Friday, September 2, 2011

Naanum Iravum

இன்றைய இரவின் அழகு
தன்னிகரில்லாமல் மிளிர்கிறது,
ஆண்டாண்டு கால வெப்பத்திலும்
கருக்காத தன் காஞ்சன புன்னகையுடன்!

மின்னும் வின்மீன்கள்
சிதறிய வைரங்களாய்
இன்னும் நிலாவுடன்
கண்ணாமூச்சி விளையாட்டில்;
காலம் காலமாக
கண்டுபிடிக்க முடியாத
குளிர் இரவின் இரகசியங்களை
இன்றைய விளையாட்டின்
இறுதிக் கட்டத்திலேனும்
கண்டுபிடித்துவிடும் கங்கணத்துடன்.

ஒவ்வொரு இரவுப் பொழுதிலும்
எனக்கான காத்திருப்பின் முடிவில்
தன் வாழ்க்கையின்
தலைசிறந்த பாடலை
இசைத்துக் கொண்டிருக்கும்
என் சன்னல்
பிரதேசக் குயில்
எனக்கு மட்டுமே
புரிந்த மொழியில்
கூறிச் செல்வது
புதிய விடியலின்
புரியாத அதிசயத்தை…..


No comments:

Post a Comment