Sunday, February 14, 2016

பொய்யெனத் தெரிந்திருந்தும்
புதைந்து போகிறேன்
உன் நேசத்தோடு!
என் பொக்கிக்ஷமே!
புன்னகையே!
பெரும்பொருளே!

பூக்களோடும் புல்லாங்குழலோடும்
புயலாய் புரட்டிப்போடும்
உன் கண்களோடும்
போரிட முடியவில்லை
என்னால்!

நீச்சல் தெரியாமல்
நீருக்குள் மூழ்கி
நீளும் அலைகளில்
தத்தளித்து தரைதட்டி
தவியாய் தவித்து
கரை சேரும்
கனல் கனங்களை
அனுதினமும் எனக்கு
ஏன் தந்தாய் நீ?
என்று உனை
கேட்கும் விதம்
நானறியேன்!

பிரித்தெடுக்க முடியாத
பிரியங்களை என்னுள்
பிசைந்து வைத்துவிட்டு
பிரிந்தொளிந்து விளையாடும்
வெண்ணெய் திருடா!
இதில்
எண்ணெய் ஊற்றி
சமைக்கவா?
என்னை ஊற்றி
சமைக்கவா?

உனக்கன்றி
வேறு எவர்க்குச் சொல்ல?
LOVE LOTS!!!!

HAPPY VALENTINE’S DAY!
தை 1
மார்கழி போய்
தை பிறந்தது!
மதிவதனா!
மாதர் தம்
மார்கழி நோன்பு
முடியவில்லை காண்!
ஆவினத்தின் குரல்
அறிவாய்!
ஆலய மணி
ஒலி அறிவாய்!
ஆண்டாள் அழைக்கும்
குரல் மட்டும்
ஆதி அரங்கனின்
செவி புகுதில்லை!
உறங்க நேரமில்லை!
உடன் வாடா!
உலகாளும் பரமா!
உடன் எழுந்து வாடா!
என் பாவை 30
மார்கழி 29
குளிர் மார்கழியே!
குழலூதும் வான்பிறையே!
மலர் தேனே!
மறையுறையும் அரும்பொருளே!
வெண்ணெய் வழிய வழிய
வெண்பொங்கல் மணக்கிறது!
விளையாட்டு போதுமடா!
விழிகளால் விளக்கேற்ற வா!

வழியெங்கும் பார்த்திருக்கிறேன்!
விழி விரியக் காத்திருக்கிறேன்!
சுழலாடும் படகாய்
சுற்றிச் சுற்றி
உனைத் தேடுகிறேன்!
நான் நீயாகி
நாட்கள் பல கடந்து விட்டன!
நீ நானே என்பதை
நீ உணரும்
நேரம் எது?
நீ வரும் வரத்துக்காய்
தீயில் தவமிருக்கின்றன
என் கண்கள்!
எழுந்திருச்சு வாடா!
என் கண்ணா!
எழுஞ்சி வா!
என் பாவை 29


மார்கழி 28
மார்கழி கழியுது காண்
மணிவண்ணா!
மாக்கள் பால் சொரியுது
காண்!
சேற்றுச் செந்தாமரையும்
செவ்வன பூத்தது காண்!
செங்கமலக் கண்ணா!
கூற்றிதை கேளடா!
குளிரானாய்!
பனியானாய்!
குளிர் தந்த
காய்ச்சலும்
நீயே ஆனாய்!
காந்தும் காய்ச்சலின்
மருந்தை உன்
கண்களில் ஒளித்துக் கொண்டால்
காய்ந்து போவேன்
என நினைத்தாயோ!!
கண் திறந்து
உன் கண்களைத்
தேடிப் பார்!
அவை
என்னிடம் சேர்ந்து
எத்தனை
நாட்களாகின என்பது
உனக்குத் தெரியும்!
நாடகம் போதுமடா!
நண்பா!
கண் முழிச்சிக்கோ!
எழுஞ்சுக்கோடா!
கண்ணா!
எழுஞ்சுக்கோ!
என் பாவை 28


மார்கழி 27
நீராய் பிறவி எடுத்தே
நின் தாகம்
தீர்க்க முயல்கிறேன்!
என்
தீரா தாகம் கொண்ட
திரை கடலே!
காற்றாய் பிறவி எடுத்தே
உன் மூச்சில்
கலந்து கரைய முயல்கிறேன்!
என்
மாறா சுவாசத்தின்
மறை பொருளே!
தீயாய் பிறவி எடுத்தே
உன் குளிர் இரவில்
இதம் சேர்க்க முயல்கிறேன்!
என்
தீராக்காதலின்
திறவுகோலே!
எத்தனை பிறவி எடுத்தும்
பித்தம் தெளிந்தேனில்லை!
என்
கோரா வரங்களின்
அருந்தவமே!
மொத்தமாய் உனில் தொலைய
சித்தம் கொண்டேனடா!
முத்துக் கண் திறந்து
முகம் பார்த்து
ஒரு வரம் கொடு!
கண் திறடா!
கண்ணா!
முழுச்சிக்கோ!
என் பாவை 27


மார்கழி 26
எழுதிய கவிதைகளை
என்ன செய்வதெனத் தெரியாமல்
எடுத்து வைத்திருக்கிறேன்
என் கண்ணா
உனக்கான வெண்ணெயாய்்
உருகிக் கொண்டிருக்கும்
உள்ளத்துள்!
இன்னும்
எழுதாத கவிதைகள்
ஏராளமடா!
எல்லாவற்றையும் உன்
கண்களுக்குள் ஒளித்து
வைத்துக் கொண்டு
எங்கேயடி என்றால்
நான் என்ன
செய்வதாம்?
கண்ணாமூச்சி ஏனடா?
கண் முழிச்சுக்கோ!
என் பாவை 26
Sila neram thaayaagi;
Sila neram saeyaagi;
Sila neram neeyaagi;
Sila neram naanaagi;
Nee naanaagi;
Naan neeyaagi;
Yaavumaagi
Yaathumaagi
Engum niraintha
En paramporule!
En arumporule!
Ezhuntharulvaaye!
Muzhuchikkoda Kanna!
Ithu Margazhi 25.
En paavai 25

Margazhi 25
Margazhi 24, 
En veetu vaasalil irunthu! 
Ezhunchikko da Kanna, 
poosani poovum, vaasanai dosaiyum ready a irukku!
En vaanam,
En bhoomi,
En nadhi,
En kadal,
En udai
Engengum virinthu
Paranthu nirainthirukkum
Un neelathai
Bathiramaai en kangalil
Eduthu selgiren.
Pesaatha vaarthaigalukkellaam
Serthu unakku
Enna vendum ena
Enni vai.
Vanthu vattiyudan
Thirupi tharugiren.
Good day Kanna!
Muzhichukko!


Margazhi 23


மார்கழி 21
உன் எச்சில் அமுதையும்
என் உயிரெனக் கொள்வேனடா!
என் பிச்சிப் பூவே!
பச்சை வெயிலே!
உச்சிமலைக் குயிலே!
மிச்சம் வைக்காமல்
உன் அன்பை
மொத்தமாகக் கொடு!
சத்தமிடாமல்
முத்தங்களை மட்டும்
தவணைகளில் கொடு!
இப்போதைக்கு
கண்ணைத் திறடா!
என்
செல்லத் திருடா!!!
கண்ணை முழிச்சிக்கோ!
என் பாவை # 21

En ganatha mounangalai
Un perunthanmaiyaal aasirvathikkaathe!
Athu melum en valiyai koottukirathu!
Eppozhuthum pol
Ippozhuthum sabithu vittu po!
Enakku athuvum
Santhoshame!
Ippothaikku
Ezhunchiko!


Margazhi 21