Tuesday, December 11, 2012



கல்வி யென்னும் வலிமை கொண்ட
கோட்டை கட்டினான்-நல்ல
கருத்தினா லதனைச் சூழ்ந்தொர்
அகழி வெட்டினான்.
சொல்விளக்க மென்ற தனிடைக்
கோயி லாக்கினான்.
சுதந்திர மென்றதன்மேற்
கொடியைத் தூக்கினான்.

துன்பமென்னும் கடலைக் கடக்குந்
தோணி யவன் பெயர்.
சோர்வென்னும் பேயை யோட்டுஞ்
சூழ்ச்சியவன் பெயர்.
அன்பெனுந்தேன் ஊறித் ததும்பும்
புதுமலர் அவன்பேர்
ஆண்மையென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறி யவன்பேர்.
அவன் பெயர் பாரதி.

மகாகவிக்கு மகோன்னதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

1 comment:

  1. பின்குறிப்பு: இது பாரதியாரால் எழுதப்பட்டது. ஆனால் பாரதிக்காக அல்ல.

    ReplyDelete