முழு மாத்திரையையும்
சாப்பிட்டால்
மூன்று நாள் தூங்க வேண்டியிருக்குமே!
பாதியாக்குகையில் தூளாகிய
மாத்திரையை
பார்க்கையிலேயே கசப்பு
தட்ட,
வாய் நிறைய நீருடன்
கண்கள் மூடி விழுங்குகையில்,
நாவில் பட்டு விலகும்
கசப்பை விரட்டி விட்டு
நினைவிற்கு வருகின்றன,
ஆயம்மா கை பாலாடையும்
அம்மா மருந்து மறைத்து
ஊட்டிய வாழைப் பழமும்!!
இம்முறை குமட்டவில்லை!!!
பால் வாசனை பிடிக்காதவளுக்கு
பாலாடை சார்ந்த நினைவு
மருந்து மாத்திரை சார்ந்ததாக
மாறிப் போனதில் வியப்பேதுமில்லை!
பாலாடையுடன் நினைவிற்கு
வரும்
பாசமான மனிதர்களின் முகங்களுடன்
பசுமையாக நினைவில் எழுகின்றன
என் மாத்திரைகள் புதைபட்ட
செடி கொடிகளும்
அவற்றைத் தாங்கிய தொட்டிகளும்;
இருவாட்சி, பத்ராட்சி,
திருநீற்றுப்பத்திரி,
மயிற்கொன்றையுடன்
மலர்ந்திருந்த மழலை நாட்களும்!!!
குழல் இனிது.
யாழ் இனிது.
மழலை இனிது.
வளர்த்த மாதர்தம்
மாண்பு இனிது.
சொன்ன குறள் இனிது.
செய்த தமிழ் இனிது.
செயர்க்கரிய உயிர் இனிது.
No comments:
Post a Comment