Friday, April 27, 2012

A Special Day Ofcourse For two Reasons! 
One
Sachin nominated as MP, Member of Parliament by the GOI. Neither a rejoicing Nor a remorse moment. Didn't really feel like enjoying or celebrating the occassion. Didn't write any wish on his poster today! No mystery! I didn't feel like. But if it makes you Happy, OK for me too Sachin! My only worry is that your game rather Play should not become a Prey for Politics. All the Best Sachin! Take Care. Do well!

Two

Satish Chakravarthy's Leelai (Sorry Mr. Andrew! Habitually the sentence comes like that!) got released atlast. Good to see your name on the poster Mr. Satish. The feel good kinda voice n song just came in for a moment n disappeared. I don't expect much from the movie. But feel like, for God's sake, the forecoming days watching the videos of the much relished Songs should also be relishable and not testing my patience. Have to wait n watch the review and accolades (will be) for the music score. All the Best Mr. Satish n Leelai Team.

Tuesday, April 24, 2012

For the Kid, who made me Crazy!!!



For the Boy, for whom I had really fallen for!!!


For the Lad, who taught me taste the torment of Love for the First Time in Life!!!Infatuation!?!Naa!!!

For the only Man, who broke my so called image of Chee! Me Becoming a Mad Fan for Somebody! No way!


For Sachin! One n Only Sachin! 

Happy Birthday Da!!!!!


இன்னொரு ஜென்மத்தின் அவசியத்தை
இன்னும் உணர்த்திக் கொண்டிருக்கும்
இரு குட்டி தேவதைகளின்
தந்தைக்கு……..


என் இந்தியாவின் இளவரசனுக்கு

இன்று என் இதயம் முழுவதும்……
Happy Birthday Sachin!!!!!
Happy Birthday Da!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!Many Happy Returns of the day!!!

Tuesday, April 17, 2012


Absurd! The News should be surely absurd! It can never happen in my School. Whatever has been depicted n dramatized In the case of Mount Saint Joseph Matric. Hr.Sec School, My School should be pure politics and nothing else. All cowards behind this will have to answer for this one day or another. It can never happen in a School headed graciously proudly and sincerely by Sr. Jothi once. All Mt-ians hold together. Keep your Fingers crossed. The Truth will Triumph. I LOVE MY SCHOOL.

Thursday, April 12, 2012

ரெளத்திரம் பழகென்று சொன்னாயே பாரதி! என் கோபம் நியாயமானதாய் இருப்பினும், நிறையவே என் நாளைக் காவு வாங்குகிறது. மேனி கொதிக்கிறது. தலை சுற்றியே வேதனை செய்கிறது! மூச்சுக் காற்று கொதிக்க சுற்றிச் சுழன்று மேலெழும் என் ரெளத்திரம் சரியானதே பாரதி! அநீதிகள் கண்டு சீறிவரும் என் ரெளத்திரம் சரியானதே. நான் நம்புகிறேன். ஆனால் என் கோபக் கனல் பரவும் பாவமான எதிராளி என் குடும்பமும், வாடிக்கையாளர்களும் என்பதே பரிதாபத்துக்குரியது. இருவரும் என் மீது மட்டற்ற மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும், அளவில்லா அன்பும் வைத்திருப்பவர்கள். இவர்கள் மீது பாயும் என் கோபம் நியாயமற்றது. ஏதாவது செய்ய வேண்டும், என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், குறைக்கவாவது. என்னுடன் இரு பாரதி!

Wednesday, April 11, 2012

யாருக்கும் வெட்கம் இல்லை!


எங்கே ஓடிக் கொண்டிருக்கிறோம் எனத் தெரியவில்லை. இலக்கில்லாததொரு ஓட்டம். நான் சொல்வது எண்களாலான வாராந்திர, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் , வருடாந்திர இலக்கல்ல! இந்த விடியலுக்கான, இன்றைய தினத்திற்கான, இன்றைய உயிர்த்திருப்புக்கான உலகத்திற்கான நம் இலக்கு. எந்த இலக்கு அடையப்பட்டதோ இல்லையோ, ஒவ்வொரு ஆலய வாசலிலும், ஒவ்வொரு தொடர்வண்டி கடக்கும் ரயில்வே கேட்டிலும், ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தாண்டி விற்பனை பிய்த்துக் கொண்டிருக்கிறது ஒரே ஒரு அரசு நிறுவனத்தில். கல்வித்துறையா? கலால்வரித் துறையா? கட்டுமானத் துறையா? என்றால் அனைத்துக்கும் ஒரே பதில் “இல்லை” என்பதுதான்.

அந்த ஒரு நிறுவனம்,…………………………… மக்களுக்காக மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு, தம் குடிமக்களுக்காக நடத்தும் “மதுக் கடை”. இந்த வெட்கங்கெட்ட ஈனச்செயலுக்கு பட்டுக் குஞ்சம் வைப்பது போல் அருகில் அரசு அனுமதி பெற்ற பார் வேறு. இது பாருக்குள்ளே நல்ல நாடா? BARக்குள்ளே நல்ல நாடா? அனுமதிக்கப்பட்ட பாரில் அகில உலக அரசியல் பேசும் அனுபவசாலிகளுக்கே வெளிச்சம். அப்பா அம்மாவிடம் பெற்ற புத்தகம் வாங்கும் காசை அசிங்கமான ஒரு கடை வாசலில், அசிங்கமான ஒரு கூட்டத்தின் நடுவில், அசிங்கமான வெட்கங்கெட்ட முகத்துடன் கை நீட்டி வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனங்களில் பறக்கும் மாணவர்களைப் பார்க்கையில் அடிவயிற்றில் நாளைய பாரதத்தைப் பற்றிய பயம் உருள்கிறது. எட்டு அல்லது ஒன்பதாவது படிக்கும் ஒரு பள்ளி மாணவன் தொடர்வண்டி நிலையத்தில் போதையில் தள்ளாடி நிற்கையில் பகீர் என்கிறது.

ஒரு அயர்ந்த நாளின் முடிவில் இரவு 9.45 மணிக்கு பேருந்து நிலையத்தில் இறங்குகையில், என்னைக் கடந்து ஓடிய ஒரு கூட்டம் பார்த்து சற்று அதிர்ந்து நின்றேன். அவர்கள் சென்றடைந்த இடம், பாதி க்ஷட்டர் இறங்கிய நிலையில் மூடப்பட்டுக் கொண்டிருக்கும் TASMAC மதுக்கடை. சார்! சார்! என உள்ளே நீளும் கைகள். இவர்களுக்கு இன்று நாளை என்றெல்லாம் ஏதேனும் இருக்குமா! உள்ளுக்குள் அதிர்ச்சி அலைகள். சற்று கடந்தால் கழிவறைச் சுவர் அருகே கழிவோடு கழிவாக மற்றும் ஒரு குடிமகன்.
நான் யாரை நோக்கிக் கை காட்ட முடியும். குடிமகனை நோக்கியா? குடிக்க ஊற்றிக் கொடுக்கும் அரசை நோக்கியா?
ஒரு வீதி முடிவதற்குள் இரு மருங்கிலும் குறைந்தது மூவிரண்டு ஆறு கடைகளையாவது குறிக்கோளற்ற குடிகாரர்களுக்காகவே அரசு திறந்து வைத்திருக்கிறது. விற்பனை செய்து கொண்டிருப்பவர்கள் MSc, MPhil, MA, MBA படித்த பட்டதாரிகள். அரசு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறதா? வேறு வாய்ப்பு ஏற்படுத்தித் தந்திருக்கிறதா? எனத் தெரியவில்லை. சற்று பலவீனமானவர்களுக்கு இந்த வேலை கிடைத்திருக்கும் குடும்பங்களைப் பார்க்கிறேன். வேலைக்கும் பயனில்லாமல் வீட்டுக்கும் பயனில்லாமல் சீரழிந்து நிற்கிறது ஓர் இளைஞர் சமுதாயம். யாரைச் சொல்லி நோவது?

இன்றைய சமுதாயம் நேற்றைய உலகத்தால் தவறென உணரப்பட்ட சிலவற்றை எல்லோரும் கொண்டாட வேண்டிய கலாசாரமாகவே மாற்றி விட்டிருக்கிறது. அவற்றில் போதையும் மதுப் பழக்கமும் கொண்டாட்டத்தின் அங்கமாகவே மாறிவிட்டன. புரையோடிக் கொண்டிருக்கும் என் சமூகம் சீரழிவதை வேதனையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில் அறிவுரைகள் அர்த்தமற்றவைகளாக கருதப்படுவதும் இன்று கலாசாரமாகி விட்டது. எங்கே செல்லும் இந்தப் பாதை?
மனம் நிறைஆதங்கத்துடன்….

Tuesday, April 10, 2012

Shame on us!!


நம் தாய் வயதில் இருக்கும் ஒரு பெண்மணிக்கு இருக்கை தரக் கூட மனமில்லாமல் இது GENTS SEAT என்று சொல்லும் அளவிற்கா நாம் இருக்கிறோம்? இதையா நம் கல்வி முறை கற்றுக் கொடுத்தது? இதையா நாம் பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் பறைசாற்றிக் கொள்கிறோம்? SHAME ON US?!! எங்கே செல்லும் இந்தப் பாதை?

Monday, April 9, 2012

Thursday, April 5, 2012

Good Morning!!!!!!!!!!!!!!!!!!!!


என்னோடு விழித்திருக்கும்
இரவுடன் நான், நிலா
மற்றும்………
பேய் பிசாசு
வருகிற வேளையில்
வேலை வெட்டி இல்லாமல்
வேறு யார்!?!
நான் மட்டும்தான்!
GOOD NIGHT!

Monday, April 2, 2012


என் பனிமனம் கரையும்
தனல்கனம் ஒவ்வொன்றிலும்
பூரித்துச் சிரிக்கிறாய் நீ
புயல் மழையாகவோ!
அனல் வெயிலாகவோ!
கைக்குடை கொண்டு
ஒதுங்கிக் கொள்ளப் பார்க்கிறேன்.
காற்றாய்க் கவர்ந்து போகிறாய்
என் ஒற்றைக் கைக்குட்டைக் குடையை
உன் குத்தீட்டிச் சொற்களாலோ!
குண்டூசி மெளனத்தாலோ!

தூரத்தில் தெரியும் மேகத்தைத் துரத்தும் பறவை போல்………..CLASSIC TOUCH!
Its always a nice feeling to listen to Good Songs with Good Music n Good Lyrics as well. Thanks Sathish. Thanks Leelai team.