Thursday, September 8, 2011

Geethai


காக்கைகளும்
கண்ணாடிக் கூடுகளும்
மனிதப் பறவைகளும்
உறக்கக் குகைக்குள்-
ஏதோ புதையல்
தேடும் அவசரத்தில்!

நிறம் மாறும்
மேகங்களுடன் விழித்திருக்கின்றன
என்னுடன்
சில வின்மீன்களும்.

என் தலைக்கு மேல்
கடந்து செல்லும்
ஒவ்வொரு விமானத்திலும்
விழித்திருக்கிறான்
ஒரு விமானி
உறங்கும் பயணிகளுடன்!

யார் சொன்னது,
சூரியன் தோன்றுவது
பகலில் என்று?

சூரிய விமானி
மறந்தும் உறங்குவதில்லை!
உறங்கப் போனால்
உலகம் நமக்கில்லை!

கண்ணன் சொன்னதுதான்
நானும் சொல்கிறேன்.
கடமையைச் செய்-
பலனை எதிர்பாராதே!
உலகால்
நீ வாழவில்லை!
உன்னால் உருவாக்க முடியும்
இன்னொரு உலகம்!.

No comments:

Post a Comment