Thursday, August 18, 2011

கண்ணுக்குள் முள்ளை வைத்து
யார் தைத்தது!
தண்ணீரில் நிற்கும் போதே
வேர்க்கின்றது,

என்னைப் பிரமிக்க வைத்த திரைப்படப் பாடல் வரிகளில்,
இது நிறையவே பாதித்த கற்பனை. வாவ்! வைரமுத்து இந்த அர்த்தத்தில் தான் எழுதினாரா என்று தெரியவில்லை,

நீ இல்லாமல் நான் அழுதுகொண்டிருக்கிறேன் என்பதை, உன்னைப் பாராமல் என் கண்ணில் விழும் எல்லாம் முள்ளாகத் தான் குத்துகின்றன என்பதை, தண்ணீரில் மிதக்கும் கண்களைக் கூட, நீயற்ற தனிமையில் நான் அழும் கண்ணீரினால் உப்புக் கரிக்கும் தண்ணீரில் நிற்கின்றது என்பதை, வலியை உப்புக் கரிக்கும் வியர்வையாய் பதிவு செய்திருக்கும் கவிஞனுக்கு என் வணக்கங்கள்.

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது.
-நன்றி கவிப்பேரரசு வைரமுத்து.

பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
-நன்றி மகாகவி பாரதி (-யார்- வேண்டாம், எனக்கு நீர் பாரதி மட்டுமே).
உறங்கப் போகிறேன். இனிய இரவு எல்லோருக்கும் உரித்தாகட்டும்.



No comments:

Post a Comment