எத்தனை ஜனனம் தந்தும்
சற்றும் இளமை குன்றாத
பூமியின் மடியில் பிறந்த
அத்தனை மாந்தரைப் போலும் நான்.
அர்த்தமில்லாத பணத்திற்காகவும்
மின்னி மறையும் பொன்னிற்காகவும்
அலைந்து திரிந்து அயர்ந்த
என் நாளின் முடிவில்
தளர்ந்து மண்மேல் விழுகிறது
தனிமரமாய் என் உடல்,
பொன் மண்ணெல்லாம் தவிர்த்து
கண்ணுக்குப் புலப்படாத திருப்தியை
இன்னும் அண்ட வெளியில்
தேடிக் கொண்டிருக்கும் மனதுடன்!ஒவ்வொரு இரவுப் பொழுதிலும்
எனக்கான காத்திருப்பின் முடிவில்
தன் வாழ்க்கையின்
தலைசிறந்த பாடலை
இசைத்துக் கொண்டிருக்கும்
என் சன்னல்
பிரதேசக் குயில்
எனக்கு மட்டுமே
புரிந்த மொழியில்
கூறிச் செல்வது
புதிய விடியலின்
புரியாத அதிசயத்தை…..
No comments:
Post a Comment