நிறைய இறைச்சல் அலை தொடங்கி, வலை முழுவதும். பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு கருத்து, ஏதும் உருப்படியாக இல்லாவிட்டாலும். யாருக்கும் படிப்பதற்கோ சிந்திப்பதற்கோ நேரம் இருப்பதாய் தெரியவில்லை. ஆனாலும் எதையோ சொல்லி விடும் அவசரத்தில், ஏதோ ஒன்றைப் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நக்கல் நிறைந்த, என்னைத் தவிர எல்லாம் மோசம் என்கிற சமூகத்தைச் சாடிக் கொண்டே இருக்கிற அர்த்தமில்லா வெறும் பேச்சு. தளர்ந்து போகிறேன் நான். இது சரிதானா….நண்பர்களே! பேச்சு முக்கியம் இல்லை. சமூகம் பற்றிய அக்கறையின்றி இலக்கியம், வரலாறு, அரசியல், புவியியல் பற்றிய அறிவும் இன்றி அர்த்தம் இல்லாத இந்த வெறுங்கூச்சல் என்னை அயர்வுற வைக்கிறது. உங்களைச் சுற்றி என்ன நடக்கிறதென்று அறிவைத் திறந்து பாருங்கள், கண்களை மட்டும் அல்ல, அறிவைத் திறந்து. நிறைய படியுங்கள். கொஞ்சம் சிந்தியுங்கள். சரியெனப் பட்டால் செயல்படுங்கள். பின் பேசலாம், அலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும், வலைப் பக்கங்களிலும். நட்புடன் நான் காஞ்சனா.
No comments:
Post a Comment