ஊரெல்லாம் ஓய்வெடுக்க
ஓராயிரம்
ஊஞ்சல் செய்தோம்- எம்
பிள்ளைக்கு வாய்த்திருப்பதோ
எம்
சேலை ஏனை மட்டும்!
வானமே கூரையாய்
வழியெல்லாம் வாசலாய்
மரத்தடியே வீடானாலும்
மறந்தும் பிச்சை கொள்ளோம்!!
கையில் உழைப்பிருக்கு
கண் நிறைய கனவிருக்கு
காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்
காலம் கைகூடும் என!
எமக்கும் ஒரு நாள்
வாழ்க்கை வசப்படும்!
No comments:
Post a Comment