கேட்டதில் பிடித்தது.
கேளடி கண்மணி திரைப்படத்தில்
இடம்பெறும் “நீ பாதி; நான் பாதி கண்ணே!” என்ற பாடல் சக்கரவாகம் என்ற ராகத்தின் அடிப்படையில்
அமைந்தது. இதே ராகத்தில் உருவான மற்றுமொரு பிரபலமான பாடல், கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற
“ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது” என்ற பாடல். அத்தனை உருக்கமான, கடும் சோகமான
ஒரு பாடல் வந்த ராகத்தில் ஒரு ரொமான்டிக் காதல் மெலடியை எப்படி நினைத்துப் பார்க்க
முடியும்? நினைத்தது மட்டுமல்லாமல், உருவாக்கி அதை வெற்றிபெறவும் செய்திருக்கிறார்
இசை ஞானி இளையராஜா. எவ்வளவு அற்புதமான விக்ஷயம்? இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி
என்னவென்றால், எந்த ஒரு செயலும், நிகழ்வும், கருத்தும் நாம் அணுகும் முறையில் தான்
இருக்கின்றது. எதையும் ஏன் முடியாது என பாசிடிவாக யோசித்து, CHALLENGE ஆக எடுத்துக்
கொள்ளும் மிகப் பெரிய, அரிய, பின்பற்ற வேண்டிய சிறந்த குணம் இருப்பதால் தான், இளையராஜா
அவர்களால், இந்த ராகத்தில், இப்படியொரு பாடலைத் தர முடிந்தது. எனவே எந்த ஒரு செயலும்
நாம் அணுகும் முறையில் தான் இருக்கிறது. இந்தப் பாடலை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள்.
இந்த நல்ல கருத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.
THIS IS MR. BALAJI
@ HELLO THAMIZHA @ HELLO FM.
GREAT THOUGHT.
THANKS FOR SHARING MR. BALAJI.
இந்த சிந்தனையை நான்
செவிமடுத்தது, கர்ணன் படம் வெளிவந்து 48 வருடங்கள் கழித்து, அதன் டிஜிட்டல் மறு பதிப்பு
வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆண்டில், வெளி வந்து 22 ஆண்டுகளுக்குப்
பின் கேளடி கண்மணி திரைப்படத்தின் “ நீ பாதி; நான் பாதி கண்ணே!” பாடலை இன்று தான் வெளிவந்த
ஒரு மிகச் சிறந்த மெலடியைப் போல், நான் மெய்மறந்து
ரசித்துக் கொண்டிருக்கும் 17.08.2012 காலையில்.
அருமையான காலை. அருமையான பாடல். அருமையான சிந்தனை. இதை நாமும் பின்பற்றலாமே!!
No comments:
Post a Comment