2013 முடிய இன்னும் சில
நிமிடங்கள் மிச்சம் இருந்த ஒரு நொடியில் நட்ட நடு சாலையில் பழுது பட்ட பேருந்து ஒன்றில்
அமர்ந்தவாறு இதை எழுத ஆரம்பித்தேன். கடந்து போன சிறு நகரம் ஒன்றின் புத்தாண்டு இரவின்
பாட்டுக் கச்சேரியிலிருந்து “ பூங்காற்று திரும்புமா” பாடல் கசிந்து கொண்டிருடந்தது.
பஸ் ப்ரேக் ட்ரெளன் ஆனாலும், கைபேசியில் இந்த நேரத்தில் உற்சாகமாக கதையளக்க எப்படித்தான்
சிலருக்கு வாய்க்கிறதோ? சாலைகளில் புத்தாண்டு வாழ்த்துக்கல் எழுதும் இளைஞர்கள், வண்ண
விளக்குகள் ஒளிரும் தேவாலயங்கள், வர்ண ஜாலங்களாய் கோலங்கள் நிறைந்த வாசல்கள் என வழியெங்கும்
உற்சாகம். வினோதமான உணர்வுகளின் கலவையில் வாழ்க்கையை நிறைய நிறைய கற்றுக் கொடுத்த
2013 முடியும் வேளையை நான் ஆவலுடனே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். ஆ! பேருந்து
சரி செய்யப்பட்டு விட்டது. நான் வீடு சென்றடைய இன்னும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்
இருக்கிறது. வழியில் திருவண்ணாமலையில் அண்ணாமலையைப் பார்த்தவாறு இந்த புத்தாண்டை தொடங்குவேன்
என நினைத்தேன். இதோ வழியில், ஒரு பயணத்தின் தொடர்ச்சியாக புத்தாண்டை தொடங்குகிறேன்.
நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!
வா! புத்தாண்டே! எங்கள்
வாழ்க்கையை புதுப்பிக்க, புத்துணர்வூட்ட, பூப்பூக்க வைக்க வா புத்தாண்டே!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள்!
பயணங்கள் முடிவதில்லை!!!!
LOVE YOU ALL! WISHING YOU ALL A HAPPY AND PROSPEROUS NEW YEAR!
LOVE KANCHANA…,
No comments:
Post a Comment