” பாடல் பற்றி அவர் கூறிய புதிய
தகவல். உண்மையில் அப்பாடல் “அலைகள் ஓய்வதில்லை” படத்திற்காக உருவானதில்லை. அது
இயக்குனர் திரு. மகேந்திரன் இயற்றவிருந்த புதிய படம் ஒன்றிற்காக உருவானது.
அத்திரைப்படம் நின்று போனதால், அந்த பாடலில் மயங்கி இயக்குனர் இமயம் திரு.
பாரதிராஜா அவர்களால் “ அலைகள் ஓய்வதில்லை”க்கு படமாக்கப் பட்டு, பின்பு அவருக்கே
அந்த பாடல் படமாக்கப்ப்பட்ட விதத்தில் திருப்தி இல்லாததால், கேசட்டோடு நின்று
போனது என்றார்.
மேகாவிலும் அந்த பாடல்
படமாக்கப்பட்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. காலம் கடந்து நிற்கும் அந்த பாடலின்
ஜீவனை, அதை ஏன் எவராலும் இன்று வரை காட்சிப் படுத்த இயலவில்லை என ஆச்சரியமாக
இருக்கிறது.
சட்டெனத் தோன்றுகிறது.
இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில், ஒளி ஓவியர் பாலுமகேந்திராவின் கைவண்ணத்தில்
அந்த பாடல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அதற்காகத்தான் அப்பாடல்
காத்திருந்து காத்திருந்து காற்றில்
கலந்ததோ? இல்லை! இந்த சிறுவனுக்காகவா?
ஹீம்! காணும் காட்சிகளில் என்ன இருக்கிறது. அவர் பாடலின் ஜீவன், அதுவே அவரானார்!
ஹீம்! காணும் காட்சிகளில் என்ன இருக்கிறது. அவர் பாடலின் ஜீவன், அதுவே அவரானார்!
பயணங்கள் முடிவதில்லை!
No comments:
Post a Comment