இன்று காஞ்சியில் வீர வணக்க நாள். ஒரு புறம் முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் அ முதல் ன வரை திமுகவினர். மறு புறம் முன்னாள் முதல்வர் மற்றும் இந்நாள் நிதி அமைச்சர் O.பன்னீர்செல்வம் மற்றும் அம்மா திமுகவினர். மொழிப் போர் தியாகிகள் மீது என்ன ஒரு பற்று திடீரென்று! அதிலும் மாண்புமிகு கலைஞர் கருணாநிதிக்கு, மனுநீதிச் சோழன் என்று அடை மொழி வேறு.
மானமற்ற அரசியல்வாதிகளே! எந்த நீதியை நிலை நாட்ட தங்கள் பிள்ளைகளைத் தேர்க் காலில் இட்டீர்கள்! தில்லிக்கும் திகாருக்குமாக போராடி கனிமொழியைத் தற்காலிகமாக மீட்டெடுத்த மொழிப்போர் தியாகிக்கான விழாவோ! ஆந்திராவுக்கும், கர்நாடகத்திற்கும், கேரளாவிற்கும் இடையிலான தண்ணீர் பிரச்சனையை தாய்மொழிப் பிரச்சனையாக்கிய தியாகிகளுக்கான விழாவோ!
மொழியை, மொழி பேசும் தமிழினத்தைக் கொல்லக் கொடி பிடித்து விட்டு, இந்த அவல நாடகம் எதற்கையா? மொழி பேச முதலில் மனித இனம் வேண்டும். தமிழ் பேசிய, தமிழனாகப் பிறந்த, வளர்ந்த, வாழ்ந்த ஒரே காரணத்தால், எல்லோரையும் சிங்களக் கொடுங்கோலனிடம் காவு கொடுத்து விட்டு மொழிப்போர் தியாகிகளுக்கான வீர வணக்க நாள் கொண்டாடும் இந்த கபட நாடகம் எதற்கையா! கரை வேட்டியைக் கண்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. நெஞ்சு பொறுக்குதில்லையே! இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்!
வாழ்க ஜனநாயகம். மன்னிக்கவும். வாழ்க குடியரசு. வாழ்க மக்களாட்சி. குடியரசு தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment