Thursday, April 12, 2012

ரெளத்திரம் பழகென்று சொன்னாயே பாரதி! என் கோபம் நியாயமானதாய் இருப்பினும், நிறையவே என் நாளைக் காவு வாங்குகிறது. மேனி கொதிக்கிறது. தலை சுற்றியே வேதனை செய்கிறது! மூச்சுக் காற்று கொதிக்க சுற்றிச் சுழன்று மேலெழும் என் ரெளத்திரம் சரியானதே பாரதி! அநீதிகள் கண்டு சீறிவரும் என் ரெளத்திரம் சரியானதே. நான் நம்புகிறேன். ஆனால் என் கோபக் கனல் பரவும் பாவமான எதிராளி என் குடும்பமும், வாடிக்கையாளர்களும் என்பதே பரிதாபத்துக்குரியது. இருவரும் என் மீது மட்டற்ற மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும், அளவில்லா அன்பும் வைத்திருப்பவர்கள். இவர்கள் மீது பாயும் என் கோபம் நியாயமற்றது. ஏதாவது செய்ய வேண்டும், என் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், குறைக்கவாவது. என்னுடன் இரு பாரதி!

No comments:

Post a Comment