ஓராண்டு ஓடி விட்டது, நிழல் கண்ணாடி நிஜ உலகில் காலடி எடுத்து வைத்து. இத்தனை நாட்களும், என் எண்ணங்களை, உணர்வுகளை வர்ணம் பூசாத வானவில்லாக, வாசனைப் பூக்களாக, என் நாட்குறிப்பேட்டைப் போல் இயல்பாகத்தான் எழுதி இருக்கிறேன் என நம்புகிறேன். என் நிழலாகவும், என் மனதின் கண்ணாடியாகவும் எப்பொழுதும் உண்மையான என் உணர்வுகளாகவும் தான் இருந்திருக்கிறது கண்ணாடி. பூனாவின் ரிசர்வ் வங்கி வளாகத்தில், ஓரிரவில், நான் எழுதத் தொடங்குகையில் இருந்த மகிழ்ச்சியை, பெரும்பாலான சமயங்களில், கண்ணாடி எனக்கு வழங்கி இருக்கிறது. அதற்கும் மேல், நான் நானாக இருந்த நொடிகளின் பிரதிபலிப்பாய், ஒரு ஆத்மார்த்தமான நண்பனாய் என் மனசாட்சியாய் இருந்திருக்கிறது கண்ணாடி எனபதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.. கண்ணாடியின் சாரம் குன்றாமல், தனியே கிளைத்து மலர்ந்திருக்கின்றன, இன்னும் இரு பதிவுகள். எப்பொழுதும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் இசைக்காக ஒன்று. உலகத்தை இயக்கும் விசைக்காக மற்றொன்று. ALL ABOUT THE SWEET NOTHINGS WHICH RULE EVERYTHING IN THIS WORLD; THE INVISIBLE BUT INVINCIBLE, HIGHLY INFLAMMABLE N COMBUSTIBLE BUT INEVITABLE O2, THE UNIVERSE BREATH IN TO LIVE. எது எப்படியாயினும் வேடமிடாத வெளிச்சமாக என் வலைப்பதிவு தொடரவேண்டும் என்பதே என் ஆசை, கனவு, ஆவல் எல்லாம். கனவு மெய்ப்படும். இன்னும் எழுதுவேன்,.. நான் காஞ்சனா..
கண்ணாடி தொடர்ந்து ஒளிர வாழ்த்துகள் !!!
ReplyDelete