Tuesday, February 11, 2014

உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவனை
உணர்ந்து ஓங்காரத்தைத் தழுவும் நாளும்
யுவனுக்கு வெகு தொலைவில் இல்லை!

தாயை விட்டு முதல் முறையாகப் பிரிந்து கல்லூரிக்குக் கற்கச் செல்பவன், திருவிழாவில் தொலைந்த பதற்ற மனநிலையில், பற்று கோலின்றி, தோழியிடமோ காதலியிடமோ தாயைத் தேடி ஒட்டிக் கொள்வது போலத்தான் இதுவும். ஒன்றரை வருட காலமாக இஸ்லாம் மார்க்கத்தை நோக்கி தன் மனம் திரும்பியிருப்பதாகக் கூறும் யுவன், இதையும் வெகு விரைவில் புரிந்து கொள்வார். தொடர்ச்சியான கனவுகளுக்கும் குழப்ப மனநிலைக்கும் காரணம் பிறிதொரு மார்க்கத்தின் மீதான தேடலல்ல; திருமதி. ஜீவாவின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாத, இதைச் சரியாகப் பகிர்ந்து கொள்ள முடியாத சிறு பிள்ளையின் தேடலே என்பதை வெகு விரையில் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் யுவன். இசை உங்களை மீட்டெடுக்கும்;  இசையின் இறைவன் உங்களை ஆசிர்வதிப்பார். 

பாதை ரொம்பப் நீண்டது;
பயணம் சிறியது;
யாத்திரை ஓயாதது;
நாம் செல்லும் முடிவைப் பொறுத்தது.
தூரம் காட்டும் விளக்கொளி
காட்டிச் செல்லும் நம்வழி;
நாளைக் காலைப் பொழுது காட்டும்
நமக்கும் நல்வழி......................!

இதுவும் கடந்து போகும்!
பயணங்கள் முடிவதில்லை!


No comments:

Post a Comment