Saturday, June 23, 2012

ஹலோ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!


ஹலோ! எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!

(1)           செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்லும் பொருளாக இருக்கலாம். அதற்காக, அடிக்கும் போனை எடுத்த உடனே, ஹலோ! எப்படி இருக்க (அ) இருக்கீங்கன்னு கேட்கிறதை விட்டுட்டு, அது என்ன சின்ன புள்ளத்தனமா, எப்போ போனை எடுத்தாலும், ஹலோ! எங்க இருக்க(அ) இருக்கீங்கன்னு கேட்கறது? எப்போ எங்க கத்துக்கிட்டீங்க இதையெல்லாம்? படா பேஜாராப் போச்சுப்பா? ட்ரிங். ட்ரிங்.. ஹலோ! சொல்லுடா! எங்க இருக்க? அட!
(2)           போன் எதற்கு? பேசறதுக்குத் தானே! PHONE. PHONETICS. எல்லாம் உச்சரிப்பதை, பேசுவதைத்தானே குறிக்கின்றன. சரி. உங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி, SMS(PAGER?), email, browsing(அட COMPUTER இருக்கே!) எல்லாத்தையும் சேர்த்துக்கிட்டீங்க. தனித்தனியா எல்லாத்தையும் வச்சுக்கிட்டு, இத்தனூன்டு செல்போனுக்கு எதுக்குய்யா Rs 40000/- only. 100 ரூபாயிலே ஒரு நாள் குடும்பம் நடத்துறவன், ஒரு வருக்ஷம் உட்கார்ந்து சாப்பிடலாம் போல இருக்கே?
(3)           தினம் பத்து மணிக்கு வீட்டுக்கு போன். ஐந்து நிமிடம் ஆர்டினரி கால். பதினைந்து நிமிடம் ஆலோசனை கால். அதற்கு மேல் என்ன பேசறதுன்னு தெரியல. ஆனால்…ராத்திரி முடிய, பொழுது விடிய, பகல் முடியன்னு பேசிக்கிட்டே இருக்காங்களே! அப்படி என்னதாம்பா பேசுவாங்க? இந்த ம், ஹாங், ம்ஹீம். மறுபடியும் ம்ம் மிற்கு மேலே நமக்கு ஒன்னுமே கேட்க மாட்டேங்குது. என்னமோ போங்க? செல்போன் கம்பெனிகாரனும், காது டாக்டரும் நல்லா இருந்தாச் சரிதான்.
(4)           பஸ்ல என் முன் சீட்டில், தனியாப் பேசிச் சிரிச்சுக்கிட்டிருந்த ஒரு பொண்ணு திடீர்னு அழ ஆரம்பிச்சது. பயந்து போய், அடப்பாவமே! இந்த வயசில் இப்படி புத்தி பேதலிச்சு, என்ன கொடுமை? யோசிச்சிக்கிட்டிருக்கும்போதே, கொஞ்ச நேரத்துல மறுபடியும் சிரிச்சது. CONFIRMED. என் ஊர் வந்து இறங்கினப்போ தான் தெரிந்தது, காதுலே கார்ட்லெஸ். என்ன கொடுமைப்பா இது?
(5)           அது என்னவோ தெரியல? போகிற ஒவ்வொரு பஸ்ஸிலும், இருக்கிற அத்தனை மூலைகளிலும், பாட்டை அலற விடுற பொது நலம் மிக்க பசங்களோட செல்போன் ம்யூசிக் கலெக்க்ஷனில், முக்கால்வாசி பேருக்கு,  “ எட்டு மடிப்புச் சேலை, இடுப்பில் சுற்றிப் பட்ட ஒரு சோலை.  பட்டம் கொடுத்தது எனக்கு, இன்று பாதியில் நிக்குதே வழக்கு’ ங்கிற பாட்டு பயங்கரமா பிடிச்சிருக்கு. அது ஏன் என்று யாராவது சொல்றீங்களா ப்ளீஸ்! அது என்ன படங்க?
(6)           எல்லாம் சரிதான். செல்லில் பாட்டு கேட்கிறீங்க? உங்க இக்ஷ்டம். அது என்ன, மாரியம்மன் கோயில் திருவிழா மாதிரி, ஊருக்கே செட் போட்ட மாதிரி ஒரு சவுண்ட் ஸ்பீக்கர். அதில், எவன்டி உன்ன பெத்தான்? வேறு! வாழ்க சுதந்திரம்.
இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் ப்ளீஸ்! ஒரு SMS/e mail/ அட பதில் சொல்லுங்கப்பா!

No comments:

Post a Comment