Sunday, February 4, 2018


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீயாம்!
பற்றி எரியாதா என்ன?
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என ஈசனையே எதிர்கொண்ட சங்கத் தமிழ் வளர்த்த மதுரையாயிற்றே! பற்றி எரியாதா என்ன?
யானோ அரசன், யானே கள்வன் என குற்றம் செய்த கோமகனைக் கேள்வி கேட்டு, ஒற்றை சாபத்தில் மாநகரையே எரித்த கண்ணகி வாழ்ந்த மதுரை ஆயிற்றே!
பற்றி எரியாதா என்ன?

தமிழ்த்தாய்க்கு மரியாதை தர மறுத்தது மட்டுமல்லாது, அது எங்கள் மரபு கிடையாது என்று மார்தட்டி பறைசாற்றும் மடாதிபதிகளின் முன் மண்டியிட்டு கிடப்பீர்கள் எனில், திரிபுரம் எரித்தவள் ஆட்சி செய்யும் மதுரை பற்றி எரிந்து தன் கோபத்தைக் காட்டாதிருந்திருந்தால் தான் வியப்பு!
பற்றி எரியத்தானே செய்யும்!

தமிழ்நாடு இல்லம் என்ற பெயரில் கை வைத்த உடனே நெற்றிக்கண் திறந்து பற்றி எரிந்தது பாருங்கள் மதுரை! ஹைலைட்டே அதுதான்.

ஆகமம் பேசும் ஆதீனங்களுக்கும், பிஜேபி அட்ராசிட்டி வகையறாக்களுக்கும்  நாம் சொல்லிப் புரிய வைக்க முடியாதென, எரிந்து எச்சரிக்கை விடுத்திருக்கிறது தமிழ் வளர்த்த மதுரை!
அது பாரதி சொன்ன தமிழின் அக்னிக்குஞ்சு!
நீங்கள் பொந்தில் வைத்து தமிழ் இருந்த இடத்தை இல்லாமல் ஆக்கக் கூட நினைக்கலாம் தான்.

ஆனால்,

ஹா!!!, தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தமிழ்!
அதுதான் தமிழ்!

ஆகம விதி மீறலால் மதுரை எரியவில்லையடா மூடர்களே!

தமிழுக்கு ஒரு இழுக்கெனில், தமிழ் மண்ணிற்கு ஒரு களங்கமெனில், தமிழ் நாட்டிற்கு ஒரு கேடு விளைவிக்க யாரேனும் ஒருவர் நினைத்தால் கூட, என்ன நிகழும் என மதுரை கோடிட்டுக் காட்டி எச்சரித்திருக்கிறது.
அவ்வளவுதான்!

யுகம் யுகமாக மதுரை எரிந்தது நெற்றிக்கண்ணாலோ, கண்ணகியின் கண்ணீராலோ அல்ல! சத்தியம் தவறாத தமிழின் வலிமையால்!!!

தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்!!!!

#தமிழ்டா